புகழினி

January5, 2009

பதிவுகளில் நீலப் படங்கள்??

Filed under: சமுகம் — pukalini @ 19:53

கடந்த வாரம் அனைவரினதும்  கவனத்தை ஈர்ந்தது ஒரு சம்பவம். அது  கிளிநொச்சியில் இராணுவ வீரன் ஒருவனால் புலிப் பெண் ஒருவரின் உடலம் வன்புணர்வு கொள்ளப் பட்ட விடயமாகும். அதைப் படமாக்கியதும்  அது வெளியே வந்ததும் ஆச்சரியப் படத் தேவையில்லாதது. அதிலும் சிறப்பு அந்த வீரனின் சமீபத்தியப் புகைப்படம் மீண்டும் இங்கு வெளியாகியது. அவன் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறான். நான் ஏதாவது கோயிலுக்கு நேர்த்தி வைக்கலாம் என்று இருக்கிறன். முடிஞ்சா திருப்பதிக்கு மொட்டை. கடவுளுக்கு நன்றி சொல்லிக் காணிக்கை.

அந்த வீடியோ மிகவும் பரபரப்பாகவும், ஆர்வமாகவும் விமர்சிக்கப் பட்டது. நல்லது தான். இது தமிழ் பேசும் நல்லுலகை விட்டு எவ்வளவு தூரம் வெளியே சென்றது? யாரவது இதில் முனைப்புக் காட்டினார்களா? சும்மா வெறுமனே அதைப் பார்த்து விட்டு உச்சுக் கொட்டி விட்டு போய் விட்டார்களா? இந்த நிகழ்வுக்கும் சாதாரண நான் கடவுள் பட வெளியீட்டு வீடியோவுக்கும் என்ன வித்தியாசம்? மக்கள் மரத்து விடார்களா? இல்லை மனிதம் மரித்து விட்டதா?

ஏன் நமது மனப் பாங்கு எவ்வளவு தூரம் கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் இருக்கிறது? இல்லாவிட்டால் சாதா நீலத்திரைப் படங்களைப் பார்த்துப் பார்த்துப் பழகி விட்டதா? எந்த விதமான வேறுபாடும் அருவெறுப்பும் தெரியவில்லையா? இல்லை, நமது மக்களின் பிணங்களுக்கு கூட நிம்மதி கிடைக்க வில்லையே என்று கலங்க முடியவில்லையா?  அல்லது  நம் இனப் பெண்கள் செத்தும் ஒருத்தனுக்கு உணர்ச்சி வரக் கூடியவாறு இருக்கிறார்களே என்று பெருமைப் பட முடிகிறதா?

எனக்கு ஒரு சந்தேகம். இதைப் பார்த்த எம்மவர்களில் எத்தனை பேர் அந்தப் பெண்ணின் அங்கங்களை ஆர்வத்தோடு பார்த்திருப்பார்கள்? வேதனைப் படுவதுக்குப் பதில் விருப்பத்துடன் பார்த்திருப்பார்கள்? மனச் சாட்சி இருந்தால் உங்களை நீங்களே எடை போடுங்கள்.

தமிழும், தமிழனும் பல்லாண்டு வாழ்ந்து கெடட்டும்.

Advertisements

2 Comments »

  1. வணக்கம் தோழி… உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கி இருக்கிறேன். இது ஒரு தொடர் பதிவு ஆகும். விவரங்களுக்கு http://englishkaran.wordpress.com
    என்ற எனது வலைப் பக்கத்துக்கு வாருங்கள்.நன்றி…

    Comment by Sriram — January6, 2009 @ 08:03

  2. sure. they site which published the fotos are paid by govts. manita urimai meerapattu vittahu endu sollurangal. kevalam ketta piravikal. these bastrads doesnt know to hide the face. that is human rights. thy only want to show what will happen to LTTE if they fight with super powers. most of tamils published this. but enver know the real face of it. this is also sort of power.

    Comment by venkattan — July11, 2009 @ 22:28


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: