காலையில் வானொலி கேட்க நேர்ந்தது. நீதிமன்றில் கடும் மோதலாம். 70 பேர் காயமாம். அதுக்கென்ன இருந்துட்டு போகட்டும். ஆனா காரணம் என்ன சொன்னார்கள் என்றால், சு. சாமி ‘விடுதலைப் புலிகளின் தலைவரைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொன்னதற்கு வக்கீல்கள் எதிர்த்ததால் சண்டையாம்.மேற்கோள் காட்டப் பட்டது த ஹிண்டு இல் இருந்து.
அப்படியாயின் அந்தக் குப்பைப் பத்திரிகையில் அப்படித் தான் செய்தி வந்திருக்கிறது. முழுப் பூசனிக்காயை எப்படி விழுங்குகிறார்கள்?
நம்மாளுக ஹிண்டு படிப்பது ஆங்கில அறிவை வளர்க்க என்று கேள்வி. அப்படி என்னத்தை அதில போடுறாங்களோ என்று எனக்கு இதுவரையும் புலப் படவில்லை. ஆங்கிலம் படிப்பது என்று தங்களின் சொந்த சிந்தனா வளத்தை அதற்குள் கட்டிப் போடுகிறார்களோ? இப்பொழுது தான் ஆங்கில அறிவை வளர்க்க நிறைய வழிகள் இருக்கின்றனவே. ( அவசியம் வளர்க்கணுமா?)
ஊரில இருக்கும் போது என்னால் எதுவும் முடியாமல் மற்றவன் செய்து முடித்தால் தாத்தா சொல்லுவார் அவனின்ட மூத்திரத்தை வங்கிக் குடியடா என்று. நானும் படிச்சு முடிச்சிற்று சும்மா கண்டவனுக்கும் கீழே எத்தனை நாளைக்குத் தான் வேலை செய்வது? அதனால் ஆங்கிலேயர்களின் மூத்திரத்தை பாக்கட் பண்ணி விக்கப் போகிறேன் . யார் யாருக்கு ஆங்கில அறிவு வளர ரோனிக் தேவைப் படுதோ தொடர்பு கொள்ளலாம். என்னைத் தூக்கி விட்ட மாதிரியும் இருக்கும்.
நம்மாளுக இப்பவும் கோக், பெப்சி என்று ஏற்கனவே அதைத் தானே குடிக்கிறாங்க. ஆகவே தொழில் பிச்சிக் கிட்டு போகும். நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
உங்களின் கோபம் நியாயமானதே… ஹிந்து பத்திரிக்கை என்றுமே நடுநிலையாக செயல்பட்டதில்லை 😦
Comment by எட்வின் — February20, 2009 @ 02:26
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்
கேள்வி. நெட்
Comment by Kelvi.Net — February20, 2009 @ 09:10