புகழினி

January1, 2009

பெண்களை மடக்க ஐ-போன்

Filed under: ஆணாதிக்கம்,சமுகம் — pukalini @ 20:21

நான் கடந்த வாரம் தொடருந்தில் பயணிக்கும் போது எனக்கு முன்னால் இருந்து ஒருவன் அண்மையில் சந்தைக்கு வந்த ஐ -போனுடன் விளையாடிக் கொண்டி இருந்தான். அது அவனது ஆர்வ மேலீட்டால் அல்ல. முன்னுக்கு இருக்கும் என்னை மாதிரி சாதா பிகருகளுகு சீன் போடத் தான் என்று தெளிவாகவே புரிந்தது. நாங்க என்ன செய்வம் கையில இருந்தது ஒரு ஓட்டை நோக்கியா செங்கல்லு. பொறுமைக்கும் ஒரு அளவு இல்லையா?  எனது ஓட்டை செங்கல்லை எடுத்து ஒரு குறுந்தகவல் அனுப்பினேன். எனக்குத் தான்.அது  கைப்பைக்குள்ள இருந்த  ஐ-போனை உலுக்கியது, வெளியே எடுத்து   அடுத்த இலக்கத்துக்கு மீண்டும் ஒரு தகவல். மீண்டும் சிணுங்கல். வெளியே எடுத்தன் சம்சுங் ஒம்னியா. பாவம் பொடிப்பயல் ஆளக் காணம்.


இப்படித்தான் பலர் பெண்களை அசத்துறன், மயக்குறன் பேர்வழி என்று மூக்குடைபடுகின்றனர். பெண்ளிடம் வாங்குவதற்கு வேண்டுமானால் பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் விபரம் புரியாத வெள்ளேந்திகள் இல்லை. அவர்களுக்கும் பலதும் புரியும். ஆண்களைப் பார்க்கிலும்.

அது சரி. போன் ஆசாமிய மடக்கியாச்சு. சிலர் உள்ள போட்டிருக்கும் உள்ளாடைகளின் பிராண்டைக் காட்டிக் கொண்டு திரிவார்கள். ஏன்? இரண்டு நாளா ஒன்றைப் போடுவதில் அசிங்கம் இல்லை. ஆனா போட்டுக் காட்டுவார்கள். அதற்கு நான் முன்னர் செய்த மாதிரிப் பதிலடி எல்லாம் கொடுக்க முடிவதில்லை என்று எப்பவும் ஒரு மனவருத்தம்.

அதுசரி ஏன் இப்படி ஒரு மன ஓட்டம் ஆண்களிடம் இருக்கிறது? பெண்கள் பணத்தைக் கண்டால் வழிவார்கள் என்று எந்த மடப் பயல் சொன்னது. மாட்டுவார்கள். எப்படியான பெண்கள் என்று இங்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதற்காக எல்லாப் பெண்களுக்கு முன்னும் உதார் விட வேண்டிய அவசியம் என்ன? இதே மாதிரித் தானே உங்க மனைவி, பிள்ளைகள், சகோதரிகளுக்கு முன்னும் பலர் உதார் விடுவார்கள். கொஞ்சமாவது சுரணை இருக்காதா?


மேலும், பாவப் பட்ட பிறப்புகள் தங்களில் தாமே நம்பிக்கை வைக்காமல் வெளிநாட்டுக் காரன் செய்த பொருட்களைக் காட்டி சீன் போடுகிறார்கள். இது எத்தனை நாட்களுக்கு எடுபடும்? இன்னுமொருவன் புதுசா ஒன்றைக் காட்டும் வரைக்குமா?இவை எல்லாம் ஆண்மைக் குறைபாடுகளின் வெளிப்பாடு என்று பெண்கள் தங்களுக்குள் குசுகுசுப்பது இவர்களுக்கு கேட்பதில்லை.

பெரிய மனுசங்களாகக்  காட்டிக் கொண்டு  தாங்களாவே சிறுமைப் படுகிறார்கள்.

இன்னுமொன்று, இருவர் தாம் பார்த்த தமிழ்த் திரைப்படத்தைப் பற்றி ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு வந்தனர். நான் பக்கத்திலி இருந்தவளிடம் சொன்னேன் ‘பார்ப்பது தமிழ்ப்படம், அதிலும் திருட்டு சீடில, பேசுறது  டயானாவிண்ட  கள்ளப் புருசன் மாதிரி’ன்னு. சத்ததைக் காணம்.

6 Comments »

 1. உண்மை தான் சகோதரி.. எல்லோரும் ஒரு கால கட்டத்தில் இந்தக் காட்டல் பருவத்தைக் கடந்து தான் வாழ்க்கையில் பயணிக்கிறோம்..

  சீன் போடுவது என்று நாம் இத்தனை சொல்லிக் கொள்வோம்..
  உங்களைப் போல ஒரு சில பெண்கள் விதி விளக்கேன்றாலும், பல பெண்கள் இவற்றுக்கு விழுந்து விடுவதும் உண்டு தானே.. பாவம்.

  ஆனால் பெண்கள் மட்டும் எதுவுமே காட்டுவதில்லையா?
  அரைகுறை ஆடைகளோடு வீதிகளில் செல்லும் பெண்கள் எதற்காக அவற்றை அணிகிறார்கள்? அந்த ஆடைகளில் தெரியும் அவர்கள் அங்கங்களைப் பார்க்கும் போது மட்டும் ஆண்கள் காமுகர்களாகத் தெரிகிறார்களே..
  திறந்து கிடக்கும் எவையும் பார்க்கத் தூண்டும் தானே.. இதுவும் மனக் குறைபாடா?

  Comment by லோஷன் — January2, 2009 @ 01:20

 2. \\பெரிய மனுசங்களாகக் காட்டிக் கொண்டு தாங்களாவே சிறுமைப் படுகிறார்கள்\\

  இது அருமை

  எல்லோருக்கும் பொருந்தும்.

  Comment by ஜமால் A M — January2, 2009 @ 01:45

 3. unmaithan

  Comment by buruhani — January2, 2009 @ 06:06

 4. pukalini ungal purathikaramana
  sinthanaigal arumayaga ullathu
  ungal blog padichite erukalam pola erukku
  athanaiyum nitharsana unmai

  Comment by sakthiselvi — February25, 2009 @ 06:01

 5. போட்டுக் கிழிச்சிட்டீங்க. சட்டுன்னு யாரு வேணும்னாலும் மடக்குறதுக்கு பெண்கள் என்ன ஈசி சேர்-ஆ?

  ஐபோன் ஒரு நல்ல கைபேசி என்றாலும், விலை மிக அதிகம், அதை விட குறைந்த விலையில் நோக்கியா மற்றும் பல கைபேசிகள் அதே வசதிகளை தருகின்றன.

  Comment by Joe — May27, 2009 @ 09:55

 6. =

  Comment by karthik — June26, 2009 @ 04:49


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: