புகழினி

April22, 2009

பழிக்குப் பழி

Filed under: அலட்டல் — pukalini @ 21:51

நான் நல்லவன் தான்.அதுக்காக ரொம்பவே நல்லவன் கிடையாது. தொட்டவனை விட்டதில்லை,விட்டவனைத் தொட்டதுமில்லை என்று புராணம் படிக்கவோ; சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்; சொல்லாததையும் செய்வோம்,செய்யாததையும் சொல்வோம் என்றெல்லாம் பெருமை பேசவோ முயன்றதில்லை.

நேற்று மாலை, வேலை விட்டு பஸ்ஸில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். எப்பொழுதும் போல மேல் மாடி இருக்கை தான் வசதியாக மாட்டியது. கொஞ்ச நேரம் கழித்து ஒரு குரங்கொன்று பக்கத்தில் வந்து இருந்தது. அது இந்தியச் செங்குரங்கு. உட்கார்ந்து முன் இருக்கைக்கு மேலே காலை முண்டு கொடுத்துக் கொண்டு போனில் படம் பார்த்துக் கொண்டிருந்தது. இறங்கும் இடமும் வந்தது. அந்தக் குரங்கைத் தாண்டிப் போவதற்குள் முன்னுக்கு நின்றிருந்த ஒரு கிழடை மெதுவாக முட்டி விட்டேன். முட்டியது நானும் இல்லை. எனது பை. அதுக்க இருந்தது வெறும் சிகரெட் பெட்டி மட்டுமே. இருந்தாலும் எனது உடைமையான படியாலும், முட்டியதற்கு நானும் ஒரு கருவி என்ற அடிப்படையிலும் அந்தக் கிழட்டின் முகச் சுழிப்புக்கும், உச்சுக் கொட்டலுக்கும் ஆளானேன்.

எனது கிறுக்குப் புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. கிழடு இறங்குவதும் எனது இறக்கம். இறங்கட்டும் பார்க்கலாம் என்று பொறுத்திருந்தேன். பஸ்ஸில தான் படம் எடுத்துக் கொண்டு இருப்பாங்களே? கிழடு முன்னே இறங்க, நானும் பின்னே இறங்கி செருப்பிலே ஒரு மிதி. கிழடு திரும்புவற்குள் நான் கிளம்பி விட்டேன். இங்கு கிழடு என்று குறிப்பிடக் காரணம், கிழடு கிழடாக இல்லாமலிருந்ததும், எதிர்வினை ஆற்றிய விதமும் தான். கண்ணுக்கும், உதட்டுக்கும் பூச்சுப் பூசினாலே இளமை கொழிக்குது என்று தானே அர்த்தம். அதுகளுக்கு என்ன முன்னுரிமை?

இன்னுமொரு தடவை குறுந்தொலைவு தொடருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். காலை வேளை. எப்படியும் குளித்து வாசனைத் திரவியங்கள் எல்லாம் பூசித்தான் கிளம்பி இருந்திருப்பன். பக்கத்தில் நின்றிருந்த ஒரு பெண்மணி ஒதுங்க ஆரம்பித்தது. நானும் முதலில் அதைக் கவனிக்கவில்லை. பின்னர் தான் நோட்டம் விடும் போது புரிந்தது. அடி சண்டாளி, நீ காலையில ஒதுங்கிட்டு கால் அலம்பாம பேப்பரிலேயே முடிச்சிட்டு வாற, அதுக்குள்ள உனக்கு எண்ட கலர் ஒட்டிருமா? விட்டேனா பார் என்று கிட்ட கிட்டவாக நெருங்கி ஏதோ காதலிக்கிற பெண்ணின் வாசத்தைப் பிடிக்கிறவன் மாதிரி மோப்பம் பிடிச்சு ஒரு வாசலில ஏறுன சிறுக்கிய அடுத்த வாசலால இறக்கி விட்டேன். அப்பாடா மனசுக்கு ஒரே சந்தோசம்.

தொடரலாம்….

Advertisements

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: