புகழினி

February18, 2009

காணாமல் காதல்- சொதப்பிய காதல் கோட்டை

Filed under: சமுகம் — pukalini @ 20:12

அண்மையில்  ரஷ்ய மொழிபெயர்ப்புப் நாவல் ஒன்றைப் படிக்க முடிந்தது. பெயர் உண்மை மனிதனின் கதை. எழுதியது பரிஸ் பலவேய்.

அதில் வரும் ஒரு சிறு சொருகல் தான் இது.

அவன் ஒரு டாங்கிப் படை வீரன். குடும்பமே யுத்தத்தில் அழிந்து விட்டது. முன்னணிப் போர் வீரனான அவன், ஒரு கட்டத்தில் எதிரிகளின் சுற்றி வளைப்பினை முறியடிக்க,  கையிலே எரி குண்டுடன் எதிராளியின் டாங்கியினுள் பாய்கிறான். பின்னர் உடம்பு முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டான்.

அங்கு தங்கி இருக்கும் அனைவருக்கும் தினமும் கடிதங்கள் வரும். அவனுக்கு வருவதில்லை. அனுப்புவதற்கு எவருமே இருக்கவில்லை. மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒருவர் அவனுக்காக இரங்கி அவன் படித்த கல்லூரியிலிருந்து ஒரு பெண்ணை அவனுக்கு கடிதம் எழுத வைக்கின்றார்.

கடிதப் போக்குவரவு காதலாகின்றது. அவனும் குணமடைகின்றான். ஆனால் முகத்தில் தீக்காயத் தழும்புகள். அவன் அவளை விட்டு விலக முடிவெடுக்கின்றான். ஏனெனில் இருவரும் ஒருவரையும் சந்தித்தில்லை. இந்த மூஞ்சியுடன் போனால் அவள் நிராகரித்து விடுவாள் என்ற பயம். தாடி வளர்க்க  யோசனை கூறப் படுகின்றது.

இறுதியில் இருவரும் சந்திக்கின்றனர். அவள் தாடியையும் மழிக்கச் சொல்கின்றாள். ஒன்றாகின்றனர்.

படித்த பின் எங்கேயோ உறைத்தது.

இது இற்றைக்கு அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்து விட்ட கதை. அதை எங்கேயோ படித்து விட்டு(?) காதல் கோட்டை என்று படம் எடுத்து விருதுகளை வாங்கியாச்சு. சரி அவர் அதை படிக்க வில்லை.  சொந்தக் கற்பனை. இருந்தாலும் அருமையான பழைய  சிந்தனை முன்னமே இருக்கென்று தேர்வாளர்களுக்கு தெரியாதா? தெரியவில்லையா?

ஆக மொத்தம் இவர்கள் சுடுவதில் நிறையவே  வல்லவர்கள். அதனால் தான் ஆயிரம் போட்டி இருக்க போயும் போயும் சுடுவதில் தங்கம்  வாங்க முடிகிறது.

Advertisements

1 Comment »

  1. //
    ஆக மொத்தம் இவர்கள் சுடுவதில் நிறையவே வல்லவர்கள். அதனால் தான் ஆயிரம் போட்டி இருக்க போயும் போயும் சுடுவதில் தங்கம் வாங்க முடிகிறது.
    //

    ஹாஹாஹா…

    Comment by velanaivalasu — May8, 2009 @ 21:25


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: