புகழினி

January7, 2009

கவரும் ஆண்கள்

Filed under: சமுகம் — pukalini @ 19:40

தைப்பொங்கலும் வருது.  உள்ளூர்த் தலைகளின்  படங்கள் வேற வரப் போகுது, ரசிகப் பட்டாளங்களுக்கு ஒரே குஷி தான். இப்பவே தட்டிகள், போஷ்டர்கள் என்று செம அமர்க்களமா இருக்குது. படங்கள் வெளியாகும் அன்றைக்கு பாற்குடங்கள் எடுப்பதுக்கு இப்பவே சில கூட்டங்கள் தயாராகி விட்டன. அவற்றிற்கு காவடி எடுக்க பல பேருடைய தாலிகள் ஏற்கனவே அடவு கடைகள் ஏறியும் விட்டன. பாவங்கள் இப்படியே உழன்று செத்துத் தொலைய வேண்டியது தான். இவர்களுக்கு திருப்பவும் பெற்றோல் விலை கூடுகிறது என்பதோ அது ஏன் குறையாது அல்லது குறைக்கப் படமாட்டாது என்பதோ புரியாது.  நாட்டின் உற்பத்தி சக்தி வெறுமனே தியேட்டரில் விசிலடிக்க மட்டுமே வாயைப் பயன்படுத்துகிறார்கள்.

அப்புறம் சில கூட்டம் தாங்கள் ஏதோ படித்திருக்கிறார்களாம். அதனால் ரசிகர் மன்றத்  தலைகள் , வாலுகள் என்று புலம்பிக் கொண்டு அலைகிறார்கள். இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்துக்கு வேறு பொழுது போக்கு என்ன தான் இருக்குது?

ஆனாலும் சிலர் இதில் நல்ல தெளிவாக உள்ளார்கள். அதிலும் பெண்கள் படு சுட்டி. தேவையில்லாம உள்ளூர் தலைகளுக்கு தீவர்த்தி பிடிப்பது இல்லை. பிடித்தாலும்  புளியங் கொம்பாப் பிடிப்பம் என்று ஜிம் காரியோ, பிராட் பிட் அல்லது டாம் குருஸோட கனவு காண்கிறார்கள். அதிலும் சிலருக்கு நினைப்பு பெண்கள் எல்லோரும் தங்கட தலைகளுக்குத் தான் வாலுகள் என்று.  நாட்டில் உள்ள பாக்கம், பட்டிகளிலுள்ள கருப்பாயிக்கோ, ராக்கம்மாவுக்கோ இவர்கள் தலையாகலாம். ஓரளவுக்கு உலகம் தெரிந்தவர்களுக்கு? அவர்களும் கனவு காண்பார்கள். தலையணையை அணைத்துக் கொண்டு தூங்குவார்கள். தூக்கத்தில் உல்லாசம் காண்பார்கள். ஆனாலும் சுத்த மோசம்.  மேற்சட்டையை கழற்றுவதற்கு தைரியம் இல்லாத ஹீரோக்களுடன் இல்லை. அறு வெட்டு எட்டு மடிப்புகள் உள்ள ஹீரோக்களுடன். கனவிலையாவது சந்தோசம் துய்க்க முடியாதா?

சிலர் இதை தப்பு எனலாம். கற்புக் கெட்டுப் போய் விட்டது எனலாம். ஆனாலும் இந்த பழக்க ,வழக்கத்தை கலாச்சாரம் ஆக்கியது யார்? ஆண்கள் மட்டும் திரிஷா, நயன்ஸ் என்று கனவு காணவும் ஜொள்ளு விடவும் பெண்கள் மட்டும் என்னவாம்?  முடிந்தால் திரிஷாவின் குளியலறைக் காட்சியை ஓடி ஒடிப் பார்க்கிறது, அப்புறம் வேடம் போடுவது ஏன்? பெண்களும் உணர்வுகள் உள்ள விலங்குகள் தானே?

பெண்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் பலர்., ஓரமா ஒதுங்கி இருந்து தம் அடிப்பவர்கள். மோட்டார் பைக்கில் போகும் போது ஹெல்மட் போடுபவர்கள், வீதி  சமிக்கைகளை மதிப்பவர்கள் என்று பலரும் இருக்கிறார்கள். கண்டிப்பாக கண்டவனுக்கும் காவடி எடுப்பவர்களை எவளுக்கும் பிடிக்காது. தன்னைத் தானே நாயகனாக நினைப்பவனை எவருக்குமே பிடிக்கும்.

Advertisements

7 Comments »

  1. என்னங்க இது, ஆம்பளைங்க எல்லாம் கெட்டவங்கனு சொல்லறதுக்கே ஒரு ப்லோக் வெச்சுருகீங்களா??

    // பெண்கள் படு சுட்டி. தேவையில்லாம உள்ளூர் தலைகளுக்கு தீவர்த்தி பிடிப்பது இல்லை
    அப்படியா?? அப்போ உள்ளூர் தலைவர்களுக்கு மகளிர் அணி எல்லாம் யாரு
    நடத்தறா??

    //பிடித்தாலும் புளியங் கொம்பாப் பிடிப்பம் என்று ஜிம் காரியோ, பிராட் பிட் அல்லது டாம் குருஸோட கனவு காண்கிறார்கள்

    கிராமத்து பெண்களை விடுங்கள், இன்னும் என் அலுவலகத்திலயே நிறைய பேருக்கு இவர்களை தெரியாது!!

    //நாட்டில் உள்ள பாக்கம், பட்டிகளிலுள்ள கருப்பாயிக்கோ, ராக்கம்மாவுக்கோ இவர்கள் தலையாகலாம். ஓரளவுக்கு உலகம் தெரிந்தவர்களுக்கு?
    அப்போ மகளிர் அணி செயலாளர்க்கு உலக அறிவு இல்லையா?? படித்த பெண்களும் (உங்கள் பாசையில் “ஓரளவுக்கு உலகம் தெரிந்தவர்கள்”) உள்ளூர் தலைவர்களை ரசிக்கிறார்கள். இங்க வேலை செய்யும் பல பெண்களுக்கும் சூர்யா, விக்ரன், விஜய், அஜித் பல “கனவுகள்” உண்டு. அவர்களும் அவர்கள் கணவர், காதலனை, ஆண் நண்பர்களை (Boy Friends) அந்த மாதிரி உடை அணிய சொல்வதை பார்க்கலாம்.

    //. ஆனாலும் சுத்த மோசம். மேற்சட்டையை கழற்றுவதற்கு தைரியம் இல்லாத ஹீரோக்களுடன் இல்லை

    இதற்கு பதில் சொன்னால் கொஞ்சம் கீழ்த்தரமாக இருக்கும்!!

    //சிலர் இதை தப்பு எனலாம். கற்புக் கெட்டுப் போய் விட்டது எனலாம். ஆனாலும் இந்த பழக்க ,வழக்கத்தை கலாச்சாரம் ஆக்கியது யார்? ஆண்கள் மட்டும் திரிஷா, நயன்ஸ் என்று கனவு காணவும் ஜொள்ளு விடவும் பெண்கள் மட்டும் என்னவாம்? முடிந்தால் திரிஷாவின் குளியலறைக் காட்சியை ஓடி ஒடிப் பார்க்கிறது, அப்புறம் வேடம் போடுவது ஏன்? பெண்களும் உணர்வுகள் உள்ள விலங்குகள் தானே?//

    இந்த வரிகளுக்கு மட்டும் நான் உங்கள் கட்சி! இதை சொல்லுவதுதான் உங்கள் நோக்கம் என்றால்,(மன்னிக்கவும்) உங்கள் முந்தைய பேராக்கள் இதை சொல்லவில்லை! கற்பு ஆண்களுக்கும் வேண்டும் என்பது என் கொள்கை! (பெண்களுக்கும் வேண்டாம் என்பது அல்ல)

    //கண்டிப்பாக கண்டவனுக்கும் காவடி எடுப்பவர்களை எவளுக்கும் பிடிக்காது. தன்னைத் தானே நாயகனாக நினைப்பவனை எவருக்குமே பிடிக்கும்.

    பெண்கள் இந்த அளவிற்கு தெளிவாக இருந்தால், நாட்டில் பல ஆண்களுக்கு திருமணம் ஆகாது!

    Comment by Bhuvanesh — January7, 2009 @ 22:53

  2. நன்றி. எனக்குப் பட்டத எழுதினன். இதற்கு ஒத்தாசை செய்கிறவரும் ஒரு ஆண் தான்.

    //மேற்சட்டையை கழற்றுவதற்கு தைரியம் இல்லாத ஹீரோக்களுடன்//
    உடம்பு நல்லா இருந்தாத் தானே?
    பெண்களும் நீலப் படம் பார்ப்பார்கள். அதிலும் கறுப்பினத்தவர் நடிப்பது. இது ஓவர் தான், ஆனால் யதார்த்தம்.

    பிராட் பிற் தெரியாட்டி கிளாடியேற்றர் தெரியாது. ஜிம் காரி தெரியாட்டி விக்ரம் ஹீரோ தான். டாம் குருஸ் தெரியாட்டி என் சுவாசக் காற்றே அரவிந்தசாமி சூப்பர் மான் தான்.

    இவர்களைத் தெரியாதவர்களை எப்படி உலகம் தெரிந்தவர்கள் என்று சொல்லலாம்?

    அப்புறம் உங்கள் அலுவலகத்தில் உள்ளவர்களிடம் இந்தியாவின் மாநிலங்களையோ, தமிழ் நாட்டின் மாவட்டங்களையோ பிழையில்லாம எழுதச் சொல்லுங்கள். அப்புறம் அவர்கள் படித்தவர்களா என்று தீர்மானிக்கலாம்.
    இலாவிட்டால் விசய் நடித்த படங்களை சொல்லச் சொல்லுங்கள். உங்களை நீங்களே நோக வேண்டி வரும்.

    அது சரி ஆண்களுக்கு தங்களின் மனைவி மார் வேறு ஒரு ஆடவனை மனதுக்குள் நினைத்துப் பெருமைப் படுவது பிடிக்குமா?

    கவலைப் படாதீர்கள். நான் சற்று வித்தியாசமாக அணுக நினைக்கிறேன். அவ்வளவு தான். இங்கு பின்னூட்டம் இடவே நிறையப் பேருக்குப் பயம். ஆண்களுக்குத் தான்.

    Comment by pukalini — January7, 2009 @ 23:40

  3. //நன்றி. எனக்குப் பட்டத எழுதினன். இதற்கு ஒத்தாசை செய்கிறவரும் ஒரு ஆண் தான்.
    வாழ்த்துக்கள்! நானும் உங்களுக்கு ஒத்தாசை செய்வதாகவே நினைக்கிறேன்!!

    //பிராட் பிற் தெரியாட்டி கிளாடியேற்றர் தெரியாது. ஜிம் காரி தெரியாட்டி விக்ரம் ஹீரோ தான். டாம் குருஸ் தெரியாட்டி என் சுவாசக் காற்றே அரவிந்தசாமி சூப்பர் மான் தான்.

    இவர்களைத் தெரியாதவர்களை எப்படி உலகம் தெரிந்தவர்கள் என்று சொல்லலாம்?//

    ஹ ஹ ஹ.. இவர்களை தெரியாதவர்கள் உலகம் தெரியாதவர்களா?? இல்லை உலக சினிமா தெரியாதவர்களா?? நிறைய பேர் இவர்களை பற்றி தெரிந்தும், அவர்கள் படம் பார்ப்பதில்லை என்பதே உண்மை!

    //பெண்களும் நீலப் படம் பார்ப்பார்கள். அதிலும் கறுப்பினத்தவர் நடிப்பது. இது ஓவர் தான், ஆனால் யதார்த்தம்//

    இந்த எதார்த்தம் பெருகியும் வருகிறது என்பதும் எனக்கு தெரியும்!! அதற்காக நான் பார்க்கும் பெண்கள் அனைவரையும் “இவ நீல படம் பார்ப்பா” என்று சொல்ல நான் தயாராய் இல்லை!!

    //அப்புறம் உங்கள் அலுவலகத்தில் உள்ளவர்களிடம் இந்தியாவின் மாநிலங்களையோ, தமிழ் நாட்டின் மாவட்டங்களையோ பிழையில்லாம எழுதச் சொல்லுங்கள். அப்புறம் அவர்கள் படித்தவர்களா என்று தீர்மானிக்கலாம்.
    இலாவிட்டால் விசய் நடித்த படங்களை சொல்லச் சொல்லுங்கள். உங்களை நீங்களே நோக வேண்டி வரும். //

    இது பெண்கள் மட்டும் இல்லை ஆண்களுக்கும் பொருந்தும்! இது நாம் கல்வி முறையின் தவறு!! நான் சொல்ல வந்ததும் இதே தான்! சினிமா விஷயத்திலும் ஆணுக்கு பெண் சமம்!! அவர்களும் டி.வி முன்னாடி உட்கார்ந்து உலகத்தை மறந்து போகிறார்கள்!! நீங்கள் சொல்லவந்த கருத்துக்கு சரியான உதாரணம் சினிமா இல்லை என்று தான் சொல்ல வந்தேன்!!

    //அது சரி ஆண்களுக்கு தங்களின் மனைவி மார் வேறு ஒரு ஆடவனை மனதுக்குள் நினைத்துப் பெருமைப் படுவது பிடிக்குமா?

    இந்த விஷயம் ஆணுக்கு பிடிக்காது என்று சொல்ல நான் வெட்கப்பட தேவை இல்லை!! அதே மாதிரி நாம் வேறு பெண்களை நினைத்தால் மனைவி மனம் கஷ்டப்படும் என்று நினைக்காத ஆண்கள் உண்டு என்ற உண்மையை சொல்ல தான் வெட்க படவேண்டும்!

    //தான். இங்கு பின்னூட்டம் இடவே நிறையப் பேருக்குப் பயம். ஆண்களுக்குத் தான்.//

    எனக்கு எந்த பயம் இல்லை! பெண்கள் பற்றி என் பார்வை கொஞ்சம் தெளிவாக உள்ளதாகவே நினைக்கிறேன்!! அதனால் பயம் இல்லை!!

    மீண்டும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!

    Comment by Bhuvanesh — January7, 2009 @ 23:57

  4. //
    பெண்களும் நீலப் படம் பார்ப்பார்கள். அதிலும் கறுப்பினத்தவர் நடிப்பது. //
    கறுப்பினத்தவர் -?… அங்குமா நிற பாகுபாடு …

    //அது சரி ஆண்களுக்கு தங்களின் மனைவி மார் வேறு ஒரு ஆடவனை மனதுக்குள் நினைத்துப் பெருமைப் படுவது பிடிக்குமா?//
    அந்த ஆண் , மனைவியின் தந்தை , தமையன் என்றால் மட்டுமே உடன்பாடு உண்டு …
    அது சரி , எந்த பெண்ணுக்கு , தன் கணவன் மற்ற பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது பிடிக்கும் ?…

    //இங்கு பின்னூட்டம் இடவே நிறையப் பேருக்குப் பயம். ஆண்களுக்குத் தான்.//
    எத்தனை பெண்கள் இதுவரை பின்னூட்டம் இட்டுள்ளார்கள் ?

    Comment by மந்திரன் — January8, 2009 @ 04:21

  5. யோவ் புவனேஷ் … கலக்கிட்ட போ… எப்படி இப்படி யோசிக்கிற?
    இந்த பதிவில் உள்ள உனது பின்னூட்டங்கள் அனைத்தும் யதார்த்தாமாக இருக்கிறது

    Comment by Sriram — January8, 2009 @ 07:14

  6. – bhuvanesh – constructive feedback

    Comment by Varadharajan — January9, 2009 @ 02:22

  7. y7

    Comment by Ragav — February4, 2009 @ 02:34


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: