புகழினி

December30, 2008

முதுகுத் தண்டு அறுவைக்கு வரதட்சணை

Filed under: சமுகம் — pukalini @ 18:32

கொஞ்சம் சுய புராணம்.
நான் இரண்டு வருடங்களுக்கு முன் காதலிக்க ஆரம்பிக்கும் போது வீட்டிலே ஒரே ரகளை. கெடுபிடி. ஒன்றும் செய்ய இயலவில்லை. சட்டுபுட்டென்று கிளம்பி விடுதிக்கு வந்து விட்டேன். அன்றிலிருந்து இன்று வரை அவர் தான் எனக்கு எல்லாமே. படிப்பு, மற்றும் இதர செலவுகளுக்கும் அவர் தான் இன்னமும் பொறுப்பு. திருமணம் ஆகாத தம்பதிகள்.

அவருக்கு ஒரு தங்கை, ஒரு தம்பி உண்டு.அவர்களுக்கு ஒரு வழி சமைக்கும் வரைக்கும் நாங்கள் காத்திருக்கிறோம். அவர் தானே உழைத்து, தனது சொந்தப் பணத்திலேயே எங்களது திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று ஆவல் கொண்டு கடுமையாக உழைக்கிறார்.

இதற்கிடையில் வீட்டுச் செலவுகளையும் கவனிக்க வேண்டும். அவரது அப்பா, அம்மா மற்றும் தங்கையின் திருமண ஏற்பாடுகள். நிறையவே சிரமங்கள். இருந்தாலும் சளைக்காமல் எல்லாவற்றையும் கவனித்து வருகிறார். என்னிடமோ, எனது வீட்டாரிடமோ ஒரு பைசா கூட கேட்டதில்லை.

எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒரு ஆணைக் காதலித்ததுக்கும் அவனை ஆண்மையுடன் மணம் முடிப்பதற்கும்.

சரி, நம்ம விடயத்துக்கு வருவோம்.
இன்று திருமணம் முடிக்க காத்திருக்கும் எத்தனை இளங் காளைகளுக்கு வரதட்சணை எதிர்ப்புக் கொள்கை இருக்கிறது. தங்கையின் திருமணத்திற்காக, தம்பியின் படிப்புக்காக, படிப்புச் செலவுக்காக, வீட்டுக் கடனுக்காக என்று அடுக்கடுக்கான காரணங்களுடன் பெண் வீட்டுப் படியேறி பிச்சை எடுக்க எத்தனை பேர் ஆயத்தமாகி விட்டார்கள்?

தங்களது குடும்பத்தையே கரையேற்ற முடியதவர்கள், உழைத்துக் காப்பாற்ற இயலாதவர்களுக்கு திருமணம் ஒரு கேடா?முடிந்தால் தனது கடமைகளை ஒழித்து விட்டு மணவறைக்கு வரலாமே? தன்னுடன் வாழ வருபவளை வாட்டித் தான் ஒரு ஆண் மகனால் வாழ்வில் உயர முடியுமா? அப்படியாயின் அவன் ஆண் மகன் தானா?

இதுக்கே அலையுறவங்கள் மணமான பின் குழந்தை பிறந்து அதற்கு ஒரு அவசர மருத்துவச் செலவுக்கு யாரிடம் கையேந்துவார்கள்? அல்லது பிரசவத்துக்குத் தானும் நல்ல மருத்துவ மனைக்கு அழைத்து செல்வார்களா?

வரதட்சணை வாங்குபவர்களுக்கு அந்தப் பெண் தனது வீட்டுக்கு வாழ வரப் போகிறவள் என்ற சிந்தனை கொஞ்சமாவது இருக்காதா? தினமும் இரவு படுக்கையில் என்ன நினைத்து படுத்திருப்பாள் என்ற எண்ணம் வராதா? வெறும் மரக் கட்டையுடன் தான் கலவ வேண்டும் என்று யோசிக்க மாட்டார்களா?

ஆக மொத்தத்தில் சுய நம்பிக்கை இல்லாதவர்களும், சோம்பேறிகளும், சோமாரிகளும், சுய நலவாதிகளும் தான் வரதட்சணை என்ற பரிசை எதிர்பார்த்து நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களை எல்லாம் பிடித்து வரதட்சணை செலவிலேயே முள்ளெலும்பை நிமிர்த்த ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

Advertisements

4 Comments »

 1. arumaiyana pathippu, padithuvito-aangal thirunthinal nallathu.

  Comment by buruhani — December31, 2008 @ 06:13

 2. நீங்கள் ஒருத்தர் மட்டும் தான் இப்படி கிளம்பி இருகிரிர்களா ?

  Comment by Varadharajan — December31, 2008 @ 07:26

 3. //ஆக மொத்தத்தில் சுய நம்பிக்கை இல்லாதவர்களும், சோம்பேறிகளும், சோமாரிகளும், சுய நலவாதிகளும் தான் வரதட்சணை என்ற பரிசை எதிர்பார்த்து நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.//
  சரியாக கூறியிருக்கிறீர்கள்.நன்றி.

  Comment by Chandran — December31, 2008 @ 07:44

 4. சிந்திக்க ஆரம்பித்த சமுகத்தில் பிறந்த நீங்கள் கேள்விக்கணைகளைத்தொடுத்திருக்கிறிர்கள். சிந்தனை மறுக்கப்பட்ட நாங்கள் என்ன செய்திருக்க முடியும்.
  அன்புடன்
  கமலா

  Comment by kalyanakamala — January1, 2009 @ 11:55


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: