புகழினி

January8, 2009

ஆத்தா ஏன் பெத்த?

Filed under: சமுகம் — pukalini @ 20:54

நேற்று கடும் தலைவலி. வேலை அதிகமாகி விட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்து, தேநீர் ஒரு கோப்பை சூடாகக் குடிக்கலாம் என்று நினைத்தேன். பக்கத்தில தான் இயந்திரம் இருந்தது. தலையில ஒரு தட்டுத் தட்டினா உடனடியாக கக்கி விடுகிறது. இருந்தாலும் வெளியே போகலாம், என்று வெளியே போனேன். ஏதோ நினைப்புடன் நடந்து செல்கையில் ஒரு வயசான அம்மா வழி கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.  பார்க்க நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், இரண்டு அல்லது மூன்று உருப்படிகளுக்காவது தாயாகி இருப்பார்கள் போலவும் இருந்தார்கள்.


நானும் வயசானவர் சிரமப்படுகிறார்கள் என்று உதவிக்கு போனேன். கிழவி தற்பொழுது கவிழ்ந்த இன்சுரன்ஸ் நிறுவனத்துக்கு வழி தேடிக் கொண்டு இருந்தது. வழியைக் காட்டினாலும் விடாமல் கொண்டு போய் விடச் சொன்னது. எரிச்சல் வந்தது. நான் கூட அந்த இடத்துக்கு போனதில்லை. பணப் புழக்கம் அந்தளவுக்கு இருந்ததில்லை. கிழவி கட்டையில போற வயசில அங்க போய் என்ன செய்யப் போகுது என்று பொறாமையும் சேர்ந்து கொண்டது.

இருந்தாலும் தொடங்கியதை முடிக்கலாம் என்று கிழவியை இழுத்துக் கொண்டு போனேன். அந்த அம்மாவால் நடக்க கூட இயலவில்லை. நிறைய கடினப்பட்டுத் தான் நடந்து வந்தார்கள். போகும் போது சும்மா புறுபுறுத்துக் கொண்டே வந்தார்கள். இந்தக் காலத்தில வேலை கிடைக்கிறதே கஷ்டம், அதிலும் இப்படித் தினமும் அலையிறதென்றால் மிகவும் கஷ்டம் என்று. என்ன வேலை என்று கேட்டேன்.  கூட்டித் துடைக்கிற வேலைதான் என்றார்கள். அப்படியாயின், இந்த வயசான காலத்திலும், இப்படியான வேலை செய்து தான் பிழைக்க வேண்டும் என்றால் அவரது இவ்வளவு கால வாழ்க்கைக்கும் அர்த்தம் என்ன? அவரது குழந்தை குட்டிகள், பேரப் பிள்ளைகள் எங்கே?

Advertisements

1 Comment »

  1. ஏஏஏன் இந்த கொலை வெறி. நீங்கள் இனி கொஞ்சம் நிதானமா ப்லோக் எழுதலாம். கருத்துக்கள் சரி என்றாலும் சொல்லும் விதம் மிகவும் கடுமை.

    Comment by devi — January14, 2009 @ 13:55


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: