புகழினி

June26, 2009

மலையாழத்தியுடன் 3 வருடங்கள்.

Filed under: மலையாளி — pukalini @ 01:14

நண்பனின் கதை.

மணி 11 ஆகி இருக்கும், கட்டிலில் குப்புறப் படுத்து பாதி சாமத்தைத் தாண்டி இருப்பேன். எனது அறை வாசிகள் எல்லோருமே துடிச்சுப் பதைத்து எழுப்பினார்கள். என்னடா கண்றாவி  எண்டு கேட்டால், பக்கத்து விடுதியில் இருக்கும் மலையாள துண்டுக்கு  காலையில் பிறந்த நாளாம். நான் அண்ணன் ஏதாவது செய்ய வேண்டுமாம்.  அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை. போதாதற்கு அந்தப் பெண் வெறு எனது வகுப்புவாசி. சரி ஏதாவது செய்து தொலையுங்கடா என்று சொன்னது தான் தாமதம். ஆளாளுக்கு ஒரு திட்டம் போட்டாங்கள். கடைசியில் ஒரு மட்டையைக் கொடுத்து விடலாம் என்று முடிவானது. அதுவும் யாரோ ஒருத்தன் தனது நண்பனுக்கு கொடுக்க இருந்தது. பெயரும் எழுதியாச்சுது. அப்புறமா குழப்பம் ஆரம்பமாச்சுது. யாருக்கு பிறந்த நாள் என்று. எனக்குத் தெரிந்து என்னுடன் இரண்டு மலையாளத் துண்டுகள் படிக்கின்றன. யாருக்கு என்ன பெயர் என்று இன்னமும் தெரியாது. இருவருக்கும் இரு சொல்லில் ஒரே மாதிரியான பெயர்கள். ஒன்று குண்டு. அடுத்தது ஒல்லி. அப்படித் தான் நாங்கள் அடையாளம் காண்பது.  நாங்கள் குண்டுப் பெண்ணுக்கே பெயரெழுதி விட்டோம். அப்புறமா அது ஒல்லிக்கு என்று தெரிந்து பெயரை மாற்றி அது தெரியாமல் இருக்க ரோசாப் பூவும்  கீறி கொடுத்து விட்டாச்சு. அங்கிருந்து நன்றியும், ஒரு சாப்பாட்டுத் தட்டில் கேக் துண்டும் வந்தது. அது எனக்கு மட்டும் தானாம். அப்புறம், இங்கிருந்து ஒரு அப்பிள் பழமும் கழுவிய தட்டுடன் பரிமாறியது.

அப்பாடா தொடங்கியது சனியன். அதுக்கப்புறமும் நான் அந்த ஒல்லிப் பிச்சானுடன் பேசியது இல்லை. ஆனால், அடங்கி வைத்து வெடிப்பது போல செய்தி மறு வளத்தால் சுழன்று அடித்தது. எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் காதலாம். அன்றைய  தினம் நாங்கள் இருவரும்  இரவு; நடுச் சாமம் தாண்டியும் பெண்கள் விடுதித் துவாரத்துக்குள்ளால் காதல் தூது அனுப்புக் கொண்டிந்தோமாம். நல்லது. அப்படியே இருக்கட்டும் என்று விட்டாச்சு. அதுக்கப்புறம் தான் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன. அவளை மடக்க திட்டம் போட்டவர்கள் எல்லோரும் எனக்குப் பயந்தோ இல்லை உறுதிப் படுத்தியோ விலகி விட்டார்கள். அவளுக்கும் கொஞ்சம் ஆறுதலானது. பாதி மலையாளிப் பசங்களுக்கு வார இறுதி நாட்களில்  வீடு போகும்  நேரங்களில் பயணத்தில் சூடு தேய்க்க பெண்டுகள் வேண்டும். அதிலும் படிக்கிற பெண்ணாக இருந்தால் வசதியாகாவும், நன்றாகவும் இருக்கும் என்பதற்காகவே  காதலிக்கிறமாதிரி ஒரு காபந்து பண்ணுவார்கள்.

இதற்கிடையில் எங்களுக்கான தனி விடுதியில்  தங்கி இருந்த இருவருக்கு மஞ்சள் காமாலை வந்து சேர்ந்தது. அதே நேரம் அவளுக்கும் காய்ச்சல் அடித்து. பாவம் வகுப்பிலேயே சோர்ந்து போனாள். எனக்கு ஏதோ சந்தேகம் பட அவளுக்கு எடுத்துச் சொல்லி  வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். அவளுக்கும் அதே  வருத்தம் வந்து தொலைத்தது.  நானும் ஏதோ அக்க்றையில் உடம்புக்கு என்னாச்சு என்று அடிக்கடி பக்கத்துப் பெண்ணைக் கேட்க, அவளும் இவன் ஏதோ கரிசனை முற்றித் தான் கேட்கிறான் என்று இல்லாத ஒன்றை ஊதிப் பெருக்க எல்லோருக்கும் இருவரும் சோடியாம் என்று பத்திரிக்கை அடித்தாகி விட்டது. அடக் கருமத்தே அவளுடன்  இரண்டு வார்த்தைகள் சேர்ந்தாப்ப பேசி இருக்க மாட்டனே? அதுக்குள்ள இப்படியா? அதிலும் இந்த மலையாளிகளுக்கு மூக்கில் வியர்த்தால் ஆள் காலி. இப்படித் தான் ஒரு மலையாளம் பெண் வேறு ஒருவருடன் கொஞ்ச நேரம் சேர்ந்தாப்ப பேசினதுக்கு உனக்கு பாண்டிக் குன்னா கேட்குதாடி என்று  அடிக்காத குறையாய் திட்டுனவர்கள். இப்படி ஒரு விடயம் இருப்பது தெரிய வந்தால் என்ன நடக்கும். ஆரம்பித்தது பூசைகள்.

சும்மாவே என்னைப் பார்க்கிறவர்கள் பயப் படுவார்கள்.அப்படியான ஒரு கவர்ச்சியான உருவமைப்பு. ஊரில் இருக்கும் எவனையும் விட்டு வைக்காமல் சிநேகம் பிடித்து வைத்திருக்கன். சாப்பாடு போடுற ஆயாவிலிருந்து, கல்லூரி முதல்வர் வரைக்கும் பழக்கம். சொல்லும் சொல் சந்தை ஏறும். போதாதற்கு மலையாளக் கூட்டம் ஒன்றையும் பழக்கம் பிடித்து வைத்திருந்தேன்.  ஆக மொத்தம் என்னுடன் நேரடி மோதலுக்கு கொஞ்சம் பயந்தார்கள்.  உள்ளிருந்து போட்டுத் தள்ள ஆரம்பித்தார்கள். எப்பொழுதாவது அக்கா கடைக்கு தம் அடிக்கப் போய் ஒரு மலையாளத்தான் அகப்பட்டால் போதும் அப்படியே பாச மழை பொழிய தொடங்கிடுவார்கள். நானும் குடை இருந்தும் நனைய வேண்டியது தான். உனக்குத் தெரியுமா அவளுக்கு உள்ளூரில ஒரு நண்பன் இருக்கான். அவனைத் தான் கலியாணம் கட்டப் போறாள். அதுக்கென்னடா எனக்கு என்ன வந்தது? அவள் யாரைக் காதலிச்சா என்ன? எவன் கூடப் போனால் என்ன? எனக்கு என்ன குடும்பமா முழுகிப் போயிரும்? எனக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம்? அவள் யாரு நான் யாரு? மிஞ்சிப் போனால் 30 அளவிலையாவது உள் சட்டை போடுறவளாயிருக்கிறாளா?.

கடைசியாய் ஒரு அம்பு. எப்படித் தான் ஒரு பெண்ணை பற்றி இப்படிக் கேவலமாக  கதை கட்ட முடியுதோ? இடையில், தமிழ் நாட்டுக்கு படிக்க வரும் மலையாளத்திகளுக்கு உள்ளூரில மதிப்புக் கிடையாதாம். எனக்கும் நிறையத் தெரியும். போனாப் போகுது. ஆண்களுக்கு மட்டும் கம்பி நீளும் போது பெண்களுக்கு கசியக் கூடாதா? ஒரு  நாள் பஞ்சாபி தாபாவில் என் செலவிலேயே எம்சி அடிச்சுப் போட்டு ஒருத்தன் கக்கத் தொடங்கினான். சேட்டா, அந்தப் பொண்ணுக்கு கலியாணமாயிருச்சு. புருசன் அவுட்டென்று நினைக்கிறன். இல்லாட்டி விட்டுட்டு போயிருக்கலாம்.குழந்தையும் இருக்கலாமாம்.  அடப்பாவி. அடிச்சது முழுக்க  மூக்கால் காத்து மாதிரி வெளியே போயிற்றுதே.

அன்றிலிருந்து எனக்கும் கொஞ்சம் காதால்  சுடர்விடத் தொடங்கியது.(கண்டிப்பாகக் காதல் இல்லை. வெறும் பச்சாதாபம்.) பாவம் பொண்ணு நிறையவே அடி பட்டிருக்குது. அதனால் தான் சாப்பாடு தண்ணி இல்லாமல் இருந்து மெலிந்து போயிட்டுது.குழந்தை வேறு இருக்காமே? மறுமணம் செய்வதில் என்ன தப்பு. இவளோடு கூட வாழ்வதில் கண்டிப்பாக ஒரு அர்த்தம் கிடைக்கும்.  காதலிக்கும் போதே அப்பாவாகி விடுவேன். கலியாணாத்துக்கு முன்னரே ஊருக்கும் போய் குழந்தையுடன் ஒட்ட வேண்டும். அப்பொழுது தான் பெரியாளானாதும் சொந்த அப்பா மாதிரியான ஒட்டல் தெரியும். எனக்கு ஒரு குழந்தையே போதும். இரண்டுடனும் சந்தோசமாக இருக்கலாம். பாவம் அளு வேறு சரியான் நோஞ்சான். இரண்டுக்கு மேல தாங்கவும் முடியாது. வாழ்க்கை என்றால் இப்படித் தான் இருக்கணும். யாருக்கா நாம் வாழ்கின்றோமோ அது பெறுமதிமிக்கதாக இருக்க வேண்டும்.

ஆக மொத்தம் எனக்குள் ஒரு நல்லவன் மாதிரி ஒருத்தன் உருவாகினான். அவளைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவளுக்கு உதவுவதாக எண்ணி, அவளை மிகவும் கீழ்த்தரமாக சிந்திக்கத் தலைப்பட்டேன். எனக்கு எவருமே இந்த உரிமையைத் தரவில்லை.  நானாக எடுக்கவுமில்லை. வித்தியாசமான உணர்வுகளின் போராட்டங்கள்.

அடுத்த மின்னஞ்சலில் வருவது பின்னால்……….

Advertisements

4 Comments »

 1. =

  Comment by karthik — June26, 2009 @ 04:44

 2. //ஆண்களுக்கு மட்டும் கம்பி நீளும் போது பெண்களுக்கு கசியக் கூடாதா?//
  காத்து, தண்ணி மாதிரி காமமும் எல்லார்க்கும் பொதுதானே! நீங்கள் transgressive எழுத்து விரும்பியா?

  Comment by ஜெகநாதன். க — June26, 2009 @ 08:33

 3. இப்பொழுது தான் அர்த்தம் பார்த்தேன். இருக்கலாம். ஒரு வகை மனோ வியாதியாகக் கூட இருக்கலாம். என் டாக்டர் பொண்டாட்டியும் அடிக்கடி இதைத் தான் சொல்லுறா. அவவும் இதுகளைப் படிப்பது கிடையாது.ஏதோ ஒரு கோபம். அடங்கினாச் சரி. எனக்கு எந்த அருகதையும், தகுதியோ, உரிமையோ கிடையாது. எவருக்கும் எடுத்துச் சொல்ல. இப்படியாவது ஒரு வடிகால் ஏற்பட்டால் சரி.

  Comment by pukalini — June26, 2009 @ 20:41

 4. இயல்பான எழுத்து நடை….மற்றபடி நீங்கள் சொல்வதேல்லாம் மிகச்சரி….இன,மொழி உணர்வில் கன்னட நாட்டு மக்களை விஞ்சி விடுவார்கள் மலையாளிகள்…..உள்ளிருந்தே போட்டு தள்ளும் வித்தையை அவர்களிடமே கற்றுக்கொள்ள வேண்டும்..!

  Comment by lemurya — July5, 2009 @ 02:07


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: