புகழினி

January24, 2009

நீயா நானா கோபிநாத்தும் முட்டாளாக்குகின்றாரா?

Filed under: சமுகம் — pukalini @ 18:24

அண்மையில் விசய் தொலைக் காட்சியின் ஒரு விளம்பரத்தில் கோபிநாத்  சொல்கிறார், அமெரிக்கா இந்தியா வல்லரசாக மாறிவிடும் என்று பயப் படுகின்றதாம். எப்படி? சந்திராயன். இவர் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு சொல். நல்லது. அமெரிக்கன் 40 வருடங்களுக்கு முன்னர் செய்தது. அவனைக் காப்பி அடிக்கவே இவ்வளவு நாட்கள்.

ஆமாம். வல்லரசு நாட்டுக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும். மற்றைய நாடுகளின் பிரச்சினைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும். சொந்த நாட்டுப் பிரச்சினைகளுக்கு மற்றவனிட்ட முறையிடணும். இந்தியா அதைச் செய்கிறது. அப்ப வல்லரசா?

சில சந்தேகங்கள். சீனாவும் இந்தியா மாதிரியே இருந்தது. பல காலங்களுக்கு முன்னால். இன்று வீட்டோ அதிகாரம் உள்ள நாடு. சாதி, மதப் பிரச்சினை  இல்லாமல் போய்விட்டது. இந்தியா எங்கே இருக்கிறது?

சீனா ஒலிம்பிக் போடியை நடத்தி விட்டது. 100க்கு மேல் தங்கப் பதக்கங்கள். இந்தியாவுக்கு 1. ஆக சீனா 100 மடங்கு வளர்ந்து விட்டதா?சரி இந்தியாவினால் எப்பொழுது ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியும்? அதை விடுங்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைத் தானும் தனியே நடத்த முடியுமா? கேவலம் பாங்களாதேஷுடன் பங்கு.

உலகப் பொருளாதாரம் அடி வாங்குகின்றது. சீனாவும், இந்தியாவும் தங்களது பங்கிற்கு மூக்குடைபடுகின்றன. அமெரிக்கன் சீனாவைக் கேட்கிறான் அவர்களின் பணத்தை தங்களிடம் முதலீடு செய்ய. இந்தியாவிடம் இல்லை. சீனாக்காரன் சும்மா விடுவானா? பல நூறு பில்லியன்களை கிராம அபிவிருத்திக்கு ஒதுக்கிவிட்டான். வேலை இல்லாமல் போனவங்களுக்கு வேலை கொடுக்க. இந்தியா என்ன செய்கிறது?

சரி, ஒரு சராசரி இந்தியன் அலுவலகத்திற்கு கிளம்பும் போது அவனிடம் எத்தனை மேட் இன் இந்தியா பொருட்கள் இருக்கும்?
ஏதாவது காட்வெயார் பொருள் இந்தியாவில் உற்பத்தி ஆகின்றதா? மென்பொருளில் இந்தியா வளார்ச்சி அடைந்து விட்டதாம். யாரு சொன்னது? அமெரிக்காவின் பாதுகாப்பு பெட்டகத்தையே சீனாக் காரன் உடைச்சிட்டான். இந்தியா இப்பொழுதும் அமெரிக்கண்ட ஒப்பரேட்டிங் சிஷ்டத்தில தான் வேலை பார்க்கிறார்கள்.  எது உண்மை? யதார்த்தம்?

அமெரிக்காவில், நாசாவில் இவ்வளவு சதவீதம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள் என்று கணக்குக் காட்டாமல் மத்திய கிழக்கு, தெங்கிழக்காசியாவில் எவ்வளவு கூலிகள் உண்டு என்று கணக்கிடுங்கள். அதுவும் தமிழர்கள். சீனா எப்பவோ கூலிகளை அனுப்புவதைத் தவிர்த்து விட்டது.

இங்கு சீனாவுடன் மட்டுமே ஒப்பிட்டுள்ளேன். வேறு நாடுகளுடன் இல்லை. கோபிநாத் ஏதோ கெட்டிக்காரன் என்று நினைத்தேன். ஏனப்பா பப்பா மரத்தில் ஏத்துறேங்கள். விழுந்து முறியவா? யதார்த்தத்தை உணர்த்துங்கள். கனவிலேயே மிதக்காதீர்கள்.

Advertisements

2 Comments »

  1. சீனா எப்பவோ கூலிகளை அனுப்புவதைத் தவிர்த்து விட்டது.
    yar sonnadhu?
    pls visit to korea and russia

    Comment by david — January2, 2010 @ 07:11

  2. தங்களின் கருத்து உண்மை தான் … சீன கூலிகளை நான் இந்தியாவில் கண்டிருக்கிறேன்

    Comment by கமலநாதன் — May17, 2010 @ 23:15


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: