புகழினி

December29, 2008

வயசுக்கு வந்துட்டாங்க…

Filed under: Uncategorized — pukalini @ 01:04

பெண்கள் காலாகாலத்துக்கு வயசுக்கு வாறது மிகவும் நல்லது தான். மனித சந்ததியினை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவதில பெண்களின் பங்கு மிகவும் அளப் பெரியது. அதற்காக இறைவன் கொடுத்திருக்கும் ஒரு அபூர்வ சுற்றோட்டம் தான் இந்த வயசுக்கு வாற நிகழ்வும். விஞ்ஞான மொழியில் மாதவிடாய் சக்கரம் ஆரம்பிக்கும் நிகழ்ச்சி.


சரி, விடயத்துக்கு வருவோம். ஒரு பெண் வயசுக்கு வந்தால் அதை ஊர் முழுவதும் தண்டோராப் போட்டு சொல்ல வேண்டுமா? அது அந்தப் பெண்ணின் மனதில் எந்த வகையான எண்ணங்களை உருவாக்கும், அவள் எவ்வளவு  கேவலமாக நோக்கப் படுவாள் என்பது அவளது பெற்றோருக்கும், சுற்றத்தாருக்கும் புரிவதில்லையா?


பழைய காலங்களில் பெண் வயசுக்கு வந்ததுமே குழந்தை பெறத் தயாராகி விடுகிறாள். அடுத்தது  கலியாணம் தான். அப்படிப் பட்ட கால ஓட்டத்தில் எங்க வீட்ட ஒண்ணு ரெடியாகி விட்டது. யாராவது வந்து கூட்டுட்டு போங்கடா எண்டு  சொல்லாமச் சொல்வதற்கு இந்த மாதிரி விசேசங்கள் எல்லாம் நடத்தினார்கள்.


இன்று எல்லோருக்கும், எல்லாமே தெரியும் நிலை. வயசுக்கு வந்து, 15 வருடங்களுக்கு பின்னர் மணம் முடிக்கும் நிலைமை. இப்பவும் இப்படியான அசிங்கம் பிடித்த, செல்லாக் காசுக்கு கூட பெறுமதியற்ற சடங்குகள் தேவையா?

வீட்டில் உள்ள பெரியோர் உரிய வயது வந்ததும் பெண்களுக்கு உடலியல் மாற்றங்களை புரியக் கூடிய வகையில் தெளிவு படுத்த வேண்டும். அவர்கள் அதை ஒழுங்கான முறையில் எதிர் கொள்ள வகையில் பக்குவப் படுத்த வேண்டும். அதை விடுத்து கீற்றுக் கொட்டகை போடுற வேலைகளை  எல்லாம் மூட்டை கட்டி விட வேண்டும்.

சில வேளைகளில் மூத்த பெண்ணுக்கு விசேடமாக சடங்கு செய்து இருப்பார்கள். அடுத்ததும் தனக்கு இப்படி நடக்கும் என்று கற்பனைகளை வளர்த்து இருக்கும். அப்பொழுது  பெரியது பெரியாளாகியிருக்கும். பெரியவளுக்கும் இச்சடங்குகள் பிடிக்காமல் போயிருக்கும். இதை எப்படி சிறியவளுக்கு புரிய வைப்பது?  இல்லாவிட்டால் அவளுக்கு தன்னை ஒதுக்குவதாக ஒரு தோற்றப் பாடு ஏற்பட்டு விடும். ஆகக் குறைந்தது அயல் வட்டாரங்களில் செய்வது போல தனக்கும் செய்யவில்லையே என்றாவது  யோசிப்பாள்.  பெரியவர்களானதும் அது எவ்வளவு அசிங்கம் என்று அவர்களே உணர்வார்கள். ஆனால் அந்த வயதில் ஏற்படும் எதிர்பார்ப்புகளை எப்படி ஒதுக்குவது? இதுஎனது சொந்த  வாழ்வில் ஏற்பட்ட அனுபவம்.


இதை எப்படி இல்லாதொழிப்பது?

Advertisements

3 Comments »

 1. நல்ல சிந்தனை. உங்களுக்கு புகழ் இனி மேல் தான். நீங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  Comment by மதியரசு — December30, 2008 @ 01:00

 2. The views expressed by the writer, are cent percent correct. But, all these superstious beliefs will be vanished in the due course of time, when all our people get proper education…inturn, they need to educate their family members also…..Good Article…Time is the best medicine…for all these ageold rituals…

  Comment by BALAJEE — December30, 2008 @ 03:33

 3. முந்தைய நாட்க‌களில் வயதுக்கு வந்த பெண் மனக்குழப்பத்துக்கு உள்ளாகாமல் மகிழ்ச்சியுடன் தன் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளவும் இந்த விழா உதவியிருக்கலாம். காலத்துக்கு ஏத்தாப்போல மாத்திக்கொள்வதுதான் நல்லது
  கமலா

  Comment by kalyanakamala — December30, 2008 @ 10:28


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: