புகழினி

January3, 2009

ஒரு பெண் மீண்டும் களங்கப்படுகிறாள்..

Filed under: சமுகம் — pukalini @ 18:34

 உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு.

கல்லூரியில் படிக்கும் போது, அப்போது மூன்றாம் ஆண்டு. எங்களுடன் சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருத்தியும் படித்து வந்தாள். பார்ப்பதற்கு சுமாராகத் தான் இருப்பாள்.  வகுப்பில் ஒருத்தருடனும் ஈடுபாட்டுடன் பேசுவதில்லை.

அவளுக்கும் அடுத்த கல்லூரியில் படித்த வட இந்திய மாணவன் ஒருத்தனுக்கும் கைப்பேசி மூலம் தொடர்பு இருந்து வந்தது. அவள் எங்களது வகுப்பில் படிக்கும் எந்த மாணவனுடனும் பெரிதாக ஒட்டு வைத்தது கிடையாது.

அந்தப் பையனும் இந்தப் பெண்ணை தீவிரமாகக் காதலிப்பதாகச் சொல்லி வந்தான். இருவரும் வார இறுதி நாட்களில் வெளியே சுற்றப் போவது வழமையாகி விட்டிருந்தது. அதிக பட்சம் சினிமாவுக்கு போவார்கள்.

பையன் படு உசார் பேர் வழி. இவளின் மீது அப்படியே பாசத்தைப் பொழிந்து இருக்கிறான். மூன்று மாதமாக உசுப்பேத்தி உசுப்பேத்தி கடைசியாக கோயம்புத்தூருக்கு இராத் தங்கலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறான்.

அங்கு அவர்களின் அடையாள அட்டையை பரிசோதித்த விடுதிக்காரர் அனுமதி மறுத்திருக்கிறார். பாவம் பொண்ணு ஆசை ஆசையாகப் போனது சும்மா வர முடியுமா? ஏதோ சொல்லிச் சமாளிச்சு உள்ளே சென்றிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் ஒரே மஜா தான். இதற்கிடையில் தகவல் வெளியே கசிந்து பெண்ணின் அம்மாவுக்கு மாரடைப்பு. அசராத பெண் இன்னும் கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போகலாம் என்று சொல்லி இருந்து விட்டுக் கிளம்பி இருக்கினம்.

அவ்வளவு தான். அந்த உல்லாச விரும்பி அவளையும் பழைய சிம்மையும் தூக்கி எறிந்து விட்டான்.

விடுதிக்கு வந்தால் ஒரே கலவரம். எல்லா மாணவிகளுக்கும் முன் வைத்து அசிங்கப் படுத்தி விட்டார்கள். அன்று முதல் அவள் வெளியே தங்கத் தொடங்கினாள். கடிபட்ட கொய்யாக் காயை சுவைக்க வகுப்பில் உள்ள சில அணில்களும் நோட்டம் போட்டன. அப்பொழுது தான் பல மாணவர்களின் உண்மை மனப்பாங்கு தெரிய வந்தது. அதிலும் சிலர் முயற்சியை இடை நடுவிலேயே கைவிட்டனர். அடிபட்ட சரக்குக்கு ஓவரா வழியக் கூடாதாம்.

இடையில் ஒரு தரம் கோவா சுற்றுலா. சிலருக்கு ஓசியில் கும்மாளம். அடிக்கடி படமும் ஓடிக் கொண்டிருந்தது. பரவாயில்லை அந்தப் பெண்ணும் நல்லாவே ஒத்தாசையா இருந்திச்சுது.

கடந்த வாரம் ஓர்குட்ல பார்த்தேன். அந்தப் பெண்ணுக்கு கலியாணமாம். அட்ராசக்கை. கடைசியில ஒரு ஆண் மகன் மாட்டினானா? 

தத்துவம்- ஆண்கள் செய்யும் எல்லாப் பாவங்களும் ஆண்களுகே வட்டியும் முதலுமாய் வந்தடையும். எல்லா ஆண்களும் ஊர் மேய ஆசைப்பட்டால்,     அவர்களுக்கு வருகிறவளும் மேயப் பட்டவளாகத் தானே இருக்க வேண்டும். அதற்கென்று ஒரு சமுதாயம் இருக்கா என்ன? எல்லாம் அடுத்தவன் பொண்டாட்டியோ இல்லை சகோதரிகளோ தானே? ஆக மிச்சம் பழி ஓரிடம் பாவம் ஓரிடமா?   அவரவர் செய்ததுக்கு அவரவர் தானே தண்டனை அனுபவிக்க வேண்டும்.

கடைசியாய் அந்த மாப்பிள்ளையும் எந்தத் தியேட்டர் இருட்டுக்க யாருடைய பெண்ணுடன் சல்லாபித்தானோ நல்ல வாழ்க்கை கிட்டி இருக்குது.

இல்லாவிட்டால், மாதவி மாதிரி பெண் வேண்டாம் கண்ணகி மாதிரி நடத்தையுள்ளவள் வேண்டும் என்று விறைப்பாக இருந்திருந்தால் பாவம் அந்தப் பெண் மீண்டும் கட்டியவனுக்கு துரோகம் செய்து களங்கப் படுகிறாள்.


தலைப்பை மாற்றிப் படியுங்கள் ‘தமக்குத் தாமே சூனியம் வைக்கும் ஆண்கள்‘ என்று.

Advertisements

3 Comments »

 1. எல்லாரையும் அடித்து நொறுக்குவது என்ற முடிவோடு தான் வந்து இருக்கிறிர்கள்

  Comment by Varadharajan — January6, 2009 @ 04:28

 2. அக்கா நல்லா தான் இருக்கு.. ஆனா எல்லா தப்பும் ஆண்கள்னு சொல்றது மட்டும் எனக்கு உடன் பாடு இல்லை!! மனசாட்சியுடன் சொல்லுங்கள் அந்த பையன் மட்டும் தான் “அதற்க்கு” கோயம்புத்தூர் போனனா? அந்த பெண்ணும் தெரிந்து தானே போயிருக்க வேண்டும்??
  அதே மாதிரி களங்கம் என்று வரும்போது அந்த பெண்ணுக்கு மட்டும் களங்கம், ஆணுக்கு அது ஏதோ பெருமை என்று நாம் (நாம் என்றால் சமுதாயம்) பார்ப்பதிலும் எனக்கு உடன் பாடு இல்லை!!

  இந்த இடத்துல பதில் போட்டதால நாம் ஆணாதிக்க சமுதாயம்னு பச்ச குத்தீராதீங்க!

  Comment by Bhuvanesh — January6, 2009 @ 23:42

 3. புவனேஷ் சொல்வது மிகச்சரி.. புகழினி இன்னும் சரியான் ஆண்களை பார்க்கவில்லை போலும்.. அல்லது தப்பான வட்டாரத்துக்குள் இருக்க வேண்டும்..

  Comment by குமரன் — January8, 2009 @ 13:34


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: