புகழினி

கவரும் ஆண்கள்..

தைப்பொங்கலும் வருது.  உள்ளூர்த் தலைகளின்  படங்கள் வேற வரப் போகுது, ரசிகப் பட்டாளங்களுக்கு ஒரே குஷி தான். இப்பவே தட்டிகள், போஷ்டர்கள் என்று செம அமர்க்களமா இருக்குது. படங்கள் வெளியாகும் அன்றைக்கு பாற்குடங்கள் எடுப்பதுக்கு இப்பவே சில கூட்டங்கள் தயாராகி விட்டன. அவற்றிற்கு காவடி எடுக்க பல பேருடைய தாலிகள் ஏற்கனவே அடவு கடைகள் ஏறியும் விட்டன. பாவங்கள் இப்படியே உழன்று செத்துத் தொலைய வேண்டியது தான். இவர்களுக்கு திருப்பவும் பெற்றோல் விலை கூடுகிறது என்பதோ அது ஏன் குறையாது அல்லது குறைக்கப் படமாட்டாது என்பதோ புரியாது.  நாட்டின் உற்பத்தி சக்தி வெறுமனே தியேட்டரில் விசிலடிக்க மட்டுமே வாயைப் பயன்படுத்துகிறார்கள்.

அப்புறம் சில கூட்டம் தாங்கள் ஏதோ படித்திருக்கிறார்களாம். அதனால் ரசிகர் மன்றத்  தலைகள் , வாலுகள் என்று புலம்பிக் கொண்டு அலைகிறார்கள். இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்துக்கு வேறு பொழுது போக்கு என்ன தான் இருக்குது?

ஆனாலும் சிலர் இதில் நல்ல தெளிவாக உள்ளார்கள். அதிலும் பெண்கள் படு சுட்டி. தேவையில்லாம உள்ளூர் தலைகளுக்கு தீவர்த்தி பிடிப்பது இல்லை. பிடித்தாலும்  புளியங் கொம்பாப் பிடிப்பம் என்று ஜிம் காரியோ, பிராட் பிட் அல்லது டாம் குருஸோட கனவு காண்கிறார்கள். அதிலும் சிலருக்கு நினைப்பு பெண்கள் எல்லோரும் தங்கட தலைகளுக்குத் தான் வாலுகள் என்று.  நாட்டில் உள்ள பாக்கம், பட்டிகளிலுள்ள கருப்பாயிக்கோ, ராக்கம்மாவுக்கோ இவர்கள் தலையாகலாம். ஓரளவுக்கு உலகம் தெரிந்தவர்களுக்கு? அவர்களும் கனவு காண்பார்கள். தலையணையை அணைத்துக் கொண்டு தூங்குவார்கள். தூக்கத்தில் உல்லாசம் காண்பார்கள். ஆனாலும் சுத்த மோசம்.  மேற்சட்டையை கழற்றுவதற்கு தைரியம் இல்லாத ஹீரோக்களுடன் இல்லை. அறு வெட்டு எட்டு மடிப்புகள் உள்ள ஹீரோக்களுடன். கனவிலையாவது சந்தோசம் துய்க்க முடியாதா?

சிலர் இதை தப்பு எனலாம். கற்புக் கெட்டுப் போய் விட்டது எனலாம். ஆனாலும் இந்த பழக்க ,வழக்கத்தை கலாச்சாரம் ஆக்கியது யார்? ஆண்கள் மட்டும் திரிஷா, நயன்ஸ் என்று கனவு காணவும் ஜொள்ளு விடவும் பெண்கள் மட்டும் என்னவாம்?  முடிந்தால் திரிஷாவின் குளியலறைக் காட்சியை ஓடி ஒடிப் பார்க்கிறது, அப்புறம் வேடம் போடுவது ஏன்? பெண்களும் உணர்வுகள் உள்ள விலங்குகள் தானே?

பெண்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் பலர்., ஓரமா ஒதுங்கி இருந்து தம் அடிப்பவர்கள். மோட்டார் பைக்கில் போகும் போது ஹெல்மட் போடுபவர்கள், வீதி  சமிக்கைகளை மதிப்பவர்கள் என்று பலரும் இருக்கிறார்கள். கண்டிப்பாக கண்டவனுக்கும் காவடி எடுப்பவர்களை எவளுக்கும் பிடிக்காது. தன்னைத் தானே நாயகனாக நினைப்பவனை எவருக்குமே பிடிக்கும்.

Advertisements

2 Comments »

  1. என்னயும் எவளுக்காவது புடிக்குமா?

    Comment by வசந்த் — May5, 2009 @ 13:29

  2. கண்டிப்பாக. அதற்கு தகுந்தவளை நீங்கள் பிடிக்க வேண்டும்.

    Comment by pukalini — May5, 2009 @ 19:15


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: