புகழினி

February7, 2009

முத்துக்குமாரினால் துகிலுரியப் பட்ட பதிவர்கள்

Filed under: சமுகம் — pukalini @ 18:21

கடந்த வாரம் முழுவதும் ஒரே தலைவலி. மன வேதனை. சொல்ல முடியாத ஒரு தவிப்பு. அருமையான ஒரு தமிழ் மகனை இழந்து விட்டோம். அவரைத் தொடர்ந்து சிலரும் மோசமான முடிவுகளை எடுத்துள்ளனர். மனசு மிகவும் நொந்து போயுள்ளது. வன்னியில் எம் மக்கள் கொத்துக்கொத்தாக மரணிக்கும் போது ஏற்படாத வலி இப்பொழுது முத்துவினால் ஏற்பட்டிருக்கிறது. இவ்வளவு தீரமாகச் சிந்தித்து  முடிவெடுத்தவருக்கு, தான் என்ன செய்கிறேன் என்பது புலப்படாமல் இருந்திருக்க முடியாது. அப்படியாயின் அதை தூண்டி நிறைவேற்றியது என்ன?

இருக்க, நானும் பல காலங்களாக இங்கு உலாவி வருகின்றேன். முத்துக்குமார் தான் யார், யார் எப்படி என்று சொல்லித் தந்திருக்கிறார். இறப்புக்கு பின்.அவர்களின் பதிவுகளைப் படித்து எண்ண ஓட்டங்களை புரிய முடிந்தது. சிலரால் மட்டும் ஏன் இப்படி சிந்திக்கவும், எழுதவும் முடிகிறது? அவர்களின் சிந்தனைகளில் எப்படி இப்படிப் பட்ட அசிங்கங்கள் வந்து சேர்ந்துள்ள்ளன? ஒருவன மரணித்தாலே அவன் செய்த கெட்டவைகளை மறந்து  நல்லவற்றைப் பேசும் உலகில், நல்லவன் ஒருவன் மற்றவர்களுக்காக உயிர் கொடுத்தால் அதனைக் கொச்சைப் படுத்த எப்படி முடிகிறது?

ஒரு வார காலம் கையும் ஓடல்ல, காலும் ஓடல்ல. இது தான் பிழைப்பாப் போச்சு. என்ன நடக்கப் போகுதோ என்ற ஏக்கம். என்னால் எதையுமே  சிந்திக்கவோ, செய்யவோ ஏன் எழுதக் கூட முடியல. விடுங்க. ஈழத் தமிழன் இனிமேலாவது நிம்மதியாச் சாவான். தனக்காகச் சாகக் கூட ஆளிருக்கு என்று.

ஒரு பதிவில் பார்த்தேன் முத்துக்குமாரா வந்து என் கம்பை ………………ன்னு. எப்படி இவர்களால் மட்டும் முடிகிறது. செத்த பிணக்களின் மீது வாந்தி எடுக்க? இவர்களும் தமிழர்கள் தானே? படித்தவர்கள் தானே? தப்பு எங்குள்ளது?  இவர்கள் தானே நாட்டினைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்குபவர்கள். வருங்காலத் தலைவர்கள்.

அத்துடன் ஈழ மக்களைப் பற்றி எல்லோரும் எழுதுகிறார்கள். திட்டியும், வக்கிரத்துடனும் எழுதுபவர்கள் யார்? ஈழத்தமிழர்கள் தான்.

முடிந்தால் நீங்களும் படித்து புரிந்து கொள்ளுங்கள்.

இதைப் பின்பற்ற முடியுமா?

இனிமேல் வாக்காளர் பதிவில் சேர்ப்பதற்கு முன் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்களின் அரசியல் அறிவைத் தெரிந்து கொண்ட பின்பே பட்டியலில் சேர்க்க வேண்டும்.

(என்னுடன் படித்த ஒரு ஜந்தைக் கேட்டேன் நீ யாருக்கு ஓட்டுப் போடுவாய் என்று? அப்பா, அம்மா போடுறவங்களுக்குத் தான் போடுவாங்களாம். இதுகள் எல்லாம் படிச்சு என்னத்தை கிழிச்சு?)

வேட்பாளர்கள் பொதுவிடத்தில்  நேரடியாக் கேள்விகள் கேட்கப்பட்டு தகுதி பெற வேண்டும்.

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்குரிமை பறிக்கப் பட வேண்டும். அப்பொழுதான் கடந்த காலத்தில் வாழ்பவர்களை ஒதுக்க முடியும்.

(எம்.ஜீ.ஆர் பாட்டு அப்பொழுதாவது ஒழியும்)

55 வயதுக்கு மேல் தேர்தலில் நிற்கபதை தடை செய்ய வேண்டும். அத்துடன் வேட்பாளர்கள் குறைந்த பட்சம் ஒரு கிலோ மீற்றராவது நிற்காமல் ஒடி முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தடை.


Advertisements

2 Comments »

  1. hmmm

    Comment by Ttamilnenjam — February7, 2009 @ 21:22

  2. //55 வயதுக்கு மேல் தேர்தலில் நிற்கபதை தடை செய்ய வேண்டும். அத்துடன் வேட்பாளர்கள் குறைந்த பட்சம் ஒரு கிலோ மீற்றராவது நிற்காமல் ஒடி முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தடை.//

    FYI: கலைஞருக்கு வயது 80+

    Comment by நவநீதன். — February19, 2009 @ 22:37


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: