புகழினி

May8, 2009

விகடன் – பதிவர்களின் இலக்கா?

Filed under: சமுகம் — pukalini @ 18:27

அண்மைக்காலங்களில் பதிவுகளில் வரும் அதிகமான தலைப்புக்கள்.

1.ஈழத் தமிழர் பிரச்சினை.2.இந்தியத்  தேர்தல்.3.விகடனில் எனது பதிவு.

பெரும்பாலான பதிவர்களின் பதிவுகள் வார இதழேறுவது மகிழ்ச்சி. வாசிப்பாளராக இருந்தவர்கள், படைப்பாளிகளாகி விட்டனர். மெத்தச் சந்தோசம். அவர்களின் திறமைகளுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம். அவற்றினை சகமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறார்கள். இரட்டிப்பு சந்தோசம்.

இனி, எனது குறை மூளையில் உதித்த சில சிந்தனை முத்துக்கள்.

உலகம் உருண்டையானது. சுற்றிச் சுற்றி ஒரே இடத்துக்குத் தான் வர வேண்டும். அறப் பழைய பழமொழி. எல்லோரும் ஏன் ஒரே மாதிரி தட்டையாகவே யோசிக்க வேண்டும். வரைபில் தட்டை வளர்ச்ச்சி கிடையாதே? குத்தெனெ மேலெழும்பி ஒளியை விட பல்லாயிரம் மடங்கு வேகத்தில் செக்கனுக்கு பயணித்தாலும் கண்ணுக்கு முன் அண்டம் பிரமாண்டமாய் விரிந்து கொண்டு செல்லுமே? பின்னர் ஏன் குண்டுச் சட்டிக்குள் குமிழி  உருட்ட வேண்டும். விகடன் மட்டுமே குறிக்கோளா? ஆக்கத்தின் உச்சியா?  உங்களது எண்ணங்களுக்கும், கற்பனைகளுக்கும், எழுத்துக்களுக்கும் அளவு கோலா?

அப்படியாயின் புக்கர் பரிசு ஒருத்தருக்குமே வேண்டாமா? வெல்லப் படமுடியாத,  அடைய முடியாத அல்லது தெரியாத விடயமா?

அடுத்தது, தினமும்  நூற்றுக் கணக்கில் பதிவுகளை வாசித்து வரும் எனக்கு ஒரு நாள் கூட விகடன் பக்கம் போக மனசு வந்ததில்லை. இவர்கள் சொல்லும் பதிவுகளை பெரும் பாலும் நான் படித்தே இருக்க மாட்டேன். என்னுடைய தேடல்கள் வேறுபட்டவையா? அப்படியாயின் விகடனின் தெரிவு முறை என்ன? வெறும் கவிதை, சிறுகதை, குட்டிக் கதைகள் மட்டும் தானா? எத்தனையோ அலசல்கள், புதினங்கள், விவாதங்கள் நிகழ்கின்றனவே அவை ஏன் அச்சேறக் கூடாது? ஏறியும் எனக்குத் தெரியவில்லையா?


விகடன் வார இதழா? அதற்கு என்ன வரைவிலக்கணம்? ஏற்கனவே ஒருத்தர் சுட்டியது போல் பாதிப்பக்கங்கள் சினிமாவுக்கும், பேட்டிகளுக்கும். ஆண்மைக் குறைவு-சொட்டைத் தலை விளம்பரங்களையும் விலக்கிப் பார்த்தால் மிஞ்சுவது  என்ன?

ஆக மொத்தம் அப்படியே ஜனரஞ்சமாக இருக்க வேண்டும். வித்தியாசமானவைகள் மக்களுக்குத் தேவையில்லை.  அவர்களை அடையத் தேவையில்லை. வெறும் அஜால்,குஜால் மாற்றர்கள் மட்டுமே கொடுக்கிற காசுக்கு போதுமா? வித்தியாசம் என்று வாராவாரம் சினிமாப் போஸ்டர்களை மாற்றி மாற்றிப் போட்டால் சரியா? மக்கள் எப்போதும் போல வீணி வழிய வாசித்தால் போதுமா? எத்தனை பேருக்கு பதிவுகள் என்று ஒன்று இருக்கு, தமிழிலேயே எழுதலாம், வித்தியாசமான ஒரு சமுகப் புரட்சி அங்கே நிகழ்கின்றது,பக்கச் சார்பான செய்திகளை உடைத் தெறிய ஏற்கனவே களமமைத்து விட்டாகி விட்டது என்பது தெரியும்.

அல்லது திறமையானவர்களை கட்டிப் போடும் முயற்சியா? தங்களுடனேயே இருக்க.

எத்தனையே நிறைய ஆக்கங்கள் பலரால், பலவிதமாக படைக்கப் பட்டு மக்களை அடைய வேண்டியவைகள் எல்லாம் வெறுமனே கணினிகளில் மட்டுமே பிரசுரமாவது வருத்தமாக இல்லையா?

உதாரணத்துக்கு பொருளியல் தகவல்கள். யார், யார் எப்படி எழுதுவார்கள் என்று எனக்கே தெரியும். அவர்களின் கட்டுரைகள் நாணயத்தில் வந்திருக்கா? எனக்கு தெரியவில்லை. ஏன்? அங்கு எழுதுபவர்கள்  கும்மி அடிப்பார்களா? மோட்டார் விகடன்?

அப்புறம், நான் விகடன் அன் கோ படித்து ஆண்டுகளாகி விட்டது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் நண்பர்களின் கழிப்பறையை நாடும் போது கண்டிப்பாக ஒரு புத்தம் சொருகி இருக்கும். அது இந்த மாதிரியான  வார இதழ்கள் தான். ஒட்டு மொத்தமாக இவை படிக்க வேண்டிய இடம் அது தானா?


ஏதோ இதையாவது போடுறாங்களே என்று திருப்திப் படலாம் தான். ஆனால் தமிழின் நம்1 வார இதழ் என்று ஏன் போடுறாங்கள் என்பது மட்டும் புரியவில்லை. இந்த புரட்சிக்காரங்கள் நடாத்தும் நக்கீரன் போன்றவைகள் ஏன் பதிவர்களைக் கண்டு கொள்ளக் கூடாது? மீசை இல்லாதவங்கள கண்டுக்க மாட்டாங்களோ?


அப்பாடா தலைப்பிலேயே என்ர புத்தியைக் காட்டின சந்தோசம்.

1.விகடனைக் குறி வைத்துத் தாக்கும் பதிவர்கள். என்னை மாதிரி.

2.விகடனில் பிரசுரமாவதை குறியாகக் கொண்டோர்.

Advertisements

7 Comments »

 1. நியாயமான சிந்திக்கத்தக்க பதிவு!

  ஆறறிவுடைய மக்களில் பலவிதம் – இவர்கள் ஒரு வழியல் செல்கிறார்கள் – நீங்கள் இன்னொரு வழி! நான் இன்னொரு வழி!

  பொறுத்திருந்து பார்ப்போம்! வரட்டுமா!

  Comment by Thanga. mukunthan — May8, 2009 @ 18:54

 2. காரணம் அங்கிகாரம் வேண்டும் என்கிற எண்ணம். வலையில் கூட நாம் பார்க்கிறோமே. வலையில் எதையாவது எழுதிவிட்டு சாருவுக்கும், ஜெயமோகனுக்கும் அனுப்பி படித்துப் பார்க்கச் சொல்வதும் அது பிடிக்காத பட்சத்தில் சாரு நாலு துப்பு துப்பு அனுப்புவதும். முன்னோடிகளாளோ அல்லது பலராலும் தாம் கவனிக்கப்பட வேண்டும் எனும் சிந்தனை தான் காரணம்.

  Comment by VIKNESHWARAN — May8, 2009 @ 20:44

 3. //
  தினமும் நூற்றுக் கணக்கில் பதிவுகளை வாசித்து வரும் எனக்கு ஒரு நாள் கூட விகடன் பக்கம் போக மனசு வந்ததில்லை. இவர்கள் சொல்லும் பதிவுகளை பெரும் பாலும் நான் படித்தே இருக்க மாட்டேன். என்னுடைய தேடல்கள் வேறுபட்டவையா?
  //

  நானும் தான்.

  Comment by velanaivalasu — May8, 2009 @ 21:18

 4. // நக்கீரன் போன்றவைகள் ஏன் பதிவர்களைக் கண்டு கொள்ளக் கூடாது? //

  இதை நாம்தான் மாற்றி கேட்க வேண்டும்.. ஏன் விகடனை போற்றும் நாம் நக்கீரனை கண்டுகொள்ள வில்லையென்று…

  நல்ல பதிவு……இதில் பெரும்பானவற்றில் ஓத்து போகிறேன்

  Comment by கண்ணா — May8, 2009 @ 22:17

 5. யோசிக்க வேண்டிய விஷயம்தான் நண்பரே.

  ‘அகநாழிகை‘
  பொன்.வாசுதேவன்

  Comment by aganazhigai — May15, 2009 @ 21:13

 6. =

  Comment by karthik — June26, 2009 @ 04:46

 7. சிந்திக்கத்தக்க பதிவு……விகடனின் அளவுகோல் வரையறை விட்டுத்தள்ளுங்கள்…..அந்த அளவுகொலுகேற்ற பதிவுகளை பதிவு செய்ய இவர்கள் போராடுவது இவர்களையே ஒரு கூட்டிற்குள் சுருக்கிக் கொள்வது போலவே இருக்கிறது….அல்லது அந்த அளவுகோலை தாண்ட இயலாமையா என்று தெரியவில்லை…..உங்கள் கருத்துக்கு உடன் படுகிறேன்….தீராநதி , உயிர்மெய் என்ற அடுத்த கட்டதிற்கு நாம்தான் இவர்களை முன்னடத்த வேண்டுமோ ஒரு வேளை?!

  Comment by lemurya — July5, 2009 @ 02:46


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: