புகழினி

May1, 2009

நாய்களின் கொலைவெறி

Filed under: சமுகம் — pukalini @ 03:29

ஊரிலேயே நல்ல வசதியான, பணக்காரக் கூட்டம் அது. அவர்களின் சொகுசுக்கு எடுத்துக்காட்டாக ஒரு உயர் சாதி நாயையும் வளார்த்து வந்தனர். அது ஆளுயரத்தில்  பார்ப்பதற்கு  ஆள் மதிரியே இருக்கும். என்ன வித்தியாசம் என்றால் அதன் வால். எப்போதும் சுருண்டிருக்கும்.  வால்ச் சேட்டைகள் செய்யும் போது மட்டும் அது வாலை நிமிர்த்தி, நீட்டி வைத்திருக்கும். ஏதாவது குளறுபடிகள் செய்தால்  வாலைச் சுருட்டி பின்னங்கால்களுக்கிடையில் சொருகிக் கொள்ளும். சொல்ல மறந்திட்டன், அது ஒரு ஆண் நாய்.


குடும்பச் செல்வாக்கு கரணமாக அந்த நாய்க்கு போகுமிடமெல்லாம். சிறப்பு. பயம். வெளியிலே போனால் கண்டிப்பாக சொறி, சுரட்டை பண்ணாமல் வீட்டுக்க வராது. மிஞ்சிப் போனால் வாலாட்டி விட்டு, இரண்டு சத்தம் போட்டு விட்டு  வெற்றிக் களைப்புடன் வீடு திரும்பும். வளமாக யாராவது அகப்பட்டால் கட்டாயம் வாய் வைக்காமல் வீடு திரும்பாது. அப்படி வந்து விட்டாலும் அன்றைக்கு வீடு அல்லோல கல்லோல படும். வீட்டுக்காரள் வந்து அமைதிப் படுத்தும் வரை.

ஊராருக்கு நாயின் வேட்டைப் பொருளாக இருப்பதில் உடன்பாடில்லை. இருந்தாலும் என்ன செய்வது? வசதியான குடும்பம். நாய் வாய் வைக்குது என்று இவர்கள் வாய் வைத்தால் அப்புறம் இவர்களுக்கு வாய்க்கரிசி தான். அந்த வீட்டில் இன்னுமொரு நாயும் இருந்தது. அது அங்கிருந்த  உயர் சாதிப் பெண்  நாய் அந்த  நேரத்து வலி பொறுக்காமல், வீதியில் வரட்டி தின்று கொண்டிருந்த சொறி நாயுடன் பூட்டுப் போட்டு போட்ட குட்டி. வளர்ந்து வருகையிலேயே அது தன் பீக் குணத்தை காட்டியபடியால் போட்டுத் தள்ளி விட்டார்கள்.

இப்பொழுது உள்ள நாயும், அந்தப் பெண் நாய்க்குப் பிறந்த குட்டி தான் என்றாலும், அப்பா நாய் சாதியான நாயான படியால் விட்டு வைத்துக் கொண்டாடினார்கள். அவர்கள் வெளி நாடுகளுக்குப் போனாலும் அதையும் வேறு வெளி நாடுகளுக்கு  அழைத்துச் செல்லுவார்கள். போன இடத்தில் கக்கா போக வேண்டும் என்று அவிழ்த்து விட அது வரும் போது வேற ஒரு நாயுடன் வந்து சேர்ந்தது. அதுவும் கொஞ்சம் கலராக  இருந்த படியாலும் வாங்கக் கொஞ்சம் காசு தேவைப் படும் என்பதாலும் வீதி நாயாயிருந்தும்  பெண்  நாயாயிருந்த படியால் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்து விட்டார்கள்.

நாய்க் குடும்பம் பல்கிப் பெருகியது. ஒரே குட்டிப்  பட்டாளங்கள். இருந்தாலும்  தாய் நாயும், அப்பா நாயும் இன்னமும் அப்படியே மாறாமல் இருந்தார்கள். அது தின்ற பழக்கம் விட்டுப் போகுமா?


இப்பொழுதும் ஊராரில் வாய் வைப்பதும், காலையில் உட்காரப் போனால் பின்னால் வந்து கடிப்பதும் இல்லாவிட்டால் பல்லுப் பதிப்பதுமாக இருந்தது. வெட்கம்,மான்ம், ரோசம், சூடு, சுரணை  கெட்ட மக்களும் திட்டி விட்டு போய் விடுகிறார்கள்.

இப்படித்தான் அது அதைத் தேடி அலைந்த போது அடுத்த  ஊருக்குப் போய் விட்டது.  பழக்க தோசம். வாய் வைத்து விட்டது. அடுத்த ஊர்க்காரர்கள் கொஞ்சம் வித்தியாசம். அந்த  நாயைத் தேடு தேடென்று தேடி நலமடித்து விட்டார்கள். நாயும் வீங்கின பையுடன் கால்களை அரக்கி, அரக்கி நடந்து திரிந்தது. பாவம் அதுக்கப்புறம் அதனால் பூட்டுப் போட முடியவில்லை.

பெண் நாயோ வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றது. பூட்டுப் போடவும் வழியில்லை. என்ன செய்யும். ஊர் நாய்களிடம் போகவும்  மனசு விடவில்லை. இது வேறு கிழடு தட்டி விட்டது. தெரு நாய்களுக்கு  கிழடுகளுடன் பூட்டுப் போட யாரு காசு கொடுக்கிறார்கள்?காமம்,தாபமாகி ,தாகமாகி கொலை வெறிக்கு தூபம் போடுகின்றது. குடும்பத்துடன் வெளியே சென்று அடுத்த ஊர்க்காராள் காலையில் ஒதுங்கும் போது பார்த்திருந்து பாய்கின்றன. பாவப் பட்ட பிறப்புகள் ஒதுங்க வழியில்லாமல் ஊரையே நாறடிக்கிறார்கள். பக்கத்து ஊர்க்கார்களும் பிரச்சினைக்கு காரணமான நாய்களை விட்டு அந்த மக்களை  வைகிறார்கள். எப்படியும் ஒரு  நாளைக்கு அந்த  நாய்களுக்கு ஒரு பாடம் கண்டிப்பாக இருக்குது.

Advertisements

9 Comments »

 1. ம்ம்ம் பலமான அரசியல் தான்….

  Comment by VIKNESHWARAN — May1, 2009 @ 12:30

 2. //எப்படியும் ஒரு நாளைக்கு அந்த நாய்களுக்கு ஒரு பாடம் கண்டிப்பாக இருக்குது.//

  imm kandipaka anntha sorinayakluk apu vundu… athai veda oru periya sorinayee varum poluthu…

  Comment by tamizh saravanan — May2, 2009 @ 07:46

 3. இரண்டாவது முறை வாசித்த பின்னரே முழுவதும் புரிந்தது.

  //போன இடத்தில் கக்கா போக வேண்டும் என்று அவிழ்த்து விட அது வரும் போது வேற ஒரு நாயுடன் வந்து சேர்ந்தது.
  //

  நன்றாயிருக்கிறது.

  Comment by velanaivalasu — May5, 2009 @ 05:48

 4. யோ .. புகழினி … பேர பாத்த ஏதோ பெரிய மனுசன்னு நினைச்ச…

  உன்னுடைய முதல் கேவலமான பின்னுடதுக்கு வேற, மரியாதை குடுத்து உனக்கு வேற மின்னஞ்சல் அனுபிநேனே என்ன அடிக்கணும்யா…

  மரியாதை தெரியாதவன இருக்கே…

  நானும் பாக்குறேன் நி பாட்டுக்கு வந்து…வாய்க்கு வந்த மாதிரி பின்னுடம் போட்டுட்டு இருக்கே.

  பல எடத்துல பாத்துட்டேன் … உன் வாய் ல நல்ல வார்த்தையே வரத்து இல்ல …

  எல்ல எடத்துலயும் வந்து வாய வைக்கிறது தானா உன் வேலை?…
  மூடிட்டு உன் வேலையை மட்டும் பாரு.
  மாற்று கருத்து உள்ளவன் எல்லாம் லுசட…
  கண்ட எடத்துல மிருகம் தான் வாய் வைக்கும்.
  மரியாதை கிறது அவர் அவர் நடத்தைல இருக்கு..
  நான் உன்ன பத்தி எதாவது சொன்னன…
  மரியாதை குடுத்து மரியாதை வாங்க கத்துக்கோ…

  உன்ன வாடா போடா பண்ணாட நு குட நானும் பின்னுடம் போடா முடியும்… உன்ன மாதிரி நானும் சில்லறை இல்ல … உன்னுடிய அறிவு முதிர்ச்சியா பாத்தா கேவலமா இருக்கு ..

  Comment by MS — May6, 2009 @ 05:34

 5. வணக்கம் ஐயா,
  1. நான் பெரிய மனுசன் இல்லை.
  2.எனக்கு மின்னஞ்சல் அனுப்பினீர்களா? எந்த முகவரிக்கு எனக்கு இந்த முகவரியில் இருந்து எதுவும் கிடைக்கவில்லை.
  3. கருத்து சொல்ல எவருக்கும் உரிமை உண்டு.
  4. பிடிக்காவிட்டால் எழுதக் கூடாது.
  5.எனக்கு எவர் மரியாதையும் தேவையில்லை.
  6.என்னை எப்படியும் அழைக்கலாம். வாருங்கள்.
  7.மாற்றுக் கருத்து உள்ளவன் எல்லாம் லூசில்லை. லூசானவன் எல்லாம் கருத்துச் சொல்லக் கிளம்பக் கூடாது.
  8. நான் பின்னூட்டங்கள் போடுவது எழுதுகிறவருக்கு ஆக்கமும், குழப்பமும் உண்டாக்கி நல்லது விளையும் என்று தான். மற்றும் படி அவர் எனக்கு எந்த விதத்திலும் விரோதி கிடையாது.
  9.கண்டிப்பாக என்னுடைய முதிர்ச்சியும், அறிவும் குறைவு தான். ஏனென்றால் என் வயது அப்படி.
  10. நான் எங்கே போகலாம் என்று போவதில்லை. பொதுவாகப் பிரசுரித்தால் கண்டிப்பாக போவேன்.
  11. நான் என்ன கெட்ட வார்த்தைகள் சொல்லியிருக்கின்றேன் என்று சொல்லுங்கள்.
  12. நீங்கள் சில்லறை இல்லை. ஆனால் நான் ஒரு இடத்திலும் இப்படி பினூட்டமோ, கருத்தோ வைத்ததில்லை.
  13. எனது கருத்துக்கள் புரியாவிட்டால் சொல்லுங்கள். தப்பெண்ணங்கள் கூடாது.

  Comment by pukalini — May6, 2009 @ 21:45

 6. வணக்கம் ஐயா,

  1) ஈழத்தில் பெண்களுக்கு நடக்கும் மரபு அல்லாத கொடுமையை, ஒரு பதிவை நான் போட்டு இருந்தேன் பல நாட்களுக்கு முன். அதில் ஒரு நண்பர் கருத்துக்கு நான் கொடுத்த பின்னுட்டம்

  “நேற்று இதை பார்த்த பின்னாடி என்னால ஜிரணிக்கவே முடியுல… உண்மையை சொல்றேன் நான் ராத்திரி பூராவும் தூங்க முடியுலங்க… கண் மூடினா கண் எதிரே வந்து என்னை வதைகிது…. கொடுமை இது யாருக்கும் ஏற்பட கூடாது”.

  மிகவும் வருத்தத்தில் இருந்த என்னக்கு, நீங்கள் கொடுத்த பின்னுட்டம் ” ராத்திரில நமிதாவை நினைச்சிகிட்டு குப்புற படுதுருபிங்க…” .

  இடம், பொருள், ஏவல் இல்லாமல் அந்த இடத்தில ஒரு மனுஷன் நமிதாவை நினைக்க முடியுமா?. என்னால் சகிக்க முடியவில்லை உங்கள் பின்னுட்டத்தை பார்த்து .

  எனக்கு மிக பெரிய வருத்தமா இருந்தது. நான் என்ன மிருகாம?. தாய், சகோதிரி என்ற உறவு எல்லாம் இல்லாமல், காம கண்ணோடு பார்க்க?.

  உடனே உங்கள் பதிவுகளை பாத்தேன். ஒரு மரியாதையை வந்தது உங்கள் மேல். பின்பு ஒரு மின்ன்ஞ்சல் அனுபினேன். பதில் இல்லை. சரி “இவனுக்கெல்லாம் பதில்
  போடனுமா?.” என்று நினைதீர் என அமைதி காத்தேன். மீண்டும் உங்களின் ஒரு ஒரு பின்னுட்டம் “pukalini said… லூசாப்பா நீ?”. இதற்க்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் தான் கூரவேண்டும்.

  //11. நான் என்ன கெட்ட வார்த்தைகள் சொல்லியிருக்கின்றேன் என்று சொல்லுங்கள்.
  12. நீங்கள் சில்லறை இல்லை. ஆனால் நான் ஒரு இடத்திலும் இப்படி பினூட்டமோ, கருத்தோ வைத்ததில்லை.//

  a)முன் பின் தெரியாத ஒருவரை சட்டேன்று “லூசாப்பா நீ?” என்று கேட்பது “கெட்ட வார்த்தை” இல்லையா உங்களை பொறுத்த வரை ?.

  b) ” ராத்திரில நமிதாவை நினைச்சிகிட்டு குப்புற படுதுருபிங்க…” . எனபது சில்லறை தனமான பின்னுட்டம் இல்லையா உங்களுக்கு. கெட்ட வார்த்தை இல்லையா உங்களுக்கு? உங்களுக்கு தவற தெரியலையா?

  //10. நான் எங்கே போகலாம் என்று போவதில்லை. பொதுவாகப் பிரசுரித்தால் கண்டிப்பாக போவேன்.//

  பொதுவான இடத்துக்கு தான் வந்திர்கள். வாருங்கள் மாற்று கருத்துக்கள் பரிமாறி கொள்வோம். ஆக்க பூர்வமாக சிந்திப்போம். எது நல்ல விசயமோ அதை எடுத்து
  கொள்வோம். பொசுக்குனு மற்றவர் மனம் புண்படும்படி பேசாமல் இருப்பது நல்லது. (எனக்கும் சேர்த்து தான்).

  //8. நான் பின்னூட்டங்கள் போடுவது எழுதுகிறவருக்கு ஆக்கமும், குழப்பமும் உண்டாக்கி நல்லது விளையும் என்று தான். மற்றும் படி அவர் எனக்கு எந்த விதத்திலும் விரோதி கிடையாது.//

  உங்கள் நோக்கம் இதுவாக இருந்தால் “வரவேற்கிறேன்”. எனக்கு மட்டும் நீங்கள் என்ன எதிரியா? விரோதியா? நான் தேடுவது எல்லாம் நண்பரை தான்…

  //7.மாற்றுக் கருத்து உள்ளவன் எல்லாம் லூசில்லை. லூசானவன் எல்லாம் கருத்துச் சொல்லக் கிளம்பக் கூடாது.//

  இதுவே ஒரு கருத்து தான். ” லூசாப்பா நீ?” என்பதும் கருத்து தான். உங்களை பொறுத்தவரை இதற்க்கு என்ன பெயரோ?. ” லூசாப்பா நீ?” என்று கருத்து சொல்ல
  கிளம்பினவர் நீங்கள்.

  //5.எனக்கு எவர் மரியாதையும் தேவையில்லை.
  6.என்னை எப்படியும் அழைக்கலாம். வாருங்கள்.//

  அதன் நீங்கள் என்னை லுசு னு முதல அழைசிடிங்கலே…

  //4. பிடிக்காவிட்டால் எழுதக் கூடாது.//

  இதை முதலில் நினைத்திருந்தால் இதற்க்கு அவசியமே இல்லை.

  //13. எனது கருத்துக்கள் புரியாவிட்டால் சொல்லுங்கள். தப்பெண்ணங்கள் கூடாது.//
  உங்கள் பின்னுடத்தின் கருத்துக்களை விளக்குங்கள் …

  Comment by MS — May7, 2009 @ 00:00

 7. இதுவா விடயம்?
  1. நான் முதலாவது எழுதியிருக்க வேண்டும். உண்மை தான். ஆனால் அப்போது எனக்கு இருந்த கோபம், ஆத்திரம் எல்லாம் சேர்ந்து எழுதியிருக்கணும். கண்டிப்பா தனிப்பட்ட கோபம் இல்லை. ஒரு விடயம் நீங்கள் கவனிக்க வேண்டியது, நான் எப்பொழுதும் நேரடியாக எழுதுவதில்லை. அதில் நிறைய அர்த்தங்கள் வரும். கண்டிப்பாக அதை எழுதியதன் நோக்கம் எனக்கு நினைவு தெரிந்து நீங்கள் ஏன் கவலைப் பட வேண்டும். எல்லோரையும் போல் இருக்க வேண்டியது தானே என்று இருக்க வேண்டும்.
  2.தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கே இப்படியானால் அனுபவித்தவர்களுக்கும், அனுபவிப்பவர்களுக்கும் எப்படி இருக்கும்? எப்படி ஒருவனால் அப்படித் திட்ட முடியும்?
  3.இன்னுமொரு விடயம் தனிப்பட்ட விதத்தில் சீண்டப் பட்டு இருந்த வேளையில் இப்படியான பதிவுகளைப் படித்து கடுப்பேறி இருந்த நேரம்.
  நம்ம வேண்டுமென்றால் அந்தப் பின்னூட்டங்கள் வந்த திகதிகளில் தற்ஸ்டமில் பக்கம் போய் கொமென்ஸ் படித்து பாருங்கள் புரியும்.
  4.அடுத்தது லூசாப்பா நீ?
  இப்பொழுதும் நான் உங்களை அப்படிக் கேட்கலாம். அர்த்தம்- என்னடா சின்னப் புள்ளைத் தனமா இருக்கிறீயே என்று வரும். அதாவது நெருங்கிய நண்பர்களுக்கிடையே சொல்லுவது. நாடு கேடு கெட்டுப் போயிருக்கு தேவையில்லாத விடயங்களை மண்டையில போட்டு ஏன் குழப்பணும் என்ற அர்த்தம்.
  5.இப்பொழுது தெரிந்திருக்கும் நீங்கள் வெறுமனே போட்டுக் குழப்பியது.
  6. லூசாப்பா நீ? முன்னப் பின்ன தெரியாத ஒருத்தன் எங்களுக்காக கவலைப் பட்டா திட்ட எனக்கு என்ன லூசா?
  7.ஆனாலும் புதுசா இருக்கணும். அது தான் இப்படு கோபப் பட்டு விட்டீர்கள். எனக்கு எவ்வளவோ மோசமான அனுபவங்கள் எல்லாம் உண்டு.
  8.என்னத்தை எழுதுறம், எப்படி எழுதுறம், ஏன் எழுதுறம், எதுக்கு என்பது முக்கியம் இல்லை. நல்ல கருத்துகள் நாலு பேரிடம் பகிரப் பட வேண்டும். நல்ல நண்பர்கள் உருவாக வேண்டும்.
  10.கருத்து வேறுபாடுகளோ, மோதல்களோ இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக வெறுப்பும், விரோதமும் கூடாது.
  11.எனக்கும் நிறைய எழுதலாம். கவரலாம். ஆனால் நினைப்பது என்னால் எவனாவது சிந்திக்க முயலுகின்றான என்பது தான்.ஏனென்றால் எனக்குப் பிழைப்புக்கு வழி இருக்கு.
  12. காலங்கள் மாறும். இப்பொழுது நிலைமை எப்படி உள்ளது? வரவேற்க்கக் கூடியது தானே?
  13.உங்களது இணைப்பினை அனுப்புங்கள்.
  14. நான் அலுவலகத்தில் இருந்து பதிலளிப்பதால் இங்கேயே அடிக்க வேண்டி உள்ளது. எனது பாதுகாப்புக்காக என்னை மறைக்க.
  15. உங்களது மின்னஞ்சல் எனக்கு வந்த ஞாபகம் இல்லை. இருந்தால் மீண்டும் அனுப்புங்கள்.

  Comment by pukalini — May7, 2009 @ 01:26

 8. //அதில் நிறைய அர்த்தங்கள் வரும்//

  ஐயா இதில் பெரிய சிக்கல் உள்ளது. யாரை சொல்கிறிர்கள் என்று தெரியாமல் நெறைய குழப்பத்தின் விளைவே இது. எனினும், நான் உங்களை பற்றி நினைத்து வேறு உங்கள் உண்மையான எண்ணமும் வேறாக இருக்கிறது.

  //2.தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கே இப்படியானால் அனுபவித்தவர்களுக்கும், அனுபவிப்பவர்களுக்கும் எப்படி இருக்கும்? எப்படி ஒருவனால் அப்படித் திட்ட முடியும்?//

  அப்போ நீர் இலங்கை வாழ் தமிழர? அப்படியா இருந்தால் என்னை எப்படி வேனாலும் திட்டலாம்… அணைத்து உரிமையும் உண்டு உங்களுக்கு.

  //நல்ல கருத்துகள் நாலு பேரிடம் பகிரப் பட வேண்டும். நல்ல நண்பர்கள் உருவாக வேண்டும்.
  10.கருத்து வேறுபாடுகளோ, மோதல்களோ இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக வெறுப்பும், விரோதமும் கூடாது//

  முற்றிலும் உண்மை. ஏற்று கொள்கிறேன்.

  //ஆனால் நினைப்பது என்னால் எவனாவது சிந்திக்க முயலுகின்றான என்பது தான்.//

  இதற்க்காக தான் நானும் இங்கே உலாவுகிறேன்.

  //12. காலங்கள் மாறும். இப்பொழுது நிலைமை எப்படி உள்ளது? வரவேற்க்கக் கூடியது தானே?//

  நிலைமை நன்றாக உள்ளது… வரவேற்கிறேன் அன்புடன்…

  //உங்களது இணைப்பினை அனுப்புங்கள்//
  http://salemsenthil.blogspot.com
  ( Please give your email id as comment. I will reply you. thanks )

  Comment by MS — May7, 2009 @ 03:40

 9. =

  Comment by karthik — June26, 2009 @ 04:58


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: