புகழினி

April4, 2009

விமானத்தில் கை பேசி

Filed under: சமுகம் — pukalini @ 18:57

FCC ஆனது விமானம் ஆகாயத்தில் பறக்கும் போது cellular transmitters
இயக்கத்தில் இருப்பதற்கு தடை செய்துள்ளது.ஆனால் விமானம் தரையில் இருக்கும் போது எந்த விதமான தடையும் இல்லை. இந்தத் தடையானது விமானத்தின் தொலைத்தொடர்புகளுக்கு இடையூறு செய்யும் என்பதற்காக ஏற்படுத்த்ப் பட்டதல்ல. மாறாக தரையில் உள்ள cellular
service களை இடையூறுகளில் இருந்து தவிர்ப்பதற்காகவே ஏற்படுத்தப் பட்டுள்ளன. நமது கைப்பேசிகளினது உயரம் கூடும் போது அதனது rangeம் அதிகரிக்கின்றது. அதனுடன் coverage areaம் அதிகரிக்கின்றது.மிகவும் உயரமான இடத்தில் கைப்பேசி இருக்கும் போது அதனது தரைத் தொடர்புநிலையங்களுடனான முயற்சி பல cellular
base stationகளுடன் இணைப்பில் வருகின்றது. அதாவது ஒரே frequencyயில் இயங்கும் பல தொடர்பு நிலையங்களின் வாயிலாக அது பல base stationகளுடன் இணைப்பதற்கு முயல்கின்றது. .இதனால் பல blocked அல்லது dropped அழைப்புகளுக்கு ஏதுவாக இருக்கின்றது.

விளக்கமாகப் பார்த்தால், நமது கையில் இருக்கும் கைப்பேசி ஆனது ஒவ்வொரு செக்கனுக்கும் பல நூறு தடவைகள் செல் போன் ரவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி தனது இருப்பிடத்தையும், எவ்வளவு தூரத்தில் தான் இருக்கின்றது என்பதனையும் தெரியப் படுத்துகின்றது. இந்த ரவர்கள் கைப்பேசியினது பேஸ் ஸ்ரேசனுடனான இணைப்பை உறுதி படுத்துகின்றது. 

சில வேளைகளில் கைப்பேசி பல ரவர்களின் ரேஞ்சில் வரும். அப்பொழுது அது எந்த ரவரிலிருந்து கூடுதலான சக்தியினை பெறுகின்றதோ அந்த ரவரின் ஊடாக பேஸ் ஸ்ரேசனுடன் தொடர்பில் வரும். இதற்கு ஒவ்வொரு கைப்பேசியும் ரவரும் தனித் தனி அதிர்வெண்களை உபயோகப் படுத்தும். குறிப்பாக அறுகோண வடிவில் ரவரினது ரேஞ்ச் அமைந்திருக்கும். இடையூறுகளை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு ரவரும் வித்தியாசமான அதிர்வெண்களை உபயோகிக்கும்.

ஆனாலும் இந்த அதிர்வெண்கள் ஆறு அறுகோண அமைப்புகளுக்கு அப்பால் மீண்டும் உபயோகத்தில் வரும்.

சரி, 
இனி நாம் விமானத்தில் இருக்கும் போது எமது கைப்பேசி ஆனது பல ரவர்களின் ரேஞ்சில் வரும். அதிலும் குறிப்பாக ஒரே அதிர்வெண்ணில் தொழிற்படும் ஏராளமான ரவர்களுடன் அது தொடர்பு கொண்டு பேஸ் ஸ்ரேசன்களுடன் இணைப்பு பெற முயலும். அப்பொழுது, அதே அதிர்வெண்ணில் நிலத்தில் இருந்து தொடர்பு கொள்ள முயலும் கைப்பேசிகளின் இணைப்புகளைத் துண்டிக்க முயலும்.
எப்படி? நமது கைப்பேசியும் முயல, கீழே உள்ளதும் முயலும். செக்கனுக்கு ஆயிரம் தடவைகள் படி இரண்டும் முயன்றால் ரவர் என்ன செய்யும். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பும். இப்படி பல ரவர்களின் வழி பல பேஸ் ஸ்ரேசன்களை இணைக்க முயன்றால் எப்படி இருக்கும். இது ஒரு கைப்பேசிக்கு. இப்படி ஆயிரமாயிரம் கைப்பேசிகள் ஆயிரக்கணக்கான ரவர்களையும், நூற்றுக் கணக்கான பேஸ் ஸ்ரேசன்களையும் குழப்பினால் என்னதான் நடக்கும். 

அதனாலயே அதை தடை செய்துள்ளார்கள்.
ஆனாலும் அனுமதி பெற்று விமானத்தில் உபயோகிக்க என்று சில அதிர்வெண் வகைகள் உள்ளன. தாராளமாய் உபயோகிக்கலாம். பணம் தான் அதிகம்.

Advertisements

5 Comments »

 1. FCC ஆனது விமானம் ஆகாயத்தில் பறக்கும் போது cellular transmitters
  இயக்கத்தில் இருப்பதற்கு தடை செய்துள்ளது.ஆனால் விமானம் தரையில் இருக்கும் போது எந்த விதமான தடையும் இல்லை. இந்தத் தடையானது விமானத்தின் தொலைத்தொடர்புகளுக்கு இடையூறு செய்யும் என்பதற்காக ஏற்படுத்த்ப் பட்டதல்ல. மாறாக தரையில் உள்ள cellular
  service களை இடையூறுகளில் இருந்து தவிர்ப்பதற்காகவே ஏற்படுத்தப் பட்டுள்ளன. நமது கைப்பேசிகளினது உயரம் கூடும் போது அதனது rangeம் அதிகரிக்கின்றது. அதனுடன் coverage areaம் அதிகரிக்கின்றது.///

  நல்ல தகவல்!!!

  தேவா.

  Comment by thevan — April6, 2009 @ 07:48

 2. ப்படி? நமது கைப்பேசியும் முயல, கீழே உள்ளதும் முயலும். செக்கனுக்கு ஆயிரம் தடவைகள் படி இரண்டும் முயன்றால் ரவர் என்ன செய்யும். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பும். இப்படி பல ரவர்களின் வழி பல பேஸ் ஸ்ரேசன்களை இணைக்க முயன்றால் எப்படி இருக்கும். இது ஒரு கைப்பேசிக்கு. இப்படி ஆயிரமாயிரம் கைப்பேசிகள் ஆயிரக்கணக்கான ரவர்களையும், நூற்றுக் கணக்கான பேஸ் ஸ்ரேசன்களையும் குழப்பினால் என்னதான் நடக்கும்.

  அதனாலயே அதை தடை செய்துள்ளார்கள்.///

  பகிர்வுக்கு நன்றி..

  Comment by thevan — April6, 2009 @ 07:49

 3. உபயகமான பதிவும் , அருமையான பதிவும், 🙂 தொடர்ந்து எழுதுங்கள்

  Comment by suresh — April7, 2009 @ 21:23

 4. நல்ல தகவல் தரும் பதிவு. வாழ்த்துகள் 🙂

  Comment by குகன் — April20, 2009 @ 07:45

 5. நல்ல தகவல்
  than ks

  Comment by Subash — April28, 2009 @ 22:36


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: