புகழினி

January23, 2009

இணைப்புக்கு வழி கிட்டுமா?

Filed under: சமுகம் — pukalini @ 20:13

நான் இங்கு எழுதுவது ஏதோ புரட்சி செய்யவோ அல்லது சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவோ, வழி நடத்தவோ அல்லது மக்கள் கருத்தை மாற்றவோ அல்லது சுய பெருமைக்காகவோ இல்லை.ஏனோ என்னால் தான் அழிந்து கொண்டிருக்கும் தமிழ் குற்றுயிரில் ஊசலாடுதோ எண்டும் சொல்ல வரவில்லை. ஏதோ தெரிந்ததைப் பலருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தான். எனக்கு ஒருவர் உதவி செய்கிறார், இவற்றினை இணையத்தில் ஏற்ற. நிறைய படிக்கிறேன்.பின்னூட்டங்கள் போடுவதில்லை, காரணம் வேண்டத்தகாததை விலக்க. கீழே ஒரு எண்ணிக்கை வந்து கொண்டு இருக்கும். அதுவும் எனக்கு உதபுவர் செய்தது. ஒரு திருப்திக்காக.

ஆனால் பலர் எழுதி விட்டு படியுங்கோ என்று கேட்பதுவும், ஒரு கூட்டமாகச் சேர்ந்து கும்மி அடிப்பதும் ஏதோ ஒர்குட்ல பண்ணுறத இதில செய்யிற மாதிரியே தோணுது. போததற்கு எழுதியதை பயன்படுத்த வேண்டாம், புத்தகம் போடப் போறேன் என்று ஒரு வசனம். ஏன்? பின்னர் எதுக்கு இங்கு எழுதுவான்? நேரிடையாக பதிப்பகங்களுக்கு போக வேண்டியது தானே? என்ன கூட்டங்களப்பா? ஒரு அங்கீகாரம் வேண்டி இருக்குது. அதை ஓசியில பணியாரம் சுட்டிட்டு காசாக்க ஒரு எச்சரிக்கை. மிகவும் நன்று.

போதாததற்கு இணைப்பிலும் பல கட்டுப்பாடுகள். தமிழிஸ் , தமிழ்வெளி மட்டுமே இப்போதைக்கு நேரிடையாக சேர்ப்பதற்கு அனுமதிக்கின்றன. தமிழ்மணம் ஏதோ குரங்கு வேலை எல்லாம் செய்யச் சொல்லுது. ஏன் அவர்களால் இலகுவாக்க முடியவில்லை. இந்த கோடுகள், சூத்திரங்கள் தெரியாதவர்கள் எல்லாம் எழுதக் கூடாதா? இல்லை இணைக்கக் கூடாதா? அப்ப கணினி நல்லாத் தெரிந்தாத் தான் இங்கு உலாத்த முடியுமா? அவர்கள் ஒரே சப்பையை எத்தினை நாளுக்குத் தான் மாற்றி மாற்றிச் சப்புவார்கள். சலிக்காதா?என்னவோ போங்க. உருப்படியான எண்ணங்களோ, சிந்தனைகளோ ஒருத்தருக்கும் கிடையாது போல இருக்கு. வாழ்க வளமுடன்

Advertisements

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: