புகழினி

December29, 2008

ஆண்-(அ)சிங்கங்களா?

Filed under: Uncategorized — pukalini @ 19:14

ஈரோட்டில் இருந்து  மதுரைக்கு வந்து கொண்டிருந்தேன். பாத்திமாக்  கல்லூரிக்கு முன் வரும்போது அங்கு வைக்கப் பட்டிருந்த தட்டி ஒன்று மின் கம்பிகளின் மீது விழுந்து எரிந்தது. மின்மாற்றி கூட வெடித்து விட்டது.

அது ஒரு கலியாண வாழ்த்துத் தட்டி. அதிலிருந்த படங்களை நன்றாக உற்றுப் பார்த்தேன். ஏனென்றால் நான் கொஞ்சம் சுமாராகத் தான் இருப்பேன். அதிலிருந்த மூஞ்சிகளுடன் என்னை ஒப்பிட்டேன். பரவாயில்லை, எனக்கு எப்படியும் ஒரு 100 அடியிலயாவது தட்டி வைப்பார்கள் என்று திருப்திப் பட்டுக் கொண்டேன்.

அப்புறமா யோசித்துக் கொண்டே வீட்டுக்கு வந்தேன். அது என்ன ஒரு  பழக்கம்?காது குத்துறது, சடங்கு, கலியாணம் என்று எதுக்கெடுத்தாலும் தட்டி வைக்கிறது. அதுவும் அனுமதி பெறாமல்,எல்லோருக்கும் இடைஞ்சலாக. முடிஞ்சாலும் களட்ட மாட்டாங்க. குப்பை. இருந்தாலும், சிலருக்கு கூலி குடுக்குது. பிரிண்டிங் வேலை வாய்ப்பு. அந்த சீலைகள் குடிசைகளுக்கு மழைத் தண்ணீர் ஒழுகாமல் இருக்க, பெண்கள் மறைப்புக் கட்டிக் குளிக்க  என்று  உதவுகின்றன.

விடயத்துக்கு வருவோம்,

அந்தத்  தட்டிகளை பெரிதும் ஆக்கிரமிப்பது ரசினி, அசித், விசய் படங்கள் தான். அவர்களின் ஆசீர்வாதத்தால் தான் விழாவே சிறப்பா அமையுமாம். இவங்களால தான் அவங்க வாழுறாங்க. அவங்களுக்கு இவங்களில யாரைத் தெரியும். மிஞ்சிப் போனா ஒரு கடவுள் படமாவது போடலாம். அதிலும் யாரோட பெரிசு என்று போட்டி வேற.

நான் யோசிப்பதெல்லாம் ஒன்று தான். முடிஞ்சா அப்பா, சித்தப்பா, மாமா,அண்ணன் படங்கள போடுங்க. எதுக்கு  கண்டவனிண்டயையும் போட்டு அசத்தப் பாக்கிறீங்க? உங்க படங்கள போட்டா மரியாதை கிடையாதா? யாரென்றே தெரியாதா?  நீங்கள் எல்லாம் ஆண் மக்கள் தானா? அப்புறமா எதுக்கு இந்த காவடி தூக்குற வேலை? வெட்கமா இல்லையா? முடிஞ்சா உங்கட படத்தை போடுற அளவுக்கு உங்கள உயர்த்துங்க. இல்லாட்டி போத்துகிட்டு படுங்க.


பாவப் பட்ட பிறப்புகள் பெண்கள் தான். அதிலும்  அவங்களுக்கு  இடம் கிடையாது. அதில போடுற படங்கள  ஓராள்  இரவில பார்த்தால் கண்டிப்பா மாரடைப்பு தான் வரும் அவ்வளவுக்கு கர்ண கொடூரமா இருக்கும்.   இப்படி சட்ட விரோதம் பண்ணினா அரசு ஒண்ணுமே பண்ணாதா?


Advertisements

3 Comments »

 1. katkavendiya kelvi yosikka vendiya pathil.

  “thamizhachi” sayal ullathu perthukunga

  Comment by bala — December29, 2008 @ 21:29

 2. நீங்கள் உங்கள் கருத்துக்களை உரக்கச் சொல்லுங்கள். இந்த உலகம் விழித்தெழ. ஒரு தனிப் பெண்ணாக போராடுவதால் நான் உங்களுக்கு கட்டவுட் வைக்கப்போகிறேன். நன்றி

  Comment by மதியரசு — December30, 2008 @ 01:15

 3. 🙂

  Comment by Varadharajan — December31, 2008 @ 07:19


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: