புகழினி

April4, 2009

பெரியாரின் பூமியில் சூப்பர் சீன்ஸ்

Filed under: சமுகம் — pukalini @ 07:13


ஈரோடு இரயில் நிலையம். காலை மணி எட்டு. கோவையிலிருந்து சென்னை போக வேண்டிய வண்டி இன்னமும் வந்து சேரவில்லை. சும்மா இருக்க முடியாமல் முன்னும் பின்னும் அலைந்து கொண்டிருந்தேன். அப்போது என் கண்களுக்கு விருந்தாகிய இரண்டு காட்சிகள்.

 1. ஒரு வயதான பெரியவர். அவருக்கு வயது ஒரு அறுபது மதிக்கலாம். கந்தலான உடை உடுத்தி இருந்தார். கையில் ஒரு கூடையுடன் இரயில்வேத் தடத்தைக் கடந்து கொண்டிருந்தார். அந்தக் கூடை குப்பை போடுவதற்கானது. அதற்குள்ளே பச்சை நிறத்திலான ஒரு பொலித்தீன் பை. கடந்தவர் இரயில்களுக்கு தண்ணீர் பிடிப்பதற்கான குழாயின் கீழே குந்தி இருந்து, அந்தப் பிய்ந்து போன பொலித்தீன் பையை, வெற்றுக் கைகளால் கழுவினார். பின்னர் அந்தப் பையையே துணியினைப் பிழிவது போல் தூக்கிப் பிடித்து பிழிந்தார். காவி நிறத்தில் ஒரு திரவம் அவரின் முழங்கைகளில் இருந்து வடிந்து ஓடியது. அந்தப் பையினையே மீண்டும் அந்தக் கூடையினுள் இட்டு குப்பை போடும் இடத்தில் வைத்தார். அந்தப் பெரியவர் இரயில்வே ஊழியராக இருக்கலாம்.

 1. அப்படியே கொஞ்சத் தூரம் உலாத்திக் கொண்டே தளமேடையின் முடிவு வரை வந்து சேர்ந்தேன். அங்கும் ஒரு கூட்டம் கொட்டும் வெயிலிலும் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தது. அவர்கள் இரயில்வேத் தடத்தின் இரு புறமும் இருந்த புற்களையும், வேண்டத் தகாத பொருட்களையும் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களும் வெற்றுக் கைகளினாலேயே வேலை செய்து கொண்டிருந்தார்கள். சாதாரணமாக இரயில் பயணம் செய்பவர்களுக்கு இரயில்வே நிலையம் எப்படி இருக்கும் என்பது தெரியும். அதிலும் தடங்கள் நிலையங்களில் எப்படி இருக்கும் என்பது மிக நன்றாகவே தெரியும். மனிதனின் திட, திரவக் கழிவுகள் எல்லாம் புளித்துப் போய் செமையான ஒரு வாசனை நீக்கமற நிறைந்திருக்கும். அதற்குள் மனிதர்கள் வெற்றுக் கைகளினால் வேலை செய்ய முடியுமா? முடியுதே?

இவற்றை ஏன் நான் இங்கே குறிப்பிட வேண்டி இருக்கின்றது என்றால், ஈரோட்டில் தான் பகுத்தறிவுச் சூரியன் உதித்தது. அங்கு தான் திராவிட மக்களுக்கு ஒரு சாப விமோசனம் கிடைத்தது. ஆக மொத்தம், இவற்றிலிருந்தே ஈரோட்டின் பகுத்தறிவு நிலையையையும், தமிழ் நாட்டின் பகுத்தறிவு நிலையையையும் அனைவரும் வெட்ட வெளிச்சமாக அறிந்து கொள்ளலாம்.

இங்கு நான் தமிழ் ஓவியா பற்றி எழுதியதுக்கு ஒரு பதில் வந்தது. அதனால் தான் என் மன நிலையை சற்று தெளிவாக உளறலாம் என்று எண்ணுகிறேன்.

நானும் பெரியாரைப் படித்தவன் தான். அண்ணாவையும், கலைஞரையும் படித்தவன் தான். கொஞ்சூண்டு யோசித்தவன் தான். அதன் படி நடக்கவும், சிந்திக்கவும் தலைப்படுபவன் தான். ஆனால் நடைமுறையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கின்றது?

பெரியாரின் உடன் வாரிசு. தற்போது உயிரோடு இருந்து பலரின் உயிர்களை எடுப்பவர். மு.. பகுத்தறிவுப் பட்டறையில் புடம் போட்டு புரட்டி எடுக்கப் பட்டவர். அவரின் தோளிலே எதற்கு மஞ்சள் துண்டு? மூன்றாம் இலக்கம் குருவுக்கானதாம். புதனின் நிறம் மஞ்சளாம். சொல்லக் கேள்வி.போதாதற்கு இப்பொழுது விரலிலே ஒரு நிறக் கல்லு. ஏன்? அவர் மனைவி இறை பக்தை. சொந்த வீட்டுக்குள்ளேயே சாமியாரைக் கூட்டி வைத்து யாகம். தன்னுடன் சார்ந்தவர்களையே மாற்ற முடியாமல் சமுதாய மாற்றம் எப்படி?

இவர்களெல்லோரும் கூடி ஒரு அமைப்பு வைத்து மாசா மாசம் ஒரு கூட்டம் போடுவதும், ஓசியில கிடைக்குதென்று இணையத்தில் எழுதுவதுமாக பெரியார் புகழ் பாடுகிறார்கள். பாடலாம். ஆனால், அவர் என்ன சொன்னார்? என்ன செய்யச் சொன்னார்? எப்படி மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று ஒரு விரிவான,விளப்பமான செயற்பாடுகள் எதனையுமே காண முடியவில்லை.

பெரியாரும், அவருக்கு பின்னரும் என்று ஏறத்தாள ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. நாட்டில் நிறைய சாமியார்கள் குடி வந்தது தான் கண் கூடு. அது தான் நிதர்சனமும். அதிலும் புதிதாக நடிகர்நடிகைகளுக்கு கோயில்கள். பாலாபிசேகங்கள் போதாதென்று பீராபிசேகங்கள். எனது அக்காவின் பிள்ளைகளுக்கு பெரியாரைத் தெரியாது. சிறிது காலம் கழித்து பெரியாரை ஒரு சாமியாராக நினைத்து பூசை பண்ணப் போகின்றார்கள்

ஆக மொத்தத்தில் இப்பொழுது பெரியாரின் புகழ் பாடிகளும், ரசிகப் பட்டாளங்களும் உருப்படியாக எதுவுமே செய்யப் போவது இல்லை. வெறுமனே நூற்றாண்டுப் பழைய பெரியாரின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் மிஞ்சிப் போய் இணையத்தில் ஏற்றப் போகின்றார்கள். அதனால் யாருக்கு என்ன லாபம்? எனக்குத் தான் அறிவு கம்மி என்றால்இணையம் பயன் படுத்துபவர்களுக்கும் அறிவு என்ன கம்மியா?

போதாதற்கு இப்பொழுது உள்ள தி.மு. அரசுக்கு முட்டுக் கொடுத்து முண்டாகின்றார்கள். அதற்கு ஒரு பட்டியல் வேறு. மக்களால், மக்களுக்காக தெரிவு செய்யப் படுபவர்கள் கண்டிப்பாக மக்களுக்கு செய்ய வேண்டியதைச் செய்தால் அதிலே என்ன பாராட்ட இருக்கின்றது? இவர்கள் என்ன சொந்தப் பணத்திலே செய்தார்கள்? தினகரனில் செத்த இருவரும் எங்கே? ஸ்பெக்ரம் விளக்கம் என்னாச்சு? அதெல்லாம் இவர்களது அறிக்கையில் இல்லையே? எங்கே? தங்களுக்கு வேண்டியதை மட்டும் போட்டால் சரியா?

ஆக மொத்தம் இவன் ஒரு கிறுக்கன் கிறுக்கிறான் என்று, இளகின கோவணத்தை இறுக்கிக் கொண்டு பதில் எழுத உட்காராமல் உங்களது செயற்திட்டங்கள் என்ன என்ன? நடைமுறைப் படுத்துவது எப்படி என்று பொதுவில் வைத்தால் நாங்களும் எழுந்து நின்று சல்யூட் அடிக்காமல், உங்களுடன் கை கோர்ப்போம்.

Advertisements

4 Comments »

 1. ஈரோடு அக்கிரகாரத்தில் பார்ப்பன மாமிகள் இன்னும் விபச்சாரத்தில் ஈடுபடுகிரார்களாம். அதுவும் இராமாயணத்தில் கூறியுள்ளது போல் புருசன் அத்திம்பேர் அனுமதியுடன் இந்தக் கூத்துக்கள் நடக்கிரதாம். இதற்கும் பெரியார் தான் காரணமா?

  Comment by thirunavu — April4, 2009 @ 07:56

 2. எதுக்கு இப்ப அவுங்கள இழுக்கிறீயள்? மத்தவங்க பண்ணினா அது என்ன விருந்தோம்பலா? கையாலாகத் தனம் இது தானா?

  Comment by pukalini — April4, 2009 @ 08:20

 3. //இங்கு நான் தமிழ் ஓவியா பற்றி எழுதியதுக்கு ஒரு பதில் வந்தது. அதனால் தான் என் மன நிலையை சற்று தெளிவாக உளறலாம் என்று எண்ணுகிறேன்.//
  பைத்தியகாரன் ஊளறிக் கொண்டேயிருப்பான் அந்தப் பைத்தியகாரன் மது பானத்தையும் குடித்தால் எப்படி உளறுவானோ அது போல் உள்ளது உங்கள் பதிவு.

  நீங்கள் பார்த்த காட்சிக்கும் பெரியருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

  Comment by தமிழ் ஓவியா — April4, 2009 @ 20:00

 4. இப்ப பெரியார் பெயரைச் சொல்லி தங்களை புரட்சிக்காரர்களாகக் காட்டிக் கொள்வோர் அதிகம். கட்டுரைக்குப் பாராட்டுக்கள்.

  சாந்தி

  Comment by சாந்தி — April8, 2009 @ 02:12


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: