புகழினி

January3, 2009

அரைகுறை ஆடைகளும் -ஆட்டக் கார அம்மணிகளும்

Filed under: சமுகம் — pukalini @ 02:53

பின்னூட்டங்களுக்கும், உலாவுதலுக்கும் நன்றி.
பதில்கள் போடப் பட மாட்டாது.
காரணம்- சொந்தப் பாதுகாப்பு.

அப்புறம்,
நான் முன்னர் எழுதியது ஆடைகளைப் பற்றியது அல்ல. கவன ஈர்ப்பான்களைப் பற்றி. ஆண்களுக்கு கவனக் கலைப்பான் பெண்களின் ஆடைகளில் இருக்கா? இருந்தால் பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்.

லோஷன் கேட்டிருந்தார், பெண்கள் மட்டும் அரைகுறை ஆடைகளுடன் வந்து ஆண்களுக்கு சூடேற்றுவதில்லையா என்று. ஆமாம் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் வருகிறார்கள் தான். அதனால் ஆண்கள் சபலப் படுகிறார்கள் தான். ஏன்?

கடந்த வருடம் வெளிவந்த திரைப்படங்களை ஒருக்கால் பாருங்கள். எந்த நாயகனாவது மேலாடை இல்லாமல் வந்திருக்கிறானா? அமீர் கானைப் பாருங்கள். இருக்குது காட்டுறாரு. நமது  தமிழ் நடிகர்களால் முடியுமா? சிலரைத் தவிர்த்து.

ஆனால் எல்லா நாயகிகளையும் உரிந்து, உரிந்து காட்டினார்களே ஏன்? எல்லாருமே ஆண் ஆதிக்க வாதிகள். உடைகளை கழட்ட முடியாட்டி நடிக்க முடியாது. அவர்களுக்கு ஆடைகளை வடிவமைத்தவர்களும் ஆண்கள்.  ஆக  மொத்தம் பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும்,  அவர்கள் எப்படி உடுத்த வேண்டும் என்பதெல்லாம் ஆண்களைப் பொறுத்த விடயம். ஆனால் ஆண்களை எந்தப் பெண்களாவது வற்புறுத்துவது உண்டா?

தங்களையே மேயக் கொடுப்பவர்களுக்கும், தம்மையே சமர்ப்பணம் ஆக்கியவர்களுக்கும் இதெல்லாம்  வெறும் தூசிகள். தட்டி விட்டுப் போய்விடுவார்கள்.

ஆக மொத்தம் பெண்களுக்கு வழிகாட்டுவது ஆண்கள் தான்.
அது பொதுப்படையானது.

அதேமாதிரி  வேறு சில பெண்கள்  உள்ளார்கள். அரைகுறையாக மடிப்புகளும் வெடிப்புகளும் தெரிய உடுத்துபவர்கள். இவர்களும் நான் முன்னர் குறிப்பிட்ட ஆண்கள் வகையைச் சேர்ந்தவர்கள் தான். மன நோய் முற்றிய வெளிப்பாடு.

அதாவது, எந்த ஒரு மனிதனுக்கும் தன்னைப் பிறர் கவனிக்க வேண்டும், பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்ற ஆவல் இருக்கும். அதனை எவ் வழியிலாவது நிறைவேற்ற கங்கணம் கட்டிக் கொண்டு திரிவார்கள். மேலே சொன்னவர்கள் எல்லாம் அதே வகைப் படுத்தலுக்குள் வருபவர்கள்.

சில அம்மணிகள் தாங்கள் தான் ஏதோ அழகைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் மாதிரி நடந்து கொள்ளுவார்கள். நாகரிக அம்மணிகளாம்.  அம்மணிகள் மணி அடிக்காத குறை தான் தங்களைப் பிரசன்னப்படுத்த. முடிந்தால் கையுடன் சில தேரைகளையோ, தவளைகளையோ எடுத்துச் சென்று போட வேண்டிய இடத்தில் போடுங்கள். நல்ல கண்காட்சி கிடைக்கும்.  வாழ்க்கை வெறுத்து துறவும் கொள்ள வேண்டி வரும். சில வேளைகளில்.

ஆண்களிலும், பெண்களிலும் பல குணாதிசயங்கள் ஒத்துப் போவது உண்டு. பெண்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக உடுத்தினால் ரசியுங்கள். ஆவேசப் படுத்தினால் அனுபவியுங்கள். முடிந்தால். அவர்களும் நாடுவது அதே. அளவுக்கு மீறினால் குழி தோண்டிவிட்டு எழுதுங்கள் ‘வாழத் தகுதியற்றவள் ‘என்று.

Advertisements

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: