புகழினி

March2, 2009

பெரியாரின் பெயர் ஒழியட்டும்.

Filed under: சமுகம் — pukalini @ 00:43

பெரியார், எதைச் சாதித்தார்? இன்று சிந்திக்கும்
பொழுது வெறும் பூச்சியம் கூட மிஞ்சாது. ஆனால், அவரினைப் படித்ததால் 
ஏதோ கொஞ்சம் பேர் யோசித்திருப்பார்கள். ஆனாலும் நடந்தது என்ன? ஏன்?

முதலில் அவரின் திருமணம். அவர் நாட்டு நடப்புத் தெரியாமல் தான் அந்தப் பெண்ணைத் தன்னுடன் வைத்துக் கொண்டாரா? பகுத்தறிவுப் பகலவனுக்கு என்ன நடக்கும் என்று தெரியாமல் போய்விட்டதா? இல்லை. இந்த விடயத்தில் மட்டும் தெளிவில்லாமல் இருந்து விட்டாரா?

அப்படிப் புறம் பேசினால் தன்னுடன் கூட இருந்த தோழர்களில் ஒருவனைக் கையைக் காட்டினால் அத்துடன் விடயம் முடிந்து போயிருக்குமே? அவன் திருமணம் முடித்திருப்பானே? என் அப்படிப் பண்ணவில்லை? திருமண ஆசையா? அப்படிச் சாதித்து ஒரு  பெண்ணின் வாழ்க்கையை  மீண்டும் அழித்து விட்டாரே? அதற்குப் பின் கேவலமாக நடந்து கொண்டாரே, ஏன்? அதனால் தான் அவரால் தொடங்கப் பட்ட எதுவுமே பூர்த்தி ஆகாமல் போய்விட்டதோ?

மாக்ஸ் , லெனின் முதலியர்கள் எவ்வளவோ சாதித்தார்கள்? என்ன நடந்தது? அவர்களுக்கு  நடந்தது என்ன? எவ்வளவோ  மாற்றங்களை ஏற்படுத்தியவர்களையே உலகம் தள்ளி வைத்து விட்டது. கேவலம் கண்ணாம் மூச்சி ஆடும் கருணாநிதிக்காகத் தான் பெரியார் உழைத்தாரா? இதுக்குப் பேசாமல் புரண்டு படுத்திருக்கலாமே? அதுக்காகத் தான் இப்பொழுதும் பலர் பெரியாரை வைத்துப் பிழைப்பு நடத்துகிறார்களா?

இப்பொழுதும் பெரியாரின் எழுத்துக்கள் இங்கு வருகின்றன. இப்பொழுதும் அவரை வைத்து பிழைப்பு ஓட்டவா? கேட்டால்  பகுத்தறிவு ஏற்படுத்தவாம். யாருக்கு ? எப்படி? பிராமணர்களைத் திட்டவும், மதங்களினை வைத்து  காலத்தை ஓட்டவும் தான் அவர்களினால் முடிந்தது.

வீதியில் மூத்திரம் போகக் கூடாதென்று எல்லோருக்கும் தெரியும். யார் தான் போவதில்லை. அங்கே ஒரு கல்லை வைத்து மாலை போட்டால் ஒருவருக்கும் போகத் துணிச்சல் வராது. இவர்களின் பகுத்தறிவு செய்யாததை  பக்தி செய்து விடும். யாருக்குத் தான் இவர்கள் பகுத்தறிவைப் புகட்டுகிறார்கள்?

கருணாநிதியின் மனைவிக்கு கடவுள் பயம். அவருக்கு மஞ்சள் துண்டு. ஊரை அடித்து உலையில் போடத் தான் தெரிந்தது. மக்களுக்கு என்ன பண்ணினாரு?

பெரியார் கழகம்  எத்தனை வருடங்களாக இருக்கின்றது? தமிழ் நாட்டில் எத்தனை பேருக்கு உலகம் உருண்டை என்று தெரியாமல் இருக்கிறது? இந்தியாவுக்கு அருகில் இலங்கை உள்ளது. அங்கும் தமிழ் பேசுபவர்கள் உள்ளார்கள், என்பது எத்தனை தமிழ் நாட்டுத் தமிழருக்குத் தெரியாமல் இருக்கிறது? அல்லது எழுதப் படிக்கத் தெரியாத தமிழர்கள் எவ்வளவு பேர்? ஆக மொத்தத்தில் இவர்கள் பகுத்தறிவுக்கு கூட இன்னமும் விளக்கம் காணவில்லை.

இது தான் இவர்களின் பகுத்தறிவுப் போராட்டமா? ஏதோ வெள்ளை வேட்டி, சட்டை போட்டுக் ஒண்டு வீதியோரமாக நின்று கத்துவது தான் போராட்டமா? பத்திரிகைகளிலும், இணையத்திலும் எழுதுவது தான் போராட்டமா?

மக்களுக்குத் தாம் யார் என்பதைப் புரிய வைக்க வேண்டும். தமது உரிமைகள், கடமைகள் எவை? எதுவரை செல்லும் என்பதை அறிய வைக்க வேண்டும். தம்மால் எவற்றை? எப்படி? யார் மூலம்? செய்யலாம், பெறலாம், சொல்லலாம் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தாமே இந்த நாட்டின் ராஜாக்கள் என்பதை மனசில் அடித்துப் பதிய வைக்க வேண்டும். மக்கள் நினைத்தால் எதையும் செய்யலாம் என்பதைதெளிவு படுத்த வேண்டும். புரியாணிக்காக வாழ்க்கையை அடைவு வைக்கக் கூடாது என்பதை அடித்தாவது விளங்கப் படுத்தலாம். இவற்றினை செய்வதே ஒரு போராட்டம் தான். உண்மையான போராட்டம்.

அதை விடுத்து, ரோட்டோரமா நின்று கத்துவதும், ராமர் ஏகபத்தினி விரதன் இல்லை என்று சொல்லுவதும், சீதை கனவிலேயே கற்பிழந்தவள் என்று நிரூபிப்பதுவும் இப்பொழுது தேவையில்லை. நாட்டுக்கு இப்பொழுது எது தேவையோ அதைச் செய்யாமல் இருபதுவும் ஒரு வகையில் கூட்டிக் கொடுப்பது தான்.அதைத் தான் பலர் இப்பொழுது பெரியாரின் பெயரில் மேடை போட்டுச் செய்து கொண்டிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இணையத்திலோ, பத்திரிகையிலோ எழுதுவது. இவை இரண்டையும் பாவிப்பவர்களுக்கு என்ன அறிவுரை தேவை இருக்குதோ தெரியலவில்லை. இன்னமும் ஒரு பக்கத்தில் மக்களை ஒதுக்கும் செயல் தான் இதுவும். இதுக்கு பேசாமல் பெரியாரையும் அவரது எழுத்துகளையும் அழித்து விடலாம்.

யார் யாருக்கோ பகுத்தறிவு ஊட்டுவதினை விடுத்து  தங்களுக்கு தாங்களே முதலில் பருக்கட்டும். அப்புறமா மற்றவர்களைப் பற்றி யோசிக்கலாம்.

Advertisements

1 Comment »

  1. NbG2oz comment1 ,

    Comment by Ygrzmeoi — June22, 2009 @ 04:38


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: