புகழினி

December26, 2008

மக்கள் சீனம்?

Filed under: Uncategorized — pukalini @ 19:21


கன்பூசியஸ், மார்க்ஸ், மா ஓ எனப் பல தரப்பட்ட தலைவர்களின் கொள்கைகளை அடியொற்றி வந்த நாடு. மக்கள் சம உடமையின் வசீகரத்தை அனுபவித்து வந்தனர். இதற்கு அவர்கள் கொடுத்த விலைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. சிலவற்றை இழந்து தான் பலதையும் பெற முடியும். மக்களும் வாழ்வின் ஆதார வசதிகளுக்கு குறைவில்லாமல் சுகமாகவே இருந்தனர். சாதாரண மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் குறைந்தன.

உலகின் நவீன காலனித்துவச் சுழலில் சீனாவும் சிக்கத் தொடங்கியது. உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை தேட வேண்டிய கட்டாயம்.

ள் நாட்டுத் தேவைகளுக்கு மித மிஞ்சிய தயாரிப்புகள். அடிப்படை உற்பத்திகளை விட ஏற்றுமதிகளுக்கு அதிக முக்கியத்துவம். பணத்தின் மீது தீரா மோகம். காரணம், வல்லரசு மேன்மைக்கான ஆவல். ஆயுதக் குவிப்புக்கான நிதிச் சேகரிப்பு.

மக்களும் தமது அடிப்படை தேவைகளை விட்டு பணப் பொருளாதாரத்தில் நாட்டமடைந்ததால், வெளியுலக சந்தையை கண்டிப்பாக நாட வேண்டிய நிர்ப்பந்தம். விளைவு தனது சந்தைகளையும் உலகுக்கு திறந்து விட வேண்டிய நிலை. ஆக மொத்தம் முதலாளித்துவத்துக்கு அடியெடுத்து வைத்தாகி விட்டது.

இருந்தாலும் மக்கள் இன்னமும் பழைய கட்டுக் கோப்புகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் உள்ளேயே உள்ளனர். புதிய முறையில் பணக்காரர் பயங்கரப் பணக்காரர் ஆக ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர்.ஆக மொத்தம் பழைய அடிமைத்தனமும், புதிய அடிமைத்தனமும் சேர்ந்துள்ளன. போததற்கு கருத்துரிமையும் மறுக்கப் பட்டுள்ளது.  ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி அனுமதிக்கப் பட்ட பல செய்தித் தளங்கள் மீண்டும் தடை செய்யப் பட்டுள்ளன.

சீனா என்ன தான் செய்கிறது? தான் வல்லரசு என்று யாருக்கு காட்ட வருகிறது? சொந்த மக்களுக்கு சுதந்திரமான வாழ்வை வழங்க முடியாத நாடு எப்படி வல்லரசு ஆக முடியும்?

Advertisements

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: