புகழினி

June26, 2009

மலையாழத்தியுடன் 3 வருடங்கள்.

Filed under: மலையாளி — pukalini @ 01:14

நண்பனின் கதை.

மணி 11 ஆகி இருக்கும், கட்டிலில் குப்புறப் படுத்து பாதி சாமத்தைத் தாண்டி இருப்பேன். எனது அறை வாசிகள் எல்லோருமே துடிச்சுப் பதைத்து எழுப்பினார்கள். என்னடா கண்றாவி  எண்டு கேட்டால், பக்கத்து விடுதியில் இருக்கும் மலையாள துண்டுக்கு  காலையில் பிறந்த நாளாம். நான் அண்ணன் ஏதாவது செய்ய வேண்டுமாம்.  அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை. போதாதற்கு அந்தப் பெண் வெறு எனது வகுப்புவாசி. சரி ஏதாவது செய்து தொலையுங்கடா என்று சொன்னது தான் தாமதம். ஆளாளுக்கு ஒரு திட்டம் போட்டாங்கள். கடைசியில் ஒரு மட்டையைக் கொடுத்து விடலாம் என்று முடிவானது. அதுவும் யாரோ ஒருத்தன் தனது நண்பனுக்கு கொடுக்க இருந்தது. பெயரும் எழுதியாச்சுது. அப்புறமா குழப்பம் ஆரம்பமாச்சுது. யாருக்கு பிறந்த நாள் என்று. எனக்குத் தெரிந்து என்னுடன் இரண்டு மலையாளத் துண்டுகள் படிக்கின்றன. யாருக்கு என்ன பெயர் என்று இன்னமும் தெரியாது. இருவருக்கும் இரு சொல்லில் ஒரே மாதிரியான பெயர்கள். ஒன்று குண்டு. அடுத்தது ஒல்லி. அப்படித் தான் நாங்கள் அடையாளம் காண்பது.  நாங்கள் குண்டுப் பெண்ணுக்கே பெயரெழுதி விட்டோம். அப்புறமா அது ஒல்லிக்கு என்று தெரிந்து பெயரை மாற்றி அது தெரியாமல் இருக்க ரோசாப் பூவும்  கீறி கொடுத்து விட்டாச்சு. அங்கிருந்து நன்றியும், ஒரு சாப்பாட்டுத் தட்டில் கேக் துண்டும் வந்தது. அது எனக்கு மட்டும் தானாம். அப்புறம், இங்கிருந்து ஒரு அப்பிள் பழமும் கழுவிய தட்டுடன் பரிமாறியது.

அப்பாடா தொடங்கியது சனியன். அதுக்கப்புறமும் நான் அந்த ஒல்லிப் பிச்சானுடன் பேசியது இல்லை. ஆனால், அடங்கி வைத்து வெடிப்பது போல செய்தி மறு வளத்தால் சுழன்று அடித்தது. எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் காதலாம். அன்றைய  தினம் நாங்கள் இருவரும்  இரவு; நடுச் சாமம் தாண்டியும் பெண்கள் விடுதித் துவாரத்துக்குள்ளால் காதல் தூது அனுப்புக் கொண்டிந்தோமாம். நல்லது. அப்படியே இருக்கட்டும் என்று விட்டாச்சு. அதுக்கப்புறம் தான் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன. அவளை மடக்க திட்டம் போட்டவர்கள் எல்லோரும் எனக்குப் பயந்தோ இல்லை உறுதிப் படுத்தியோ விலகி விட்டார்கள். அவளுக்கும் கொஞ்சம் ஆறுதலானது. பாதி மலையாளிப் பசங்களுக்கு வார இறுதி நாட்களில்  வீடு போகும்  நேரங்களில் பயணத்தில் சூடு தேய்க்க பெண்டுகள் வேண்டும். அதிலும் படிக்கிற பெண்ணாக இருந்தால் வசதியாகாவும், நன்றாகவும் இருக்கும் என்பதற்காகவே  காதலிக்கிறமாதிரி ஒரு காபந்து பண்ணுவார்கள்.

இதற்கிடையில் எங்களுக்கான தனி விடுதியில்  தங்கி இருந்த இருவருக்கு மஞ்சள் காமாலை வந்து சேர்ந்தது. அதே நேரம் அவளுக்கும் காய்ச்சல் அடித்து. பாவம் வகுப்பிலேயே சோர்ந்து போனாள். எனக்கு ஏதோ சந்தேகம் பட அவளுக்கு எடுத்துச் சொல்லி  வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். அவளுக்கும் அதே  வருத்தம் வந்து தொலைத்தது.  நானும் ஏதோ அக்க்றையில் உடம்புக்கு என்னாச்சு என்று அடிக்கடி பக்கத்துப் பெண்ணைக் கேட்க, அவளும் இவன் ஏதோ கரிசனை முற்றித் தான் கேட்கிறான் என்று இல்லாத ஒன்றை ஊதிப் பெருக்க எல்லோருக்கும் இருவரும் சோடியாம் என்று பத்திரிக்கை அடித்தாகி விட்டது. அடக் கருமத்தே அவளுடன்  இரண்டு வார்த்தைகள் சேர்ந்தாப்ப பேசி இருக்க மாட்டனே? அதுக்குள்ள இப்படியா? அதிலும் இந்த மலையாளிகளுக்கு மூக்கில் வியர்த்தால் ஆள் காலி. இப்படித் தான் ஒரு மலையாளம் பெண் வேறு ஒருவருடன் கொஞ்ச நேரம் சேர்ந்தாப்ப பேசினதுக்கு உனக்கு பாண்டிக் குன்னா கேட்குதாடி என்று  அடிக்காத குறையாய் திட்டுனவர்கள். இப்படி ஒரு விடயம் இருப்பது தெரிய வந்தால் என்ன நடக்கும். ஆரம்பித்தது பூசைகள்.

சும்மாவே என்னைப் பார்க்கிறவர்கள் பயப் படுவார்கள்.அப்படியான ஒரு கவர்ச்சியான உருவமைப்பு. ஊரில் இருக்கும் எவனையும் விட்டு வைக்காமல் சிநேகம் பிடித்து வைத்திருக்கன். சாப்பாடு போடுற ஆயாவிலிருந்து, கல்லூரி முதல்வர் வரைக்கும் பழக்கம். சொல்லும் சொல் சந்தை ஏறும். போதாதற்கு மலையாளக் கூட்டம் ஒன்றையும் பழக்கம் பிடித்து வைத்திருந்தேன்.  ஆக மொத்தம் என்னுடன் நேரடி மோதலுக்கு கொஞ்சம் பயந்தார்கள்.  உள்ளிருந்து போட்டுத் தள்ள ஆரம்பித்தார்கள். எப்பொழுதாவது அக்கா கடைக்கு தம் அடிக்கப் போய் ஒரு மலையாளத்தான் அகப்பட்டால் போதும் அப்படியே பாச மழை பொழிய தொடங்கிடுவார்கள். நானும் குடை இருந்தும் நனைய வேண்டியது தான். உனக்குத் தெரியுமா அவளுக்கு உள்ளூரில ஒரு நண்பன் இருக்கான். அவனைத் தான் கலியாணம் கட்டப் போறாள். அதுக்கென்னடா எனக்கு என்ன வந்தது? அவள் யாரைக் காதலிச்சா என்ன? எவன் கூடப் போனால் என்ன? எனக்கு என்ன குடும்பமா முழுகிப் போயிரும்? எனக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம்? அவள் யாரு நான் யாரு? மிஞ்சிப் போனால் 30 அளவிலையாவது உள் சட்டை போடுறவளாயிருக்கிறாளா?.

கடைசியாய் ஒரு அம்பு. எப்படித் தான் ஒரு பெண்ணை பற்றி இப்படிக் கேவலமாக  கதை கட்ட முடியுதோ? இடையில், தமிழ் நாட்டுக்கு படிக்க வரும் மலையாளத்திகளுக்கு உள்ளூரில மதிப்புக் கிடையாதாம். எனக்கும் நிறையத் தெரியும். போனாப் போகுது. ஆண்களுக்கு மட்டும் கம்பி நீளும் போது பெண்களுக்கு கசியக் கூடாதா? ஒரு  நாள் பஞ்சாபி தாபாவில் என் செலவிலேயே எம்சி அடிச்சுப் போட்டு ஒருத்தன் கக்கத் தொடங்கினான். சேட்டா, அந்தப் பொண்ணுக்கு கலியாணமாயிருச்சு. புருசன் அவுட்டென்று நினைக்கிறன். இல்லாட்டி விட்டுட்டு போயிருக்கலாம்.குழந்தையும் இருக்கலாமாம்.  அடப்பாவி. அடிச்சது முழுக்க  மூக்கால் காத்து மாதிரி வெளியே போயிற்றுதே.

அன்றிலிருந்து எனக்கும் கொஞ்சம் காதால்  சுடர்விடத் தொடங்கியது.(கண்டிப்பாகக் காதல் இல்லை. வெறும் பச்சாதாபம்.) பாவம் பொண்ணு நிறையவே அடி பட்டிருக்குது. அதனால் தான் சாப்பாடு தண்ணி இல்லாமல் இருந்து மெலிந்து போயிட்டுது.குழந்தை வேறு இருக்காமே? மறுமணம் செய்வதில் என்ன தப்பு. இவளோடு கூட வாழ்வதில் கண்டிப்பாக ஒரு அர்த்தம் கிடைக்கும்.  காதலிக்கும் போதே அப்பாவாகி விடுவேன். கலியாணாத்துக்கு முன்னரே ஊருக்கும் போய் குழந்தையுடன் ஒட்ட வேண்டும். அப்பொழுது தான் பெரியாளானாதும் சொந்த அப்பா மாதிரியான ஒட்டல் தெரியும். எனக்கு ஒரு குழந்தையே போதும். இரண்டுடனும் சந்தோசமாக இருக்கலாம். பாவம் அளு வேறு சரியான் நோஞ்சான். இரண்டுக்கு மேல தாங்கவும் முடியாது. வாழ்க்கை என்றால் இப்படித் தான் இருக்கணும். யாருக்கா நாம் வாழ்கின்றோமோ அது பெறுமதிமிக்கதாக இருக்க வேண்டும்.

ஆக மொத்தம் எனக்குள் ஒரு நல்லவன் மாதிரி ஒருத்தன் உருவாகினான். அவளைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவளுக்கு உதவுவதாக எண்ணி, அவளை மிகவும் கீழ்த்தரமாக சிந்திக்கத் தலைப்பட்டேன். எனக்கு எவருமே இந்த உரிமையைத் தரவில்லை.  நானாக எடுக்கவுமில்லை. வித்தியாசமான உணர்வுகளின் போராட்டங்கள்.

அடுத்த மின்னஞ்சலில் வருவது பின்னால்……….

June20, 2009

நீ என்ன பெரிய புடுங்கியாடி?

Filed under: மலையாளி — pukalini @ 19:29

‘ஆமா, நீ முதல் முதல்ல கல்லூரிக்கு வந்த அன்றே என்ன நடந்தது? உன் மூஞ்சி மீசை இப்படி இருக்கே உள்ளே எப்படி என்று கேட்டு அழ வைத்தவர்கள் யார்? அடுத்த நாள் அதை மழித்து விட்டு வந்த போது உள்ளேயுமா எனக் கேட்டவர்களை மிரட்டி, வெருட்டி உன்னைக் காயாமல் பார்த்துக் கொண்டது யார்? எல்லாருமே உனது மலையாளக் கூட்டம் தானே? அப்பொழுது மட்டும் என் துணை எதுக்கு உனக்கு?  நானும் உன்  கூடப் படித்தவன் தானே? எதற்கு முன்னோர்களிடம் முறைத்துக் கொண்டேன்? பாவம் பிள்ளை படிக்க வந்த இடத்தில் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாய் படிக்கட்டும் என்று தானே?’

‘உன் உடம்பைப் பற்றி பேசுவது அநாகரீகம் தான். இருந்தாலும், நீ இவ்வளவு சொன்ன பின்னும் நான் ஏன் மூடி வைக்கணும்? உனக்கு ஒரு பட்டப் பெயர் இருக்குதே? உனக்கும் அது தெரியும் தானே? சிலர் அயன் பொக்ஸ் என்பார்கள் பலர் கரம்போர்ட் என்பார்கள். எனக்கு மொத்தத்தில் உருவி விட்ட உலக்கை மாதிரி, உயரத்தில் மட்டும் தான் ஆளா இருந்த. ஏதோ கனவுக்கன்னி கணக்கில புலம்புற?  நீயெல்லாம் எதுக்கு உள்சட்டை போட்ட? சும்மா பருவுக்கு போடுற பசை எதையாவது வாங்கிப் பூசி இருக்க வேண்டியது தானே? ‘

‘வகுப்பில் உனக்கு அருகில் இருந்து தொந்தரவு பண்ணினேனா? ஏன் உனக்கு கொஞ்சமாவது புத்தி வேண்டாமா? பக்கத்து, பக்கத்து இருக்கையில் இருந்து எப்படி உன்னை உற்றுப் பார்க்கலாம்? அப்படிப் பார்த்தாலும் அது உன்னை இல்லை, பக்கத்திலிருந்த கட்டையை என்று உனக்குத் தெரியாதா? பரிசோதனைக் கூடத்தில் விடாது கறுப்பு மாதிரி ஒட்டினேனா? உனக்குத் தான் மின்சாரமென்றால் நடுங்குமே? உனக்கு உதவ யார் வந்தார்கள்? ஐந்து வயது கூடிய உன்னை எவன் சீண்டுவான்? பாவம் பிள்ளை என்று ஒத்தாசையா இருந்தது, உனக்கு கடுப்பாயிற்றா?’

‘வாத்திமார்களிடம் வத்தி வைச்சேனா? முண்டம், உனக்கு காய்ச்சல் அடிச்ச போது மஞ்சள் காமாலை தான் என்று சொல்லி வீட்டுக்கு பத்திரமா அனுப்பி வைச்சது யாரு? வரவுப்பதிவேட்டில் உனது பதிவுகள் மிகவும் குறைவான போது சரிக்கட்டி பரீட்சை எழுதச் செய்தது யாரு? பல்கலைக் கழக பரிசோதனையிலும் உனது பேப்பருக்கு செய்து காட்டி  தாமதித்தது யாரு? நீ வெடிக்க வைச்ச  நாலு உபகரணக்களுக்கும் பொறுப்பெடுத்து  திருத்திக் கொடுத்தது யாரு?ஏண்டி உன்னைப் பார்த்துப் போன எல்லா நாளுமே பரீட்சையில் நான் கோட்டை விட்டது  யார் தப்பு?’

‘விடுதிக்கு போன் பண்ணி இம்சையைக் கொடுத்தேனா? ஒரு தடவையாவது உன் கைப் பேசிக்கு அழைத்திருப்பேனா? பரீட்சைப் பெறு பேறுகள் வந்த போதெல்லாம் நீ தானே எனக்கு அழைத்து பெண்கள் விடுதி முழுவதுக்கும் ஒலிபரப்பினாய்? சனியானால் உனக்கு ஆக்கினையா? அது உனக்கு மட்டும் தானா? எனக்கு படிப்பிச்ச ஆசிரியைக்கே விடுதி பூராக் கேட்க ஐ லவ் யூ சொன்னவங்கள் தானே? உனக்கு மட்டும் தான் வித்தியாசமா?  தண்ணி அடிச்சிட்டு கூத்தடிச்சால் ஓட்டைகளுக்கால் ஒட்டிப் பார்த்து கேவலப் படுத்தியது யாரு? எப்பொழுதாவது அசவரமாய் பேசக் கூப்பிட்டால் என் ஆளு என்று எல்லோருக்கும் தம்பட்டம் அடிச்சு சொன்னது யாரு? எவளோடையாவது, எங்கேயாவது பேசினால் அவளைக் கூப்பிட்டு மிரட்டியது யாரு?  நான் யாருடன் தான் பேச முடியும்?’

‘வெளியால் நான் தம் அடிக்கக் கூடப் போகக் கூடாதா? போன போதுகளில் நீ வெளியில் வந்தது என் தப்பா?  நேரங் கெட்ட நேரங்களில் உனக்காக கடை தெருக்களுக்கு போகச் சொல்லும் போது ஒன்றுமே தெரியலையா?’

‘ என்னுடைய சகோதரங்கள் உன்னை அண்ணி என்று கூப்பிட்டது பிடிக்கலையா? ஆரம்பத்தில் பிடித்துத் தானே இருந்தது? அவர்கள் என்றைக்காவது உன்னை தரக் குறைவாகப் பேசியது உண்டா? உன்னுடன் நான் நெருங்கிப் பழகியதால் இனிமேல் அண்ணி என்று கூப்பிடுகிறோம் என்று சொல்லித் தொடர்ந்தது யார் தவறு? சும்மா இருந்த என்னை  நீ நெருக்க, அண்ணா இது சரியில்லை. ஒரு பெண்ணின் மனசில் ஆசையை வளர்ப்பது தப்பு. உணர்வுகளை காட்டிய பின் விலகுவது தப்பு. உங்களுக்கும் அவளை பிடித்திருக்கு, அண்ணிக்கும் டபுள் ஓகே. பேசாமல் போய் காதலிக்கிறேன் என்று சொல்லிருங்க என்றது அவர்கள் பிழையா?’

‘ முன்னப் பின்னத் தெரியாத உன்னை,  படுக்கையில் இறுக்கி அணைக்கக் முடியாத ஒன்றை எப்படிக் காதலிக்கலாம்? எதுக்கு? உனக்கு ஏற்கனவே கலியாணம் ஆச்சு, குழந்தை வேற இருக்கு, புருசன் அவுட்டு என்று சொன்னவர்களுக்கு பரவாயில்லை, நான் பாத்துக்குப்பன் என்று பெண்களை வேறு கோணத்தில் வைத்து சிந்திக்கத் தொடங்கியது உன்னால் தானே? பாலக்காடு தாண்டி வரும் பெண்களை கேரளாவில் எவனுமே ஏறெடுத்துப் பார்க்க மாட்டான் என்று கலகமூட்டிய உன் சக ஆண் வர்க்கத்துக்கு சாட்டை கொடுத்து உனக்காக நெருங்கியது என் தப்பா?  மாசத்தில பாதி நாள் நோஞ்சான் கொழி மாதிரி துவண்டு போகும் உன்னை கட்டினால் என்ன ஆகும் என்று மிரட்டியவர்களுக்கு சமாதானம் பேசியது என் தப்பா?’

மிச்சத்தை மிச்சமிருக்கும் போத்தலையும் முடிச்சிட்டு வைச்சிருக்கன்.

June19, 2009

மலையாழத்தியின் வெடிப்பு.

Filed under: மலையாளி — pukalini @ 18:23

மலை+ஆழம்=மலையாழம்.

‘இதைப் பாருங்கள் இந்தப் பொறுக்கி நாய் இருக்கிறதே, இது ஒரு சுத்தமான கேவலம் கெட்ட  மனு.வெட்கம்,மானம்,சூடு, சுரணை, ரோசம் எதுவுமே கிஞ்சித்தும் கிடையாது.   நான் எவ்வளவோ சொல்லியும் பயனில்லை. இப்பொழுதும் என்னை இடைஞ்சல் செய்து கொண்டே இருக்கிறது. இதுக்கு என்ன செய்யலாம்? இதனால் நான் பட்ட துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் அளவே கிடையாது.’

‘ நான் எப்பொழுது இந்தக் கல்லூரிக்கு வந்து சேர்ந்தனோ அப்பொழுதே எனக்கு எட்டுச் சனி தொடங்கிற்றுது. எத்தனையோ கல்லூரிகள் இருந்தும், எத்தனையோ பிரிவுகள் இருந்தும் வேலை மெனக்கெட்டு கொல்லத்தில் இருந்து இங்கு, இந்தப் பாடத்துக்குத் தான் வந்து சேரணுமா? அதுவும் மூன்று வருடங்கள் காத்திருந்து, காசு சேர்த்து ஆசைப் பட்டு சேர்ந்தால் இப்படியும் ஒரு இம்சை எனக்கு கிடைக்கணுமா?’

‘சேர்ந்த தொடக்கத்தில் என் சொருபத்தைப் பார்த்து பின்னால் அலைந்தவர்கள் பலர். அவர்கள் எல்லோரையும் கடத்தி விட்டு படிப்பம் என்றால் முன்னுக்கு ஒரு மூஞ்சூறு. நான் தான் யாருக்குமே எந்தப் பாவமும் செய்ததில்லையே? எந்தக் கெடுதலும் மனசால் கூட நினைக்கலியே? பின்னே எங்க அப்பா, அம்மா செய்த பழி தான் என்னை விடாது துரத்துதா?’

‘ வகுப்புக்கு வந்திருந்தால் பக்கத்து இருக்கையில் சனியன் குடியேறும். பரிசோதனைக் கூடம் போனாலோ பின்னாலேயே சுற்றிச் சுற்றி வரும். அட அதாவது பரவாயில்லை. கண்ணைக் கொஞ்சமாவது அங்கால இங்கால திருப்ப வேண்டாமா? அப்படி என்னத்தை தான்  நாலு வருசமா புகுந்து ,புகுந்து பார்த்தானோ? ஒரு பெண்ணுக்கு எத்தனை இடைஞ்சல்கள் வரும்.  சுடிதாருக்கு வெளியாலே தெரியும் உள் சட்டையைக் கூட சரிப் பண்ண முடியாது. பன்னாடை அதை வேறு வெறித்துப் பார்க்கும். கண்ட இடத்தில் கடிச்சாக் கூட சொறிய இயலாது. விடுதிக்கு வந்து ஆடை களைந்து பார்க்கும் போது எல்லாமே சிகந்து போய் இருக்கும்.’

‘விடுதிக்கு வந்தாலோ ஒரே கும்மாளம். வாயிற்காப்பாளனை சரிக்க் கட்டி பேசக் கூப்புடிறது. வந்தாலும் எட்டி, எட்டி உள்ள பார்க்கிறது. விடுதித் தொலை பேசி எண்ணிற்கு அழைத்து  யார் யாரோவிடமெல்லாம் தன் காதல் கட்டுரையை புலம்புறது. கூட இருக்கும்  கழிசடைகளை விட்டு அண்ணி, அண்ணி என்று அலற விடுவது. முழுக் கல்லூரிக்கும்  இருவரும் ஏதோ காதல் புறாக்கள் என்று பேப்பர் அடைச்சு விடுறது. அதிலும் சனியானால் போச்சு தண்ணியைப் போட்டுட்டு ஆட்டம், பாட்டம். அதுக்கு வேற  மலையாளப் பாட்டுக்கள். தாங்க முடியல.’

‘உள்ளுக்க தான் இப்படி என்றால் வெளியால் போனாலும் தொந்தரவு, முகர்ந்து கொண்டே பின்னால் வந்திரும். பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு பார்வையாலேயே கொல்லுறது. அப்பப்பா இவனாலேயே ஞயிற்றுக் கிழமைகளில் தேவாலயம் போவதையே நிறுத்தியாச்சு. கடை தெருவுக்கும் போக முடியல.’

‘போதாதற்கு வகுப்பில் உள்ள் மலையாளிகளைப் பிடித்து மலையாளம் படிக்கிறது என்று பீலா காட்டுறது. யார் வீட்டுக்காவது போயிட்டு வந்து கோட்டையத்தில் காணி பார்த்திருக்கன், ஆலப்புழாவில் வீடு கட்டுவமா என்று நச்சரிக்கிறது. வகுப்புக்கு பாடம் நடத்த வாறவர்களிடம் இருவருக்கும் ஏதோ தொடுப்பு இருக்கு என்று  போட்டு வைக்கிறது.’

‘ பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்கும் போது திருநீறு தருவது. படிக்க விடாமல் வெறித்துப் பார்க்கிறது.  தான் பெயிலானதைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல் நான் பாசானதுக்கு தண்ணிப் பார்ட்டி வைக்கிறது. தண்ணியில என்னைப் பற்றி கண்டதையும் உளறுவது.’

‘ஓணம் விழாக்களுக்கு கோலம் போடுறன் எண்டு  நக்கிக் கெடுக்கிறது. வேட்டி கட்டிக் கொண்டு வந்து ஏதோ பாசன் சோ மாதிரி எல்லோருக்கும் சீன் போடுறது. ஐஸ்கிரீமுக்கு அடிபட்டால் ஏதோ தேவ தூதன் மாதிரி கண்டவனிடமும் கெஞ்சி வாங்கித் தருவது.’

‘இதெல்லாம் எதுக்கு? என்னை மடக்கவா? இந்தத் தேவாங்கு என்றைக்காவது கண்ணாடியில முகத்தைப் பார்த்திருக்குமா? என் நிறமெங்கே கவுட்டுப் போட்ட கரிச் சட்டி எங்கே? நிலம் கூட்டும் எந்தன் முடியெங்கே, சொட்டை எங்கே? கொஞ்சமாவது புத்தி வேண்டாம்? எத்தனையோ ஆண் மக்கள் சுத்திச் சுத்தி வரும் போதே ஒதுக்கித் தள்ளிய எனக்கு இந்த எருமை மாடு தான் கண்ணுக்க நிக்குமா?’

‘ இத்தனை காலமும் பொறுத்தாச்சு கடைசிப் பரீட்சை காலத்தில் ஆவது சந்தோசமா, நிம்மதியா இருக்கலாம் என்றால்  கடைசிக் கட்டம் என்று நெருக்குவாரம் பண்ணுறான். தாங்க முடியலை.’


June17, 2009

வேலி அடைப்பு.

Filed under: அப்பு — pukalini @ 05:58
Tags:

மத்தியான வெயிலுக்குள்  நின்று  ஓலை பொறுக்குவதற்கும் ஒரு தனித் திறமை வேண்டும். நாளைக்கு வேலி அடைப்பு. இன்றைக்கே நூறு  பனைகளில் ஓலை வெட்டி மிதிக்க வேண்டும். அப்பொழுது தான் நாளைக்கு நல்ல பதத்தில் வரும். ஏற்கனவே மூன்று பக்கத்து வேலியையும் கரையான் அரித்து பொத்தல் விழுந்து விட்டது. ஒரு ஓரமா ஒதுங்கி ஒண்டுக்கு அடிக்கவே முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரனுக்கு பதுங்க வேண்டி இருக்குது.  நல்ல காலத்துக்கு அப்பாவின் சம்பளத்தில் கடனெடுத்து  முன் பக்கம் மட்டும் மதில் கட்டியாச்சு.அப்புவிடம்  வேலி அடைக்கச் சொன்னா அதுக்கப்புறம் அவர் பாத்துக்குப்பார்.

வீடு ஊருக்குள் இருந்தாலும் எல்லோருக்குமே ஒரு பனங்காணி தனியாக இருக்கும்.  எங்களுக்கும் கொஞ்சப் பனைகளோடு  சின்னதா ஒரு காணி. சும்மா நாட்களில் அந்தப் பக்கம் போவதே கிடையாது. பயம்.பனை வளவுக்குப் பக்கத்தில் ஒரு சின்னக் கொட்டிலில் ஒரு வைரவர் கோவில்.  அந்த வைரவர் இரத்தம் குடிப்பவராம்.ஓலை வெட்டுற  நேரங்களில் அம்மம்மாவையும் கூட்டுக் கொண்டு போய் ஒரு எட்டுப் பார்ப்பதுடன் சரி. அங்கால் சற்றுப் போனால் பனைகளில் ஒட்டி இருக்கும் பூனைப் புடுக்குப் பழங்களைப் பிடுங்கிச் சாப்பிடலாம்.

நூறு பனைகளிலும் ஓலை வெட்ட நாலு பேராவது வேண்டும். ஓலை வெட்டும் காலங்களில் கள்ளுச் சீவுற பருவம் போயிருக்கும். ஆட்களைப் பிடிக்கிறதும் சுலபம். போததற்கு அப்பு வாடிக்கையா கள்ளுக் குடிக்கப் போகிறவர்கள் கண்டிப்பாக வருவார்கள். காசும் உடனேயே கொடுக்கப் படும் என்பதால் தயங்காமல் வருவார்கள். அப்பு வேறு கத்திகளை தனியாகத் தீட்டி வைத்திருப்பார். கத்தி தீட்டுறது என்பது சிலை செதுக்குவது போல. பழைய  உலக்கையை கிடத்திப் போட்டு கொஞ்சம் மண்ணைத் தூவிப் பாங்காகத் தீட்ட வேண்டும்.  தீட்டிய கத்தி பளபளக்கும். கத்தி தீட்டித் தீட்டியே உலக்கையும் தேய்ந்து போய் விட்டது.

காலையிலேயே ஓலை வெட்டுத் தொடங்கி விடும். வெட்டிய ஓலைகளை  மதிய வெயில் வரையிலும் காயப் போட்ட பின் தான் மிதிக்க வேண்டும்.இதுக்கிடையில் அம்மம்மா பன்னத்துக்கு நல்ல ஓலைகளை பொறுக்கி ஓரமா போட்டு விடுவா. அப்புவும் பட்டை பிடிக்க என்று கொஞ்ச ஓலைகளை ஒதுக்கி விடுவார். எங்களது வேலை சாரோலை சேர்க்கிறது. அப்பொழுது தான் அம்மம்மா சாயம் போட்டு பாய் பின்னித் தருவா.

மதிய வெயிலுக்குள் காய்ந்த ஓலைகளை பொறுக்கிக் கொடுக்க அப்பு மிதிக்கத் தொடங்குவார். ஒன்றன் மேல் ஒன்றாக போட்டு மிதிக்க மிதிக்க அது ஒரு கோடு மாதிரி வளைந்து ,வளைந்து பனைகளுக்கு இடையால் புகுந்து, நெளிந்து வரும். கடைசியில் பெரிய கல்லைப் போட்டு பாரம் கொடுத்து மிதிப்பு வேலை முடிந்து விடும். பின்னேரம் வரை அப்படியே கிடக்கும் ஓலைகளை வண்டியில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு போய் திரும்பவும் ஒன்றாகப் போட்டு மிதிக்க வேண்டும்.

இரவு அம்மம்மா உழுந்து ஊற வைத்து, ஆட்டுக் கல்லில் அரைத்து புளிக்கப் போடுவா. காலையில் எப்படியும் வேலி அடைக்க பலர் வருவார்கள். சொந்தக் காரர்கள்,அப்பு போய் வேலி  அடைத்துக் கொடுத்தவர்கள், அப்புவை தங்களது வேலி அடைப்புக்கு கூப்பிடப் போகிறவர்கள் என்று ஒரு கூட்டம். அதிலும் அப்பு போய், வர முடியாதா கடன் காரர்கள் தங்களுக்கு அடைக்க வர வேண்டியவர்களையும் எங்களுக்கு மாற்றி விடுவார்கள். நல்ல பண்ட மாற்று. எலோருக்குமே  நாளைக்கு தோசையும் சம்பலும்.

காலையிலேயே அப்பு எழுந்து ஓலைகளை தெண்டல் ஓலை, சாத்தல் ஓலை என்று பிரித்துப் போடுவார். சாத்தல் ஓலை குத்திக் குத்தி வைக்க, தெண்டல் ஓலை சரித்து ஒன்றுக்குள் ஒன்றை வைத்து முட்டுக் கொடுக்க. சாத்தல் ஓலை எப்பொழுதும் உயரமாகவும், பரப்பில் பெரிதாகவும் இருக்கும். தெண்டல் ஓலை அனேகமாகப் பிய்ந்து,கிழிந்து போயிருக்கும். அம்மம்மா அடுப்படியில் கங்கு மட்டையைப் போட்டு எரித்து தோசை சுடுவதில் மும்ம்முரம்மாக இருப்பா.

என் வேலை தெரிந்த ஓலைகளை பொறுக்கி கொண்டு போய் போடுவது தான். காலையில் ஆட்கள் சேர்ந்ததும் அப்பு கோவணத்தைக் கட்டிக் கொண்டு குந்தி இருந்தாரெண்டால் முன்று பக்க வேலியும் அடைச்சாப் பிறகு தான் எழும்புவார். அனேகமாகா வேலி வெளிப்புறமாகத்  தான் அடைக்கப் படும். நான் வீட்டு வளவுக்குள் வந்து குத்தூசியில் வரும் கயிற்றை வாங்கி திரும்பவும் குத்தி விடுவேன். கயிறு விலை கூடிய காலங்களில் எல்லாம் அப்பு பனை நாரையோ, தென்னம் பாளையைக் கிளித்தோ கட்டுவதற்கு ஏதாவது தயார் பண்ணி விடுவார்.


வேலி அடைப்பு வேகமாகப் போய்க் கொண்டு இருக்கும் . சாத்தல் ஓலையை வைத்து  பின் தெண்டி, பிறகு சாத்தி மட்டைகளை வைத்துக் கட்ட வேண்டும். அப்பு மள மளவென ஓலைகளின்  உயரத்தைப் பார்த்து மட்டையை அடியால் வெட்டித் தள்ளிக் கொண்டு தெண்டிக் கொண்டே போவார். குத்தூசியால் குத்திக் கட்டுபவர்களும், அமத்திப் பிடிப்பவர்களும் அவருக்குப் பின்னால் ஓட வேண்டும்.வேலி அடைத்து முடிந்த பின் பச்சை ஓலைகளை மாடு தின்னாமலிருக்க சாணியைக் கரைத்தோ இல்லை கழிவு எண்ணெயைத் தெளித்தோமணத்தை நீக்குவார்கள்.


பொட்டு, கடப்பு, கதியால்களும் தொடரும்…

(அப்புவின் நினைவுகளை எடுத்துச் செல்ல எழுத வேண்டும். பலருக்கும் இவை புரியாது. மற்றவை மட்டும் புரிந்து விட்டனவா? இதில் விடுபட்ட சம்பவங்கள் பின்னாளில் வரும். ஏதோ அப்புவுக்கு நான் செய்யப் போகும் ஒரு பாராட்டுப் பரிசு.)

June15, 2009

ஆட்டுக்காரியும் வியட்னாமியும்.

Filed under: சமுகம் — pukalini @ 21:17

கல்லூரி  விடுமுறை கழிந்து நான் தான் முதலில் விடுதிக்கு வந்தேன். ஒரு சில மாணவர்கள் மட்டும் ஊருக்குப் போகாமல் விடுதியிலேயே தங்கியிருந்தனர். அவர்களுக்குச் சமைத்துப் போடவென்று ஒரு சமையல்க்கார பையனும் தங்கி இருந்தான். விடுதியில் இருந்து கடைசியாகப் போனதும் நான் தான். ஆகவே விடுதியில் யார் யார் தங்கி இருந்தார்கள், அவர்களின் பொழுது போக்குகள் என்னவென்று கொஞ்சமாவது தெரிந்திருந்தது. அதிலே ஒரு வியட்னாம்காரன் முக்கியமானவன்.

விடுமுறையில் ஊருக்கு போய் வரக் காசு அதிகம் தேவைப்படுமென்பதால்  உள்ளுக்குள்ளேயே தங்கி விட்டான். அவனை முதன் முதலில்  மாணவர் விடுதிக்கு வரவேற்றவனும் நான் தான். வரும் போது ஆங்கிலம் என்றால் என்னவென்றே தெரியாது. தத்தித் தத்திப் பேசினோம். உங்க ஊரில் என்ன என்ன கடவுள் எல்லாம் இருக்கின்றது என்று கேட்டதுக்கு, கைகள் இரண்டையும் விரித்துப் பிடித்து , நாக்கைத் தொங்கப் போட்டுக் காட்டினான். இயேசுவாம். பையனுக்கு குளிப்பது என்பது ஏதோ சாகடிப்பது போல. வெறும் தகர டப்பாவுக்குள் தண்ணீரை ஊற்றிக் குளித்து விடுவான். அதுக்குள் குளியல் நுரையையும் போட்டு விடுவான்.

சமையலில் அவனை அடித்துக் கொள்ள முடியாது. சமைத்தால் வாசம் வயிற்றைக் குமட்டும். ஊரில் உள்ள இலை, குழை எல்லாவற்றையும் போட்டு சமைப்பான். விசேடமாக பன்றிக் குடல். இப்படித்தான் ஒரு நாள் பாம்பொன்று வசமாக மாட்டி விட்டது. அடிச்சுப் பிடித்து அவனிடம் கொடுத்தாச்சு. அவன் அதை  அப்பிடியே தலையில் பிடித்து குடலை உருவினான். உள்ளுக்குள் இருந்து ஒரு தவளையும், ஒரு ஓணானும் கீழே விழுந்தன. அன்றைக்கு நல்லா ஒரு பிடி பிடித்திருப்பான். நாங்கள் சமையல் வாசம்  வராமலிருக்க கதவுகள் , யன்னல்கள் எல்லாவற்றையும் மூடி விட்டோம்.

அவன் எப்பொழுதும் துடிப்பாக இருப்பான். விளையாடுவான். இல்லாவிட்டால் ஓடுவான்.

இப்படித்தான் விடுமுறை காலத்திலும் வெளியில் ஓடப் போயிருக்கான். பல நாட்கள். விடுமுறை கழித்து வந்ததில் அவனில் பல மாற்றங்கள். வெளியில் போவதில்லை. ஓடவும் தான். விடுதிக்குள்ளேயே அடைந்து கிடந்தான். என்ன ஏதென்று ஒன்றுமே புரியவில்லை.

அப்புறமாக சமையல்க்காரப் பையன் மூலம் தகவல்கள் மெது மெதுவாக வெளியே கசிந்தது. பையன் ஓடப் போகிற வழியில் ஒரு பெண் ஆடு மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறது.  அப்படியே அடிக்கடி ஓடப் போய் பெண்ணை சரிக்கட்டி விட்டான். அப்புறம் என்ன? ஒரே அசால் குசால் தான்.

இப்படியாகப் போய்க் கொண்டிருக்கையில் ஒரு நாள் ஊர்க்காரர்கள் பார்த்து விட்டார்கள். பையன் ஒரே ஓட்டமாக ஓடி விடுதிக்குள் புகுந்தவன் தான். வெளியே போகவில்லை. கல்லூரியில் மணிப்பூர் மாணவர்களும் படித்த படியால் யாரென்று தெரியாமல் ஊர்க்காரள் சமையல்க்காரப் பையனிடம் விசாரித்திருக்கிறார்கள். அவனும் பாவம் பார்த்துக் காட்டிக் கொடுக்கவில்லை.

அதுக்குப் பிறகும் அவன் அடங்கவில்லை. படித்துக் கொண்டிருந்த சில மாணவிகளை நல்லாவே அப்ரோச் பண்ணினான். மாட்டிச்சா இல்லையா அவனுக்குத் தான் வெளிச்சம். எப்படி இவனால் மட்டும் ஆட்டுக்காரியைக் கூட அப்படி நினைக்க முடிந்திருக்கிறது. கூடப் படிக்கிறதுகள் என்றாலும் பரவாயில்லை. அந்த மாதிரிப் படங்களிலும் அவன் உள்ளூர் தயரிப்புகளையே விரும்புவான். வித்தியாசமானவன்.அவன் ஆசைப் பட்டிருக்கான். அடைஞ்சிருக்கான்.

அப்பாடா இந்தப் பொண்ணுகள்/ பசங்கள் ஏன் தான் வெள்ளைத் தோலைக் கண்டால் இப்படி கிளர்கிறார்களோ? அதிலும் ஆடு மேய்க்கும் பெண் எப்படி இவனுடன் பேசியிருப்பாள்? பேசாமலேயே …………….. ம்.

கடைசியில அவனும் ஊருக்குப் போயிட்டான். ஒரு நாள் யாகுவில் வந்தான். அடக்க முடியாமல் ஆட்டுக்காரியை எப்படி சரிக் கட்டினாய் என்று கேட்டேன். ‘எல்லாம் எண்ட கலர்’ எண்டு சொல்லி செருப்பாலேயே அடிச்சான்.

June10, 2009

பாலான விளம்பரக் கருக்கள்.

Filed under: சமுகம் — pukalini @ 06:05

உள்ளுக்குள் இருப்பது மிகவும் அருவருப்பாக இருக்கலாம். என்ன செய்வது நானும் தான் அருவருப்புடன் எத்தனையோ விளம்பரங்களைப் பார்க்கின்றேனே?  வாசனை அடிச்சா உலக அழகியே பக்கத்துல வந்து  தடவிக் கொடுப்பா. அதுக்கு கீழே உள்ளதெல்லாம் கொஞ்சம் மிகையாவே இருக்கலாம்.


1. இவர் ஒரு பாரிய பிரபலம். தக்க வயதில் ஒரு மகளும் உண்டு. இவரை வைத்து எப்படி விளம்பரம் (வியாபாரம்)பண்ணலாம்? ஆணுறைக்கு?

அப்பன் வீட்டு முற்றத்தில்பழுதடைந்த மின் குமிழை சரிப்பண்ணிக் கொண்டு இருக்கின்றார். மகள் வெளியே கிளம்பிப் போகின்றாள். இப்பொழுது அப்பன் பெருமூச்சு விட்டவாறே  நிழல்க்கருவியைப் பார்த்து சொல்கிறார் ‘ இப்பொழுதெல்லாம்  மகள் வெளியில் போகும் போதெல்லம் நான் கவலைப் படுவதே இல்லை. நான் தான் அவளுக்கு ——– ஆணுறை வாங்கிக் கொடுத்திருக்கேனே? அது மட்டுமா நம்ம நாட்டு படிச்ச எருமைங்கள் எல்லாம் புதுமை பேசினாலும்  கட்பு, கண்ணி என்று புலம்புவார்கள். அதனால பார்த்து பின் வாசல உபயோகிம்மா என்றும் சொல்லி வைத்திருக்கின்றேன். என் மகள் என்னை மாதிரியே சமத்து. என்னா மாதிரி அசத்துறா பாருங்களேன்’. முடிஞ்சுதா?

அப்புறம் பொண்ணு நாலு வாலுகளுடன் கும்மி அடிக்கும் ஒரு காட்சி.  விளம்பரம் தத்ரூபமா வரும்.

2.அடுத்தது ஒரு கிரிக்கெட் பிரபலம். இவரைக் காலணிக்கு உபயோகப் படுத்தலாம்.

வீரர் பாய்ந்து, விழுந்து ஓடுகின்றார். காலையே படம் பிடிக்கலாம். அப்பொழுது தானே காலணி தெளிவாகத் தெரியும். களைச்சு விழுந்து ஓட்டம் முடிந்த பிறகு காலணி அழுக்கைத் தட்டிய படியே சின்னதா ஒரு வாக்கு மூலம்.

‘இதனால நான் மட்டும் ஓடல, என்னுடைய அம்மா வயசு 56. பக்கத்து வீட்டு  சின்னப் பொடியுடன் தீராக் காதல் கொண்டு ஓடிட்டா. இன்னமும் கண்டு பிடிக்க முடியலன்ன பாருங்களேன். அவவும் போட்டிருந்தது இந்த மாதிரிக் காலணி தான்.செமையான ஓட்டத்துக்கு நீங்களும் உபயோகியுங்கள்.’


3.மற்றவர் சினிமாப் புள்ளி. கொஞ்சமல்ல ரொம்பவே வயசாயிடுச்சு. இவருக்கு தோதாக கைப் பேசியைப் போடுவம்.

இவருக்கு பாக்கியம் கைப்பேசி விளம்பரம். ஏனென்றால் இவருக்கு கிடைக்காத பாக்கியம் அதுக்கு கிடைச்சிருக்கு.முதல்ல கைப்பேசியைச் சுற்றிச் சுற்றிக் காட்டிய பின் அதைப் பற்றி  இப்படி ஒரு தத்துவம் சொல்ல வைக்கலாம்.

‘இதைப் பாருங்க,இது விசேசமானது. இதன் அதிர்வுகள் மேலும் விசேடமானது.  குறுகிய இடத்தில், மிகவும் ஆழத்தில் இருந்தாலும் தொடர்பிலேயே இருக்கும். குளிரான இடங்களில் தானாகவே சூடாகும்.  நான் வெளியூரில் இருக்கும் போதெல்லாம் என் பொண்டாட்டி இதனாலேயே தொடர்பு வைத்து சந்தோசமாக இருப்பா. நீங்களும்  உங்கள் ,உங்கள் மனைவிமாருக்கு வாங்கிக் கொடுங்கள்.’

4. இன்னுமொரு சினிமாப் புள்ளிக்கு குளிர் பான விளம்பரம்.

நிறையவே  சூடாகி, மூஞ்சி அப்படியே செக்கச் சிவக்க கடைக்குள் வருகிறார்.  குளிர்ப் பெட்டிக்குள் இருந்து எடுத்தார் ஒரு தகர டப்பா. மடக், மடக் உள்ளுக்க இருந்ததை அப்படியே விழுங்கிய பின், முகத்தில் வியர்வை அடங்க நல்லாவே குளிராகின்றார். அப்புறமா கத்தத் தொடங்குகின்றார்.

‘ நான் நல்லவன் கிடையாது. அதுக்காக என் பொண்டாட்டியும் நல்லவள் கிடையாது. போட்டி போட்டு மாத்தி, மாத்தி சோடி பிடிச்சம். கடைசியில அவளுக்குத் தான் அதிக  துணைகள், அதிக இரவுகள். நான் ஆணாச்சே? கடைசியில எண்ணிக்கையைச் சரிப்படுத்து  பக்கத்து வீட்டு ஜிம்மியையும் கெடுக்க வேண்டியதாயிருச்சு. ஆனாலும் பாருங்க இதைக் குடித்த உடனேயே எல்லாம் பஞ்சாய்க் காற்றில் பறந்திடுச்சு.’

அப்படியே அந்த டப்பாவை நல்லா சுற்ற வைத்து முடிக்கச் சரி.

5. கடைசியாக சினிமா நடிகைக்கு ஒரு தொலைக்காட்சி.

வந்தவுடனேயே தொலைக் காட்சியை அணைத்த படி அதன் பெருமை, அருமைகளைச் சொல்லுகின்றா,

‘ இதைப் பாருங்க என்ன தான் தட்டையா பெட்டிகள் வந்தாலும், நமக்கு தள்ளிக் கொண்டிருப்பது தானே பிடிக்கும். அதனாலேயே இந்தப் பெட்டி. இதற்க்கு எல்லா விதமான உள்ளீடுகளையும் ஏற்றுக் கொள்ளும்  முறையில் வாங்கிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. சிறிதளவு சக்தி போதும், உடனடியாகவே காட்சிகள் தெரியும். தொலைவில் இருந்தே இயக்கியும் காட்சிகளைக் காணலாம்’.

முற்றும்.



June5, 2009

விலங்கு.

Filed under: சமுகம் — pukalini @ 04:18

அவன் பெயர் ரங்கன். உழைப்பாளி. நாட்டு நடப்புகளில் தெளிவு கொஞ்சம் குறைவு. முகவும் நல்லவன். அவனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அவன் வேலை செய்யும் முதலாளியின் சித்தப்பா மகளுக்கும் ரங்கனுக்கும்  முடிவானது.

கன்னிமொழி. ஊருக்குள் அவள் தான் அழகி. கீறி விட்ட பப்பாசிப் பழம் போல செம்மையான தேகம்.  அசத்தும் அழகுப் பேழை. கலியாணம் முடிவானதும் இருவருக்கும் இடையில் காதல் கோளாறுகள் தொடங்கின. இரவு, பகல் பனி, மழை பாராமல் கொஞ்சலும், குலுங்கலும் அசர வைத்தன. பச்சைப் பசேலென்று பரவிக் கிடக்கும் வயல் வெளிகளும், மடை திறந்து சலசலத்து ஓடும் ஆற்று நீரும் சலித்துப் போயின. நேரங்காலம் தெரியாமல் வீட்டு  வேலிக்கப்பால் கேட்கும் விசில் சத்தம் கன்னிமொழியின் தூக்கத்தை விரட்டி விடும்.

வந்தான் வில்லன். தயா. பெயருக்கும் ஆளுக்கும் சந்தேகப் படும் தொடர்பு. கன்னிமொழியின் அடுத்த வீட்டான். நிறைய நாட்கள் கன்னிமொழியுடன் சொப்பனக் குடும்பம் நடத்தியவன். அவளுக்கும், இளிச்ச வாயனுக்கும் கலியாணமா? அவனுக்கு கொடுத்து வைத்திருக்குது. எனக்கு? முடிவு கள்ளுக் கொட்டகையில் தீர்மானமானது.

திருமணம் ஆகி 2 வருடங்கள் சடுதியாய் கரைந்து போக ஒரு குழந்தையுடன் கனிமொழி குடும்பம் நடத்தினாள்.

தயாவின் உள் அரிப்பு இன்னமும் தீர்ந்த பாடாகவில்லை. ‘டேய் ரங்கா உன் பொண்டாட்டியோட நான் ——-.

போய்ப் பாருடா’.

ரங்கனுக்கு என்னது அடுத்து என்று தெரியவில்லை.வீட்டுக்கு வந்தான். பொண்டாட்டியை கூட்டி அறைக்குள் போனான். கையிலில் விளக்கு. அப்படியே மனைவியின் பாவாடையைத் துக்கி விளக்கு வெளிச்சத்தில் எதையோ முறைத்துப் பார்த்தான். இருக்காது.

கப்பல் கடலில் போனாலும், வயலில் ஆயிரம் கலப்பை கொண்டு உழுதாலும் விளைச்சல் ஒன்று தான்.

ஆரம்பித்தது சனியன். இருவருக்கும் இடையில் இனம் புரியாத ஒரு விலகல். கன்னிமொழி என்ன செய்வாள்?  புருசனுக்கோ சந்தேகக் கோடு பெரிதாகிக் கொண்டே போனது. முடிவு வருசத்துக்கு ஒன்றாய் குழந்தைகள். பொண்டாட்டி விட்டுப் போகாமலிருக்க.

அவளுக்கும் உலகம் புரியவில்லை. தன் புருசன் கெட்டிக்காரன். புகுந்து விளையாடுறான் என்ற நினைப்பில் இருந்து விட்டாள்.எல்லாருமே புகுந்து விளயாடுவார்கள் தான் களமமைச்சா என்பது இன்னமும் புரியாமல் அடுத்த குழந்தையை வயிற்றில்  சுமக்கிறாள்.

June4, 2009

தலையாட்டி இரையா?

Filed under: சமுகம் — pukalini @ 01:57

நிறையப் பைத்தியங்கள் உள்ள இடத்தில் சில தெளிவுகள். தெளிவுகளின், தெளிவுகளினால் பைத்தியங்கள், பைத்தியம் முத்திப் போய்  நடுத்தெருவில் குத்திக் குமுறுகின்றன. தெளிவுகள்  தாமே அருகதை உள்ளவர்கள், அருகாமையில் இருந்தவர்கள், அருமையானவர்கள் என்று பின் பக்கம் வீரிட்டு எரிய, எரிய எழுதுகிறார்கள். துரோகிகள், வால் பிடிப்பவர்கள் வித்தியாசங்களை இப்பொழுது தான் உணர வைக்கிறார்கள்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள், சிந்தனைகள், வழிமுறைகள். சிலருக்கு சிலது ஒத்துப் போகும், சரியாகும். தொடங்க முடியாதவர்கள், தொடருவார்கள். சிலர் தொடங்க வேண்டும் என்றே தொடங்குவார்கள். நல்லது. முன் முயற்சி. பாராட்டப் பட வேண்டியவைகள். ஆனால் இலக்கு?  இலக்கு நோக்கிப்  போகிறவர்களையும் பிராண்டி வேதனைப் படுத்துவார்கள். தம்மால் முடியாதவைகளை இவர்கள் எப்படி பண்ணலாமென்றொரு  குமைச்சல்.

ஆக மொத்தம் இலக்குத் தவறி வீரியமானவர்களின் வீரியத்தை கசக்குவதில் முனைப்பு. கேவலம் வீட்டில் இருக்கும் வளர்ப்பு நாயுடன் பங்கு போட முடியாதவர்கள் தெரு நாயுடன் எப்படி சண்டை போடுவார்கள்? அப்படியானின் வழி நடப்பவர்கள் சிந்திக்கத் தெரியாதவர்களா? அறிவிலிகளா? அவர்களும் மூளை உள்ளவர்கள் தான். பாதை கரடு முரடானதாக இருந்தாலும் செப்பனிட்ட பாதையில் நடக்க பிந்தப் போவதில்லை. போய்ச் சேர வேண்டிய இடம் தெளிவாகத் தெரிந்தது. இப்பொழுது மேக மூட்டங்கள் மறைத்த போது பாதை காட்ட முயலுகிறார்கள்.

கேவலமான பைத்தியங்கள். உலகம் தெரியாதவர்கள். உலகம் போற போக்கும், நடப்பும் அறியாதவர்கள். அப்பாவுக்கு அம்மா சாப்பாடு போடும் போது அப்பா விட்ட குசுவில் சூல் கொண்டு பிறந்த  சூனியங்கள். இவர்களின் தந்தையரோ, தாயுடன் யுகக் காலம் கலந்து பீய்ச்சி அடித்த பாய்மம், பலோப்பியன் குழாய் போகாமல் கருப்பையுள் சப்பித் துப்பிய சுவிங்கம் போல ஒட்டிக் கருக் கட்டி பிறந்தவர்கள்.  பொங்கிப் பெருகும் அறிவுக் கடலுக்கு மடை போட்டு அடைப்பவர்கள். எப்போதாவது மக்கிய மடையால் கசிபவைகளே உலக்த் தரம் வாய்ந்தவை.

சாரு.அழகு மீசைக்கும்,சர்ச்சைக்கும் முகம் வைத்திருப்பவர். சுந்தரத் தமிழில் எழுதுவார். பாணி, நடை, தமிழ் கொள்ளை கொள்ளும். ஆனால் எழுதுவது  பிடிக்காது. ஆனாலும் படிக்கப் படுபவர். அவருக்கு பிடித்ததை எழுதுறார். படியுங்கள். இல்லாவிட்டால் ஓரமாக ஒடுங்குங்கள். தனி மனித இயல்புகள் மாற்றப் பட முடியாதவை. தனிப்பட்ட விரோதியா? சந்திக்க முடிந்தால் என்னால் முடிந்த ஒரு கோக்.

சரி, மாற்றுக் கொள்கைக்காரங்களை துரோகிகளாக்கி பொட்டு வைச்சு வழி அனுப்பீட்டாங்கள் என்று முந்தா நாத்து பேண்ட பீயைக் கிளறி மணப்பவர்கள் என்ன செய்தார்கள். பாவம் சாரு. முறைச்சுட்டுப் போனானே என்று கவலைப் படுகிறார். கேவலம் எழுதுறவனையே கடுப்படிக்கிறவங்கள் எல்லாம் உயிரைக் கொடுத்து சண்டை போட்டால் கொஞ்சிப் போட்டு அனுப்பபீருப்பாங்களாக்கும்.

முடிந்தால், பழைய மாணவர் கூட்டத்துக்கு போகவில்லை, பொண்டாட்டி மல்லாக்கப் படுக்க மாட்டெண்டுரா எண்டு தலைப்பு வைக்கத் தான் சரி.

June2, 2009

பட்டை.

Filed under: சமுகம் — pukalini @ 19:04

காலையிலேயே முற்றத்தில் சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. வாங்கிலில் காலை அகட்டிப் படுத்திருந்த எனக்கு முதுகுக்கு கீழே வியர்த்திருந்தது, அப்பொழுது தான் குளிரத் தொடங்கி இருந்தது. எப்பவும் இப்படித் தான். தலையை மாற்றிப் படுப்பம் எண்டால் விடுறதில்லை. சவத்தைத் தான் தெற்கு வாட்டில் படுக்க வைப்பார்களாம்.  வேற யாரு இந்த நேரத்தில் ஓலையைக் கிழிக்க முடியும். கண்டிப்பாக அப்பு தான்.

நேற்று பின்னேரமே கிணற்று முற்றத்தை அடை கட்டி மண்ணைப் போட்டுட்டு,  தண்ணி அள்ளி ஊற்றிக் கொண்டு இருந்தவர். பிறகு ஓலையை நனையப் போட்டிருக்கலாம். அது தான் காலங் காத்தேலேயே எழும்பி பட்டை பிடிக்கிறார்.  அதுவே ஒரு கலை. ஊரில் பட்டை பிடிக்கத் தெரிந்தவர்கள் கொஞ்சப் பேர் தான்.அதிலும் சொன்னபடி  கேட்கிற மாதிரிப் பட்டை பிடிக்கிறதில அப்புவை மிஞ்ச முடியாது.

பருவ காலத்தில் வேலி அடைப்புக்கு பனை ஓலை வெட்டும் போதே அப்பு பட்டை பிடிக்கிறதுக்கு எண்டு ஓலைகளைத் தெரிவு செய்து வைத்து விடுவார். அது எப்படியும் ஒரு மூலையில் தோட்ட காலம் வரும் வரை  கிடக்கும். அப்புறம் தான் அதன் தேவை. சிலருக்கு பட்டையும் பிடிக்கத் தெரியாது, ஓலையும்  எடுத்து வைக்கத் தெரியாது. கடைசி நேரங்களில் வந்து அப்புவிடம் திட்டு வாங்குறது பத்து வீட்டுக் கேட்கும்.

ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறிய ஓலையை பதமாக எடுத்து  அடியில் இருக்கும் கருக்கை வெட்டி விட்டு ஒரு சாண் நீளத்தில் மடிக்க வேண்டும். அங்கிருந்து ஒரு முழத்துக்கு எடுத்து ஈர்க்குகளை வளைத்து  திரும்பவும் ஒரு சாண் விட்டு ஈர்க்குகளை முறியாமல் மடித்து, ஓலையின் இரு நுனிகளையும் இணைத்து கட்ட வேண்டும். பாரம் தூக்க வசதியாக மரக்கட்டையை வைத்துக் கட்டி கைப்பிடியும் சரிக்கட்டினால் பட்டை தயாராகி விடும். பார்ப்பதற்கு குட்டிப் படகு போலிருக்கும் பட்டையின் அளவைப் பொறுத்து தண்ணீரின் அளவும் வேறுபடும்.

பட்டையை செய்யுறது மட்டுமில்லை, பாவிப்பதும் மிகக் கடினம். அப்பு அதனையும் எனக்கு சொல்லித் தந்தார். ஆனா பட்டை செய்யுறதுக்கு சொல்லித் தரவில்லை. தன்னுடன் போய்ச் சேரட்டும் என்றோ தெரியவில்லை.

மழைகாலத்தில்  கை விட்டு அள்ளும் ஆழத்தில் மிதக்கும் தண்ணீரை பட்டையில் அள்ளி பதி வைக்கப் பட்டிருக்கும் கன்றுகளுக்கு ஊற்றுவது நூதனமாகும். தண்ணீருக்குள் கையை விட்டு, வெளியே அள்ளி ஊற்றி விட்டு கீழே விழும் தண்ணீரைக் கையால் அணைத்து கீழே விழச் செய்ய வேண்டும். அனுபவப் பட்டவர் ஊற்றினால் தெரியும். அப்படியே வட்ட வடிவாய் தண்ணீர் விழுந்து சிதறிய அடையாளம் ஈரலிப்பாய் துலங்கும்.

எனக்கு அது கூடக் கைவரவில்லை. தண்ணீரை அப்படியே மொண்டு ஊற்றி செடிகளின் புது இலைகளை உடைத்தது தான் மிச்சம். அப்புவின் கழுகுக் கண்களுக்கு எப்படியும் மாட்டி விடும். அப்புறம் என்ன? தோட்டத்தில் கிடக்கும் மண்ணாங்கட்டிகள் எல்லாம் பல் குழல் ஏவுகணைகள் போல் என்னை நோக்கிப் பறக்க, நானோ ஒதுங்க இடமில்லாமல் புதுமாத்தளனில் மாட்டியவன் போல் ஓடுப் பட்டு திரியவும் சரியா இருக்கும். போதாதற்கு வசை மழை வேறு. ‘உனக்கு ஓ—– சாமனை இறைப்பில விட்டா என்ன?’  என்ன அர்த்தமோ தெரியவில்லை.  வேலையில் பழுது கண்டா அப்புவிடம் தப்ப முடியாது.

அதிலும் பாரம் தாங்க முடியாமல் பட்டையைக் கீழே வைத்தாலோ, சரி அப்பளம் மாதிரி நொருங்கி விடும். தண்ணீரை வெளியாக்கி விட்ட பின்னர் தான் கீழே வைக்க முடியும். தட்டுப் பட்டாலோ வெடித்து ஓட்டை வந்து விடும். பிறகு அந்த ஓட்டை அடைக்க தாரைப் போட்டோ இல்லை றெஜிபோமை பெற்றோலில்  நனைத்து உருக்கியோ ஒட்ட வேண்டும்.

இப்பொழுதெல்லாம் தகரப் பட்டைகள் வந்தாலும் ஓலைப் பட்டைக்கு தான் மவுசு அதிகம். செலவு குறைவு. அடுத்தது பாரம் குறைவு. இப்பொழுது காலம் மாறிப் போச்சு. யாருக்கு பட்டை பிடிக்கத் தெரியும். சாதாரண கூழ்ப் பிளாவே பிடிக்கத் தெரியாத நானெல்லாம் என்னத்தை சாதிக்க முடியும்.

அப்புவுடன் பட்டையும் போச்சு….

May30, 2009

அப்பு செத்திட்டார்….

Filed under: சமுகம் — pukalini @ 19:18

அந்தி மயங்கும் மாலை வேளை. கைத்தொலைபேசி  என்றுமில்லாதவாறு அலறியது.தகவல்,அப்புக்கு சுகமில்லையாம், உடனே கிளம்பி வரவுமாம்.இப்போது பொழுது பட்டு விட்டது. இனிக் காலையில் தான் புறப்பட முடியும். இரண்டு சோதனைச் சாவடிகளையும் கடந்து ஊர் போய்ச் சேர எப்படியும் நாளை மதியம் கடந்து விடும்.

இதற்கிடையில் அப்புக்கு என்ன வந்தது?

எழுபது வயதிலும் கம்பி போல திரிந்து கொண்டிருந்தவர். கடந்த வாரம் கூட என்னைப் பார்க்க வந்து, வங்கியில் தன் பெயரில் இருந்த பணமெல்லாத்தையும் என் பெயரில் மாற்றி விட்டுத் தான் போனவர். அதிலும், குடித்து விட்டு கும்மாளம் போடுவார் என்றெண்ணி வெறும் பயணச் செலவுக்கு மட்டும் பணம் கொடுத்து விட்டு வழி அனுப்பினேன். இரவு முழுவதும் தூக்கமில்லாமல் பாவம் அப்பு தண்ணி குடிக்கக் கூட காசு குடுக்கேல்லையே என்று கவலையும், பயமும். காலையில் தகவல் வருகிறது, அப்பு நல்ல மப்பில் தான் வீட்ட வந்தவராம். எப்படி? அவர் எப்பொழுதும் இப்படித் தான் என்ன செய்வார்? ஏன் என்று புரிவதில்லை.

பிறந்து, வளர்ந்தது முதல் அப்பா, அம்மாவை விட அப்புவும், அம்மம்மாவும் தான் என்னை வளர்த்ததும், சீராட்டியதும் அதிகம். என் முழுப் பொறுப்பும் அவர்களில் தான் தங்கி இருந்தது. போடுற யட்டியில் இருந்து கையில் கட்டும் தங்க மூலாமிட்ட கடிகாரம் வரைக்கும். ஊரில் எவனாவது புதிதாக வந்திருந்தாலோ, பெடியள் ஏதாவது போட்டிருந்தாலோ அவர்களுக்கு மோப்பம் பிடித்து விடும். டேய் பொக்ஸ் சேட் எண்டு வந்துருக்காம், வாங்கிப் போடன். எனக்கு என்னெண்டே தெரிந்திருக்காது. கடைக்குப் போனாத் தான் தெரியும். டேய் அவன் புதுச் செருப்புப் போட்டிருக்கானாம். நீயும் வாங்கடா….அப்புவுக்கு தீபாவளி, தைப்பொங்கல், வருடப் பிறப்புகளுக்குத் தான் புது உடுப்பு வரும். புது உடுப்பு எனக்கு, எனது பழைய உடுப்பு புதிதாக அவருக்கு.

அவர்களுடன் தங்கினால் ராஜ யோகம் தான். காலையில் ஐந்து மணிக்கே எழுந்திருந்து தேநீர் போட்டு தலை மாட்டில் வந்திருக்கும். அம்மம்மாவுக்கும் சேர்த்து. சிலவேளைகளில் சுருட்டுப் பிடித்துக் கொண்டு வானொலிப் பெட்டியைத் திருகிக் கொண்டிருப்பார். அதிலும் காலை வேளையில் ஐபீசி கேட்பன் என்று தெரிந்து குறுக்கலையில் மீட்டர் போட்டுக் கொண்டிருப்பார். அப்பேயும் காதும் கூர்மை. இல்லாவிட்டால் நான் கொண்டுபோயிருக்கும் பொன்னியின் செல்வனை எங்காவது ஒரு பக்கத்தில் இருந்து புரட்டுவார். ஆங்கிலப் புத்தகங்களாக இருந்தால் படம் பார்ப்பார். இது வரைக்கும் அப்பு பள்ளிக் கூடம்  போனதாகச் சொன்னதில்லை. இருந்தாலும், மாலை வேளைகளில் வாசிகசாலை போய் பத்திரிக்கை படிக்காமல் விட்டதில்லை. அம்மம்மா சொல்லி இருக்கா, வெள்ளைச் சட்டைக்கு முட்கிளுவை  முள்ளைக் குத்திக் கொண்டு பள்ளிக்குப் போனதாக.

தோட்ட வேலை நேரங்களில் அப்புவைப் பிடிப்பது கடினம். காலையிலேயே எழுந்திருந்து கிளம்பி இருப்பார். தூக்கக் கலக்கத்தில் நானும் கூடப் போவன். நாம் வெயில் கிளம்ப முன் வீடு திரும்ப , அப்பொழுது தான் ஊர்ச் சனம் வேலைக்குப் போகும் வெயிலுக்க காய. அப்புவிடம் எப்பொழுதும் ஒரு கூட்டம் பின்னுக்கு நிக்கும். ஆலோசனை கேட்கவும், மேற்பார்வை இடக் கேட்கவும். அப்புவின் திறமைக்கும், ஆலோசனைக்கும் சாட்சிகள். அதிலும் கொடுக்கும் கூலியும் அதிகம், தண்ணி தனியாக. அப்பொழுது தான் அடுத்த முறை அப்பு போவார். இருந்தாலும் மதியம் வீட்டுக்கு கள்ளு கலனில் வந்திரும். மாதக் கடைசியில் தான் காசு. எனக்கென்றால் தனியாக ஒரு போத்தலில் தனிப்பனைக் கள்ளு.


அப்பு அடிக்கடி அம்மம்மாவை சொல்லித் திட்டுவது வேலைகாரனுக்கு கூழ், ஓக்—கிறவனுக்கு கஞ்சி எண்டு. அதாவது அம்மம்மா என்னை நல்லாக் கவனிக்கிறாவாம். இருபது வயதிலும் சோத்து மாடு மாதிரி சுத்திக் கொண்டு திரிஞ்ச எனக்கு எல்லாமே அதிகம் தான். அதுகும் தோட்ட வேலைகளுக்குப் போய் வந்தால் மதியம் கடல் தாமரை வங்கி வந்து வேலியில் தொங்கும்.  இடுப்பு நோவுக்கு நல்லதாம். அப்பு தான் கழுவிச் சமைப்பார். நல்லாக் கழுவாட்டி மணக்குமாம். மாலை வேளைகளில் பெரிய அண்டாவில் தண்ணி சுடவைத்து ஒரு குளியல். சும்மா வெயிலுக்கு ஒதுங்கி, நிழலுக்க இருந்தவனுக்கு. நாள் முழுவதும் வெயிலுக்க காய்ஞ்சவருக்கு வெறும் சாயா மட்டும். பொத்திப் பொத்தி வைச்சு என்னத்தைக் கண்டினமோ?

இருந்தாலும் அப்புவுக்கும், அம்மம்மாவுக்கும் மனசில் ஒரு கவலை. அவர்களின் பிள்ளைகள் எல்லாம் மக்காச் சோளம் போலிருக்க, நான் மட்டும் கரடி நிறத்தில இருக்குறன் எண்டு. என்ன செய்யிறது எங்க அப்பா அப்பிடி?


அப்புவிடம் நான் கற்றது உழைப்பு.அடுத்தது தன் நம்பிக்கை.

அப்பு வருவார்..

May29, 2009

பயணங்களில்…

Filed under: அலட்டல் — pukalini @ 19:23

கடந்த ஆறு மாதங்களாக மாற்ற முடியாத வழியாக பயணப் பாதை. ஒரு மனுப் பிறவி கூட சிரித்தது கிடையாது. வாழ்க்கையை நொந்து கொள்ளுவதை விட அனுபவிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.அனுபவிடா.

ஆகா, இன்று என்ன புதுசா ஒன்று வந்திருக்கே; நல்லத் தான் இருக்கு என்று பின் தொடர்ந்தேன். என்னுடன் ஏறி என்னுடனேயே இறங்கும் ஒரு அழகின் சொருபம். பின்னாடியே சுற்றினேன்.  நான் தேர்ந்தெடுக்கும் அடுக்கு மாடிப் பேருந்தையே அந்த சொருபமும் தெரியும். முன்னே ஏற விட்டு  பின்னே தொடரும் கால்களும், கண்களும். மனசு கெட்டவனாயிருக்கும் போது தூரமாகவும் நல்லவனாக இருக்கும் போது நெருங்கியும்  பாதுகாப்பு வலயம் அமைக்கப் பட்டிருக்கும். அசம்பாவிதம். மேல் மாடிக்கு ஏறும் போது பின்னாலேயே  கொஞ்சம் கிட்டவாக போயிட்டனோ? வைகுண்ட வாசல் வரைக்கும் தரிசனம் கிடைக்குதே? அப்பாடா இனிமேல் கொஞ்சம் தூரமாகவே மேயலாம். ஆழ்ந்து நுணுக்கமாக ஆராய்ந்ததில் கிடைத்தது. தேவியின் கோவில் எனது மடைப் பள்ளிக்கு பக்கத்தில் தான். பாவம் என்னைப் போலவே கொஞ்சம் கையைக் கடிக்கும் சூழ் நிலை. இரண்டே ,இரண்டு குதி வைத்த காலணிகள். முகத்துக்கு மட்டும் சின்னதாக ஒரு பூச்சுப் படை. பிடிக்காதது- இருக்கை கிடைத்ததும் செத்த கோழி மாதிரி முறிந்து விழும் தலை. தூக்கத்தில். தூக்கத்தில் இருக்கும் பெண்ணை அனுபவிப்பது தப்பாம். ஆகவே,  வெளியே மட்டும் ரசனை.

இவன் ஒரு அஜால் குஜால் பேர் வழி. எனக்கு பக்கத்திலேயே வேலை.  நிறுத்தத்துக்கு வந்ததும் வராததுமாம் யாரையோ தேடுவான். யாரென்று புரிந்தது. ஒரு நாள் நானும் பின்னாலேயே பின்னூட்டம் கொடுக்கப் போனேன். முழங்காலுக்கு மேலே ஏறிய சட்டை. எண்ணெய் பூசி வழ, வழ என்று இருந்தது. ஆனாலும் மூஞ்சி மந்திக்குச் சகோதரம் என்று காட்டியது. ஒரு நாள் அவனை அவனின் மனைவியுடன் பார்த்தேன். அவனை நொந்தேன். இப்பொழுதும் இருவரும் யாருக்கோ தேடுவது புரியவில்லை.  தேவதையை விட சாத்தான் தான் நல்லாயிருக்குமோ? எதுக்கு?


அடுத்தது ஒரு தமிழ்க் குலக் கொழுந்து இடையில் தொற்றி கடைசி வரை  வருபவள். இப்பொழுதும் தமிழிச்சியாக இருக்க முயல்பவளோ? அடிக்கடி கண்கள் தான் சந்தித்து உள்ளன.  சனக்கூட்டம். ஒரே ஒரு இருக்கை தேடுவாரற்று இருந்தது. உள்ளே நுழையும் போது  ஒரு தாய்க்குலத்தின் முடியை இழுத்து விட்டேன். என்னாடா கோபத்தைக் காணோம். புன்னகை மலருதே என்று நோக்கினால் நம் குலக் கொழுந்து. அடிக்கடி  பரிமாறுவதால் வந்த நெருக்கமோ? சனி. கடேசி இருக்கை. நான் மட்டும் தனியே. அவளும் எனக்கு அருகில். அவளுக்கு அடுத்து ஒரு காதல் கேடிகள். கொஞ்சலும், விஞ்சலும். அவளுக்கு பிடிக்கவில்லையாம். இருக்கை மாறி எனக்கு மறுபக்கம்  அமர்ந்தாள். ஆகா, வெறுப்புக் காட்டுறாளே?  அந்த சேட்டைகளுக்கு. இது நல்லதா படலியே. தூர விலக்கு.

இன்னுமொன்று, அடிக்கடி இப்படி இருக்கக் கூடாதென்று படிப்பினை ஊட்டுவது. முழங்காலுக்கு மேலே சட்டை போட்டால் ஊசிப் போன கொட்டுப் பனைக்கு பாவாடை கட்டியது போலிருக்கும். விடாது மழை போல  தினமும் கண்ணூறு கழியப் பார்க்க வேண்டும்.

இன்று வேட்டை  வாய்க்கவில்லை. சோர்ந்து போயிருக்கையில் திடீர் அதிர்வு. இது என்ன கனவா? இங்கேயும் இப்படி ஒரு பெண்ணா? கடைந்தெடுத்த  கணக்கான அழகு.  ஆடைகளில் நேர்த்தி. தெரிந்தும் தெரியாமலும் கொள்ளை கொள்ள வைக்கும் செதுக்கல். கன்னக் கதுப்புகளில் கபடியாடத் தோன்றும் மென்மை. சுருண்டு விட்ட முடியால்  தலையை மறைக்கும் நேர்த்தி. ஆகா உடலெங்கும் சுடாகின்றதே?  ஏன் இப்படி? இவ்வேளையில் வரணும்?  மனசு கலங்குதோ? வேண்டாம்.  பொட்டைக் காணோம். கழுத்தில் கயிறையும் காணோம்.  வேண்டாம் உனக்கு ஒத்து வராது. விலகு.

ம்ம்ம்ம்… எதிர்பார்ப்புகளோடு இன்றும் நிறுத்தத்தில்….

May24, 2009

பதிவர்கள்..

Filed under: சமுகம் — pukalini @ 04:46

1.அவன் ஒரு கவிஞன். புலவன். பண்டிதன். இலக்கியம் அவன் இலட்சியம். கவிதை புனைவதில் கில்லாடி.படிப்பவர்களை சொக்க வைப்பதில் சூரன். கலியாணம் முடிந்து மூன்று வருடங்களுக்கு  பின்னர், இப்பொழுது தான் தெய்வ கடாட்சம் பட்டு தந்தையாக மாற சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. நேர்த்திக்  கடனடைக்க  பழனிக்கு  மொட்டை போடப் போன வழியில், குடும்பமே கூண்டோடு கைலாயம் போக, இவன் மட்டும் மிஞ்சினான். சாவீட்டில் ஒருத்தன் ” கவிஞரே உங்கள் குடும்ப சாவுக்கு ஒரு இரங்கல் பத்திரிகை அடிக்கப் போறோம் ஒரு இரங்கல் கவிதை எழுதித் தருகிறீர்களா?” என்று கேட்டான்.

2. குடும்பத்தில் ஒரே பையன். வயது 12 தான் ஆகுது. கிரிக்கெட் என்றால் உயிர். சச்சின் என்றால் உயிரையும் விடுவான். எப்பொழுதும் மட்டையும் கையுமாகத் தான் தரிசனம். தெருப் பையன்களுக்கு அவன் தான் டோனி.  என்ன நடந்ததோ? யார் கண் பட்டதோ? வைசூரி வந்து  மண்டையப் போட்டிட்டான். குடும்பத்தாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நேரம் பார்த்து ஐபில் கிரிக்கெட் போட்டிகள். பையனுக்கு பிடித்த கிரிக்கெட் ஆச்சே என்று செத்த இளம் பிரேதத்தின் முன் தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

3.15 வயசு. 18 வயசுத் தோற்றம். சுண்டி இழுக்கும் அழகு. இமைக்க மறக்கும் இளமை. ஆட்டம்-பாட்டம் என்று ஒரே அட்டகாசம். ஆனால் இன்னமும் சின்னப் பிள்ளை மாதிரித் தான் நடத்தை. நாட்டியத்தில் தூள் கிளப்புவாள். பள்ளியில் ஆடுவதைப் பார்த்து ஒரு பாட்டுக்கு ஆடக் கேட்டார்கள். போனவள் திரும்பி  வரவில்லை. பிய்ந்து போனவளாக மருத்துவமனையில் கிடந்தாள். குருதிப் பெருக்கு நிற்கவில்லை. எத்தனை பேரோ? துக்கம் விசரிக்க வந்த ஒருவர் அன்னையிடம்  ‘நீங்களும் செம கட்டையாத் தானே இருக்கீங்க, ஒரு சீனுக்கு வாறிங்களா’ என்றான்.


நாட்டு நடப்பு இப்படித் தான் இருக்கு. அதுக்குள்ள மொழி, இனம், நம் சனம் என்று எவன் புத்தி தடுமாறிப் பிதற்றுவான். இணையத்தில் தமிழ் ஏற்றப் பட்டு வாழ வழி செய்தவர்கள் எல்லோரும் வாழ்வுக்கு வழிதேட, இணையத்தில் வந்த ஒன்றை சுட்டுட்டானாம். முன்னுக்கு குத்துறவனை விட பின்னால குனிய விட்டு குத்துகிறார்கள். தமிழின் இழவு கொண்டாடுவோம்.

May8, 2009

விகடன் – பதிவர்களின் இலக்கா?

Filed under: சமுகம் — pukalini @ 18:27

அண்மைக்காலங்களில் பதிவுகளில் வரும் அதிகமான தலைப்புக்கள்.

1.ஈழத் தமிழர் பிரச்சினை.2.இந்தியத்  தேர்தல்.3.விகடனில் எனது பதிவு.

பெரும்பாலான பதிவர்களின் பதிவுகள் வார இதழேறுவது மகிழ்ச்சி. வாசிப்பாளராக இருந்தவர்கள், படைப்பாளிகளாகி விட்டனர். மெத்தச் சந்தோசம். அவர்களின் திறமைகளுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம். அவற்றினை சகமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறார்கள். இரட்டிப்பு சந்தோசம்.

இனி, எனது குறை மூளையில் உதித்த சில சிந்தனை முத்துக்கள்.

உலகம் உருண்டையானது. சுற்றிச் சுற்றி ஒரே இடத்துக்குத் தான் வர வேண்டும். அறப் பழைய பழமொழி. எல்லோரும் ஏன் ஒரே மாதிரி தட்டையாகவே யோசிக்க வேண்டும். வரைபில் தட்டை வளர்ச்ச்சி கிடையாதே? குத்தெனெ மேலெழும்பி ஒளியை விட பல்லாயிரம் மடங்கு வேகத்தில் செக்கனுக்கு பயணித்தாலும் கண்ணுக்கு முன் அண்டம் பிரமாண்டமாய் விரிந்து கொண்டு செல்லுமே? பின்னர் ஏன் குண்டுச் சட்டிக்குள் குமிழி  உருட்ட வேண்டும். விகடன் மட்டுமே குறிக்கோளா? ஆக்கத்தின் உச்சியா?  உங்களது எண்ணங்களுக்கும், கற்பனைகளுக்கும், எழுத்துக்களுக்கும் அளவு கோலா?

அப்படியாயின் புக்கர் பரிசு ஒருத்தருக்குமே வேண்டாமா? வெல்லப் படமுடியாத,  அடைய முடியாத அல்லது தெரியாத விடயமா?

அடுத்தது, தினமும்  நூற்றுக் கணக்கில் பதிவுகளை வாசித்து வரும் எனக்கு ஒரு நாள் கூட விகடன் பக்கம் போக மனசு வந்ததில்லை. இவர்கள் சொல்லும் பதிவுகளை பெரும் பாலும் நான் படித்தே இருக்க மாட்டேன். என்னுடைய தேடல்கள் வேறுபட்டவையா? அப்படியாயின் விகடனின் தெரிவு முறை என்ன? வெறும் கவிதை, சிறுகதை, குட்டிக் கதைகள் மட்டும் தானா? எத்தனையோ அலசல்கள், புதினங்கள், விவாதங்கள் நிகழ்கின்றனவே அவை ஏன் அச்சேறக் கூடாது? ஏறியும் எனக்குத் தெரியவில்லையா?


விகடன் வார இதழா? அதற்கு என்ன வரைவிலக்கணம்? ஏற்கனவே ஒருத்தர் சுட்டியது போல் பாதிப்பக்கங்கள் சினிமாவுக்கும், பேட்டிகளுக்கும். ஆண்மைக் குறைவு-சொட்டைத் தலை விளம்பரங்களையும் விலக்கிப் பார்த்தால் மிஞ்சுவது  என்ன?

ஆக மொத்தம் அப்படியே ஜனரஞ்சமாக இருக்க வேண்டும். வித்தியாசமானவைகள் மக்களுக்குத் தேவையில்லை.  அவர்களை அடையத் தேவையில்லை. வெறும் அஜால்,குஜால் மாற்றர்கள் மட்டுமே கொடுக்கிற காசுக்கு போதுமா? வித்தியாசம் என்று வாராவாரம் சினிமாப் போஸ்டர்களை மாற்றி மாற்றிப் போட்டால் சரியா? மக்கள் எப்போதும் போல வீணி வழிய வாசித்தால் போதுமா? எத்தனை பேருக்கு பதிவுகள் என்று ஒன்று இருக்கு, தமிழிலேயே எழுதலாம், வித்தியாசமான ஒரு சமுகப் புரட்சி அங்கே நிகழ்கின்றது,பக்கச் சார்பான செய்திகளை உடைத் தெறிய ஏற்கனவே களமமைத்து விட்டாகி விட்டது என்பது தெரியும்.

அல்லது திறமையானவர்களை கட்டிப் போடும் முயற்சியா? தங்களுடனேயே இருக்க.

எத்தனையே நிறைய ஆக்கங்கள் பலரால், பலவிதமாக படைக்கப் பட்டு மக்களை அடைய வேண்டியவைகள் எல்லாம் வெறுமனே கணினிகளில் மட்டுமே பிரசுரமாவது வருத்தமாக இல்லையா?

உதாரணத்துக்கு பொருளியல் தகவல்கள். யார், யார் எப்படி எழுதுவார்கள் என்று எனக்கே தெரியும். அவர்களின் கட்டுரைகள் நாணயத்தில் வந்திருக்கா? எனக்கு தெரியவில்லை. ஏன்? அங்கு எழுதுபவர்கள்  கும்மி அடிப்பார்களா? மோட்டார் விகடன்?

அப்புறம், நான் விகடன் அன் கோ படித்து ஆண்டுகளாகி விட்டது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் நண்பர்களின் கழிப்பறையை நாடும் போது கண்டிப்பாக ஒரு புத்தம் சொருகி இருக்கும். அது இந்த மாதிரியான  வார இதழ்கள் தான். ஒட்டு மொத்தமாக இவை படிக்க வேண்டிய இடம் அது தானா?


ஏதோ இதையாவது போடுறாங்களே என்று திருப்திப் படலாம் தான். ஆனால் தமிழின் நம்1 வார இதழ் என்று ஏன் போடுறாங்கள் என்பது மட்டும் புரியவில்லை. இந்த புரட்சிக்காரங்கள் நடாத்தும் நக்கீரன் போன்றவைகள் ஏன் பதிவர்களைக் கண்டு கொள்ளக் கூடாது? மீசை இல்லாதவங்கள கண்டுக்க மாட்டாங்களோ?


அப்பாடா தலைப்பிலேயே என்ர புத்தியைக் காட்டின சந்தோசம்.

1.விகடனைக் குறி வைத்துத் தாக்கும் பதிவர்கள். என்னை மாதிரி.

2.விகடனில் பிரசுரமாவதை குறியாகக் கொண்டோர்.

தூக்கிலிடுபவரின் குறிப்புகள் -விமர்சனம்(?)

Filed under: சமுகம் — pukalini @ 02:34

பழைய- பொது இடத்தில் தூக்குஜனார்த்தனன் பிள்ளையின் எண்ணங்கள். 117 தூக்குகள் போட்டவர். தமிழில் எழுதிக் கொடுத்துள்ளார். சசிவாரியர், மலையாளி ஆங்கிலத்தில் எழுதியதை இரா.முருகவேள் மீண்டும் தமிழுக்கு கொண்டு வந்துள்ளார்.

1.தந்தை வழியாக வந்த உத்தியோகம். பிரியமில்லாவிட்டாலும்- தொழில், வயிற்றுப் பிழைப்புக்காக. பஞ்ச காலத்தில் பட்டினி கிடந்தாலும் வயிறு காயாமல் உயிரைக் காப்பாற்றும் அரச பணி. உயிர் எடுத்து உயிர் வளர்த்தல்.

2.சிறு வயதில் தந்தைக்கு ஊரில் இருந்த ஒரு வித பயம். இருந்தாலும் பெட்டிக் கடையில் காசு கொடுத்தால் தான் பொருட்கள். வித்தியாசமான அனுபவங்கள்.

3.எவனாவது கொலை செய்ய முடியவில்லையே என்று கலங்குவானா? இவரின் தந்தை வெற்றியளிக்காத ஒரு தூக்கிற்காக வருந்துகின்றார். தொழில் நேர்த்திக் குறைவு? அல்லது தூக்கின் பின் கொடுக்கப்படும் உபகாரச் சம்பளம் கிடைக்காமையா?

4.தொழிலை ஏற்றுக் கொண்ட பின்  முதல் தூக்கு. மனவருத்தங்கள். மனைவி சந்தோசப் படுத்த முயன்றும் தோல்வி.  ஆனால் காலையில்  கூடல். எப்படி ஒரு மனிதனால் சடுதியில் மாற முடிகின்றது?

5.தூக்கு உறுதியான பின் கடைசி  நிமிடம் வரை வாழ விட வேண்டும். அதனால்த் தான் காலையில் தூக்கு. அதாவது பழைய வழக்கப் படி சூரியன் உதிக்கும் வரை பழைய நாள்.

6. தூக்குப் போடும் நாளுக்கு முன் சிறை வளாகமே அமைதியாகும். ஏன்? ஏற்கனவே தெரிந்தது தானே? எதற்கு ஒரு நாள் மௌன விரதம்?

7.ஆனால், காக்கா குருவிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கும். சரி அவற்றைக் கொல்ல முன்  மனிதன் எப்பொழுதாவது யோசித்து இருப்பானா? பின் ஏன் அவை மனிதனுக்காக கவலைப் பட வேண்டும்.

8.தூக்கு மேடை ஆயிரம் தூக்குகளைப் பார்த்திருக்கும். ஆனால் எப்போதும் மேடை நோக்கியே கால் தடங்கள் இருக்கும், திரும்பி வந்த அடையாளங்கள் இல்லை.

9.தூக்குப் போடும் மரம் தூக்கிலிடுபவரைப் போல் ஒன்றரை மடங்கு கல்லின் மூலம் பரிசோதிக்கப் படும். மூன்று தடவைகள். ஆக மொத்தம் எத்தனை தடவைகள் மரம் பாரத்தைத் தாங்கி இருக்கும். சரி விடயம். மரத்தில் கயிறு கட்டப் படும் இடத்தில் உள்ள வடு இந்தச் சோதனைகளால் வந்ததா? இல்லை.

10.மனிதனை தூக்கிலிட்ட பின் கல்லுப் போல் அவன் அமைதியாக இருக்க  மாட்டான். உதறுவான். அதனால் ஏற்பட்ட தழும்பு தான் அது. பெண்கள் தூக்கிலிடப் பட்டதில்லை.

11.இது ஒரு கலை. எங்கே பழகுவது? ஒழுங்கான முறையில் தூக்கு போடப்படா விட்டால் உயிர் அந்தரத்தில் தத்தளிக்கும். அதிகமாக உதறும். ஒரு தடவை சலமும் மலமும் ஒருங்கே கழிந்தது.

12. எப்படி இருந்தது? வலித்ததா? என்று கேட்க முடியாது.

13. ஒழுங்காக மாட்டப் பட்ட தூக்கினால் கழுத்து முறிந்து உடனடி விடுதலை.

14. கிடங்கு வெட்டி உமியை கழுத்து வரை போட்டு நெருப்பு  மூட்டுதல். அருமையான  தமிழர்களின் கண்டு பிடிப்பு.

14.தூக்கு போடப்படுவதை பார்க்கலாம். பார்க்க வருபவர்கள் பெரிய புள்ளிகள், கௌரவமானவர்கள். ஏன் அவர்கள் மட்டுமே வருகிறார்கள்?

15. ஒரே ஒரு முறை என்னை ஏன் கொல்கிறீர்கள் என்ற கேள்வி.

16. பதில்? மேலிடத்து கட்டளை. அவர்களுக்கு.

17. சில வேளைகளில் தூக்கு நிறுத்தப் பட்டிருக்கும். ஆனால் ஆணை முடிந்த பின்னரே  அடையும் படி அமைக்கப் பட்டிருக்கும்.

18. 117 சோடிக் கைகள் கழுத்தை நெருக்குவது போல கனவுகள்.

இவைகள் எல்லாம் அவர் எழுதிய அனுபவக் குறிப்புகள்.

கோழியையோ, ஆட்டையோ வெட்டும் போது பார்த்தாலே சாப்பிட முடியாது. இவரால் எப்படி 117 துக்குக்களின் பின்னும் வாழ முடிந்திருக்கிறது. விரக்தியின் வெளிப்பாட்டைக்  காணலாம்.


இவரின் குறிப்புகள் அருமை. வித்தியாசமான உணர்வுகளுக்கு எம்மை அழைத்துச் செல்லும். ஆனால் வாரியார் சொதப்பி வைத்துள்ளார். படிக்கும் போதே எரிச்சல் வரும். அனுபவங்களை உணர முழுவதும் படிப்பது தான் ஒரு வழி.

குறிப்பு- இந்நூல் வெளிவர முன்னமே  தூக்கிலிட்டவர் இறந்து விட்டார். திடீர் சாவு தான். நல்ல சாவாம். இவர் படித்தது வெறும் 3ம் வகுப்பு மட்டுமே. இவரால் எப்படி இவ்வளவு தூரம் சிந்திக்க முடிந்தது என்பது வியப்புக்குரியது. ஏன்?

May1, 2009

நாய்களின் கொலைவெறி

Filed under: சமுகம் — pukalini @ 03:29

ஊரிலேயே நல்ல வசதியான, பணக்காரக் கூட்டம் அது. அவர்களின் சொகுசுக்கு எடுத்துக்காட்டாக ஒரு உயர் சாதி நாயையும் வளார்த்து வந்தனர். அது ஆளுயரத்தில்  பார்ப்பதற்கு  ஆள் மதிரியே இருக்கும். என்ன வித்தியாசம் என்றால் அதன் வால். எப்போதும் சுருண்டிருக்கும்.  வால்ச் சேட்டைகள் செய்யும் போது மட்டும் அது வாலை நிமிர்த்தி, நீட்டி வைத்திருக்கும். ஏதாவது குளறுபடிகள் செய்தால்  வாலைச் சுருட்டி பின்னங்கால்களுக்கிடையில் சொருகிக் கொள்ளும். சொல்ல மறந்திட்டன், அது ஒரு ஆண் நாய்.


குடும்பச் செல்வாக்கு கரணமாக அந்த நாய்க்கு போகுமிடமெல்லாம். சிறப்பு. பயம். வெளியிலே போனால் கண்டிப்பாக சொறி, சுரட்டை பண்ணாமல் வீட்டுக்க வராது. மிஞ்சிப் போனால் வாலாட்டி விட்டு, இரண்டு சத்தம் போட்டு விட்டு  வெற்றிக் களைப்புடன் வீடு திரும்பும். வளமாக யாராவது அகப்பட்டால் கட்டாயம் வாய் வைக்காமல் வீடு திரும்பாது. அப்படி வந்து விட்டாலும் அன்றைக்கு வீடு அல்லோல கல்லோல படும். வீட்டுக்காரள் வந்து அமைதிப் படுத்தும் வரை.

ஊராருக்கு நாயின் வேட்டைப் பொருளாக இருப்பதில் உடன்பாடில்லை. இருந்தாலும் என்ன செய்வது? வசதியான குடும்பம். நாய் வாய் வைக்குது என்று இவர்கள் வாய் வைத்தால் அப்புறம் இவர்களுக்கு வாய்க்கரிசி தான். அந்த வீட்டில் இன்னுமொரு நாயும் இருந்தது. அது அங்கிருந்த  உயர் சாதிப் பெண்  நாய் அந்த  நேரத்து வலி பொறுக்காமல், வீதியில் வரட்டி தின்று கொண்டிருந்த சொறி நாயுடன் பூட்டுப் போட்டு போட்ட குட்டி. வளர்ந்து வருகையிலேயே அது தன் பீக் குணத்தை காட்டியபடியால் போட்டுத் தள்ளி விட்டார்கள்.

இப்பொழுது உள்ள நாயும், அந்தப் பெண் நாய்க்குப் பிறந்த குட்டி தான் என்றாலும், அப்பா நாய் சாதியான நாயான படியால் விட்டு வைத்துக் கொண்டாடினார்கள். அவர்கள் வெளி நாடுகளுக்குப் போனாலும் அதையும் வேறு வெளி நாடுகளுக்கு  அழைத்துச் செல்லுவார்கள். போன இடத்தில் கக்கா போக வேண்டும் என்று அவிழ்த்து விட அது வரும் போது வேற ஒரு நாயுடன் வந்து சேர்ந்தது. அதுவும் கொஞ்சம் கலராக  இருந்த படியாலும் வாங்கக் கொஞ்சம் காசு தேவைப் படும் என்பதாலும் வீதி நாயாயிருந்தும்  பெண்  நாயாயிருந்த படியால் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்து விட்டார்கள்.

நாய்க் குடும்பம் பல்கிப் பெருகியது. ஒரே குட்டிப்  பட்டாளங்கள். இருந்தாலும்  தாய் நாயும், அப்பா நாயும் இன்னமும் அப்படியே மாறாமல் இருந்தார்கள். அது தின்ற பழக்கம் விட்டுப் போகுமா?


இப்பொழுதும் ஊராரில் வாய் வைப்பதும், காலையில் உட்காரப் போனால் பின்னால் வந்து கடிப்பதும் இல்லாவிட்டால் பல்லுப் பதிப்பதுமாக இருந்தது. வெட்கம்,மான்ம், ரோசம், சூடு, சுரணை  கெட்ட மக்களும் திட்டி விட்டு போய் விடுகிறார்கள்.

இப்படித்தான் அது அதைத் தேடி அலைந்த போது அடுத்த  ஊருக்குப் போய் விட்டது.  பழக்க தோசம். வாய் வைத்து விட்டது. அடுத்த ஊர்க்காரர்கள் கொஞ்சம் வித்தியாசம். அந்த  நாயைத் தேடு தேடென்று தேடி நலமடித்து விட்டார்கள். நாயும் வீங்கின பையுடன் கால்களை அரக்கி, அரக்கி நடந்து திரிந்தது. பாவம் அதுக்கப்புறம் அதனால் பூட்டுப் போட முடியவில்லை.

பெண் நாயோ வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றது. பூட்டுப் போடவும் வழியில்லை. என்ன செய்யும். ஊர் நாய்களிடம் போகவும்  மனசு விடவில்லை. இது வேறு கிழடு தட்டி விட்டது. தெரு நாய்களுக்கு  கிழடுகளுடன் பூட்டுப் போட யாரு காசு கொடுக்கிறார்கள்?காமம்,தாபமாகி ,தாகமாகி கொலை வெறிக்கு தூபம் போடுகின்றது. குடும்பத்துடன் வெளியே சென்று அடுத்த ஊர்க்காராள் காலையில் ஒதுங்கும் போது பார்த்திருந்து பாய்கின்றன. பாவப் பட்ட பிறப்புகள் ஒதுங்க வழியில்லாமல் ஊரையே நாறடிக்கிறார்கள். பக்கத்து ஊர்க்கார்களும் பிரச்சினைக்கு காரணமான நாய்களை விட்டு அந்த மக்களை  வைகிறார்கள். எப்படியும் ஒரு  நாளைக்கு அந்த  நாய்களுக்கு ஒரு பாடம் கண்டிப்பாக இருக்குது.

April24, 2009

நான் கற்பில்லாதவனா?

Filed under: சமுகம் — pukalini @ 17:37

எனக்கு இப்பொழுது தான் எண்பத்தி சொச்சம் வயசாகுது.திருமணம் செய்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல். ஐந்து பிள்ளைகள் வேற பெத்திருக்கன். எல்லோரும் என்னைச் சாகிற வயசில போய் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணிடன், நான் சோரம் போய் விட்டன், கற்பைப் பறி கொடுத்து விட்டன் என்று கண்டபடி வாய்க்கு வந்தவாறு சொல்லுகிறார்கள். திட்டுகிறார்கள்.  சிலர் கொடுஞ் சாபங்களைக் கூட கொடுக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் எனது வாழ் நாளிலும், தாம்பத்திய காலத்திலும் நான் எப்படிக் கண்ணியமாக நடந்து இருக்கிறேன் என்பதையும், எனது மாசில்லாதா, ருசுப் படாத வாழ்க்கையையும்  சமர்ப்பிக்கின்றேன்.

அரை நூற்றண்டுகளுக்கு முன்னர்  எனக்கு கலியாணம் எனும் தளை போடப் பட்டது. மணப் பெண் எனது எதிர்பார்புகளுக்கு கிட்டவும் வரவில்லை. ஆயிரம் கனவுகள், கற்பனைகளுடன் வாழத் தொடங்கிய கணமே எனது ஆசைகள் நிராசைகளாகி விட்டன. பெண் கனாக் காணும் காலங்களில் வரும் பேச்சி அம்மா மாதிரியே இருந்தாள். இப்பொழுது சொல்லுங்கள்,நான் எனது வாழ்க்கையையே தியாகம் செய்யவில்லையா? அந்தக் கருவாச்சிக்கு என்னை, என் ஆகாசக் கோட்டைகளை இடித்து உரமாக்கி பசளை இடவில்லையா?

இன்னும் கேளுங்கள்,

எப்படி ஐந்து குழந்தைகள்? திருதராட்டினன் ஏன் குருடனாய்ப் பிறந்தான்? தாய்க்காரி கூட வந்த வியாசரின் உருவமும், வாடையும் பிடிக்காமல் கண்ணை மூடிக் கொண்டு, சிவனே என்று முகட்டிலே ஓடும் எலியை ஆரய்ச்சி செய்ததன் பலன். பாவமாம். குழந்தை குருடாயிற்று. நானும் மனுசன் தானே காலையிலேயே சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கமே கலியாணத்துக்கு அப்புறம் தான் வந்தது. எல்லாம் சனியன் பிடிச்ச, தறுதலையின் மூஞ்சியைப் பார்க்க விரும்பாததும், காலையிலேயே அதிலே விழிக்க வெறுத்ததும் தான் காரணம். இந்தத் தொல்லைகளில் இருந்து விடுபடவே நான் எவ்வளவோ நல்லவனாக நடித்து போராட்டங்கள்,கதைகள், கவிதைகள் என்று  வெளியிலே புறப்பட்டேன்.ஐந்து குழந்தைகளுக்கும் கூடியாக வேண்டிய கட்டாயம். நிர்ப்பந்தம். அதிலும் கூன், குருடு, ஊமை, நொண்டி இல்லாத ஐந்து குழந்தைகள். ஊர் தூற்றுமே? புழுதி வாரிக் கொட்டுமே? என் ஆண்மைக்கு இழுக்காகுமே? பொண்டாட்டிக்கு தீனி போடாத கஞ்சன் என்று அவச் சொல் தாங்க நேரிடுமே? என்ன செய்வேன்? ஐயகோ: ஒவ்வொரு முறையும் கூடிக் கலந்த பின் என்னிலே நான் வெறுப்புற்று,  என்னை அழிக்க எண்ணி ரயில் தண்டவாளத்திலே தலை வைத்துப் படுத்து போராட்டம் என்று கதை விட்டது எல்லாம் யாருக்காக?

இதுவரைக்கும் கட்டியவளுக்கு இது தெரியுமா? ஐந்து தரம் முந்தானையை விலக்கியதைத் தவிர அவள் எனக்கு என்னத்தைக் காட்டினாள்? சொர்க்கத்தின் வாசலைச் சுட்டி, திறந்து காட்டினால் சரியா? உள்ளே அழைத்துச் சென்று அறுசுவையும் படைக்க வேண்டாமா? அது அங்கே கிட்டுமா? கிடைக்குமா? முடியலையே.

அதனால் தானே நான் வெளிக் கடைகளில் கை நனைக்க வேண்டி  வந்தது. அதுவும் தள தள உடம்புகளுடனும், சுண்டச் சிவக்கும் பப்பாளிக் கலர்க்காரிகளுடனும் சல்லாபித்தது  தவறா? அவர்களின் குழந்தைகளுக்கு நான் அப்பனானேனா? ஏதோ கொஞ்ச நேரச் சபலத்துக்காகவும், கட்டியவளிடம் கிடைக்காததற்காகவும் தானே நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு அலைந்தேன். இதில் என்ன குற்றம் கண்டீர்? ஐந்து குழந்தைகளையும் சுகப் பிரசவம் பெற வைத்தேனே? வளார்த்தெடுத்தேனே? மேனா மினுக்கிகளிடம் இரண்டறக் கலந்த பின் தானே கருவாச்சிக்கும் சுகம் காட்டினேன். அவலை நினைத்து உரலை இடித்தாலும் உரலும் குழியாகும் தானே?


இதெல்லாம் தெரியாத பரதேசிப் பயலுகள், தங்களது பொண்டாட்டிகளையே கருவுறச் செய்ய இயலாதவர்கள், கையாலாகாதவர்கள், சோமாறிகள் எல்லோருமாகச் சேர்ந்து என்னைத் தூற்ற கூட்டு சேர்ந்து விட்டார்கள். என்னைத் திட்டும் நாக்குகள் துண்டாகட்டும். புழுதி அள்ளுபவர்களின் கைகளில் குஷ்டம் பரவட்டும். புறம்  பேசும் வாய்களில் புண்ணாக்கு விழட்டும்.

.

.

..

இதற்கும் இன்றைய கால கட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புனை கதையும் இல்லை.

இவர்கள் யட்டி போடுவதில்லை

Filed under: சமுகம் — pukalini @ 00:35

தமிழ் நாட்டில் கொஞ்சப் பேர் யட்டி போடுவதில்லை. அதுக்காக கோமணம் கட்டக் கூட பழைய வேட்டித் துணி இல்லை என்று அர்த்தம் இல்லை.  காரணம், ஏன் இதுகளை இடுப்பில் ஏற்றிப் பாரத்தைக் கூட்ட வேண்டும்.  அதுகளை வைத்து பாரத்தைக் குறைக்க வேண்டிய அவசியமே இல்லையே. அவர்களுக்குத் தான் இடுப்பிலே தொங்குவதற்கு என்று ஒன்றுமே இல்லையே? அப்புறம் எப்படி கலியாணம், குழந்தை, குட்டி என்று சுத்து மாத்து பண்ணூகிறார்கள்?

எல்லாம் சம தர்மம் தான். பெண்களுக்கான சம உரிமை. தங்களால் முடியா விட்டாலும் தங்களுடைய மனைவிமாரின் இன்பத்திற்கு எந்தக் குறையும் வைக்காதவர்கள். கட்டியவளின் சந்தோசமே முக்கியம் என்று பாடு பட்டவர்கள். ஆக மொத்தம் முதலெழுத்து மட்டும் இவர்களுடையது. பொருள் வேறொருவருடையது.

இது தப்பெண்ணம் என்றோ, தவறென்றோ யாராவது அறிக்கை விட்டால் இவை அனைத்தும் பின் வாங்கிக் கொள்ளப் படும்.

இதுக்கும் இந்தியா இலங்கைக்கு எந்த உதவியும் செய்வதில்லை என்று சொன்னால் உண்மை  தான் என்று நம்பும் படி அறிக்கை விட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

April22, 2009

பழிக்குப் பழி

Filed under: அலட்டல் — pukalini @ 21:51

நான் நல்லவன் தான்.அதுக்காக ரொம்பவே நல்லவன் கிடையாது. தொட்டவனை விட்டதில்லை,விட்டவனைத் தொட்டதுமில்லை என்று புராணம் படிக்கவோ; சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்; சொல்லாததையும் செய்வோம்,செய்யாததையும் சொல்வோம் என்றெல்லாம் பெருமை பேசவோ முயன்றதில்லை.

நேற்று மாலை, வேலை விட்டு பஸ்ஸில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். எப்பொழுதும் போல மேல் மாடி இருக்கை தான் வசதியாக மாட்டியது. கொஞ்ச நேரம் கழித்து ஒரு குரங்கொன்று பக்கத்தில் வந்து இருந்தது. அது இந்தியச் செங்குரங்கு. உட்கார்ந்து முன் இருக்கைக்கு மேலே காலை முண்டு கொடுத்துக் கொண்டு -போனில் படம் பார்த்துக் கொண்டிருந்தது. இறங்கும் இடமும் வந்தது. அந்தக் குரங்கைத் தாண்டிப் போவதற்குள் முன்னுக்கு நின்றிருந்த ஒரு கிழடை மெதுவாக முட்டி விட்டேன். முட்டியது நானும் இல்லை. எனது பை. அதுக்க இருந்தது வெறும் சிகரெட் பெட்டி மட்டுமே. இருந்தாலும் எனது உடைமையான படியாலும், முட்டியதற்கு நானும் ஒரு கருவி என்ற அடிப்படையிலும் அந்தக் கிழட்டின் முகச் சுழிப்புக்கும், உச்சுக் கொட்டலுக்கும் ஆளானேன்.

எனது கிறுக்குப் புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. கிழடு இறங்குவதும் எனது இறக்கம். இறங்கட்டும் பார்க்கலாம் என்று பொறுத்திருந்தேன். பஸ்ஸில தான் படம் எடுத்துக் கொண்டு இருப்பாங்களே? கிழடு முன்னே இறங்க, நானும் பின்னே இறங்கி செருப்பிலே ஒரு மிதி. கிழடு திரும்புவற்குள் நான் கிளம்பி விட்டேன். இங்கு கிழடு என்று குறிப்பிடக் காரணம், கிழடு கிழடாக இல்லாமலிருந்ததும், எதிர்வினை ஆற்றிய விதமும் தான். கண்ணுக்கும், உதட்டுக்கும் பூச்சுப் பூசினாலே இளமை கொழிக்குது என்று தானே அர்த்தம். அதுகளுக்கு என்ன முன்னுரிமை?

இன்னுமொரு தடவை குறுந்தொலைவு தொடருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். காலை வேளை. எப்படியும் குளித்து வாசனைத் திரவியங்கள் எல்லாம் பூசித்தான் கிளம்பி இருந்திருப்பன். பக்கத்தில் நின்றிருந்த ஒரு பெண்மணி ஒதுங்க ஆரம்பித்தது. நானும் முதலில் அதைக் கவனிக்கவில்லை. பின்னர் தான் நோட்டம் விடும் போது புரிந்தது. அடி சண்டாளி, நீ காலையில ஒதுங்கிட்டு கால் அலம்பாம பேப்பரிலேயே முடிச்சிட்டு வாற, அதுக்குள்ள உனக்கு எண்ட கலர் ஒட்டிருமா? விட்டேனா பார் என்று கிட்ட கிட்டவாக நெருங்கி ஏதோ காதலிக்கிற பெண்ணின் வாசத்தைப் பிடிக்கிறவன் மாதிரி மோப்பம் பிடிச்சு ஒரு வாசலில ஏறுன சிறுக்கிய அடுத்த வாசலால இறக்கி விட்டேன். அப்பாடா மனசுக்கு ஒரே சந்தோசம்.

தொடரலாம்….

April4, 2009

விமானத்தில் கை பேசி

Filed under: சமுகம் — pukalini @ 18:57

FCC ஆனது விமானம் ஆகாயத்தில் பறக்கும் போது cellular transmitters
இயக்கத்தில் இருப்பதற்கு தடை செய்துள்ளது.ஆனால் விமானம் தரையில் இருக்கும் போது எந்த விதமான தடையும் இல்லை. இந்தத் தடையானது விமானத்தின் தொலைத்தொடர்புகளுக்கு இடையூறு செய்யும் என்பதற்காக ஏற்படுத்த்ப் பட்டதல்ல. மாறாக தரையில் உள்ள cellular
service களை இடையூறுகளில் இருந்து தவிர்ப்பதற்காகவே ஏற்படுத்தப் பட்டுள்ளன. நமது கைப்பேசிகளினது உயரம் கூடும் போது அதனது rangeம் அதிகரிக்கின்றது. அதனுடன் coverage areaம் அதிகரிக்கின்றது.மிகவும் உயரமான இடத்தில் கைப்பேசி இருக்கும் போது அதனது தரைத் தொடர்புநிலையங்களுடனான முயற்சி பல cellular
base stationகளுடன் இணைப்பில் வருகின்றது. அதாவது ஒரே frequencyயில் இயங்கும் பல தொடர்பு நிலையங்களின் வாயிலாக அது பல base stationகளுடன் இணைப்பதற்கு முயல்கின்றது. .இதனால் பல blocked அல்லது dropped அழைப்புகளுக்கு ஏதுவாக இருக்கின்றது.

விளக்கமாகப் பார்த்தால், நமது கையில் இருக்கும் கைப்பேசி ஆனது ஒவ்வொரு செக்கனுக்கும் பல நூறு தடவைகள் செல் போன் ரவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி தனது இருப்பிடத்தையும், எவ்வளவு தூரத்தில் தான் இருக்கின்றது என்பதனையும் தெரியப் படுத்துகின்றது. இந்த ரவர்கள் கைப்பேசியினது பேஸ் ஸ்ரேசனுடனான இணைப்பை உறுதி படுத்துகின்றது. 

சில வேளைகளில் கைப்பேசி பல ரவர்களின் ரேஞ்சில் வரும். அப்பொழுது அது எந்த ரவரிலிருந்து கூடுதலான சக்தியினை பெறுகின்றதோ அந்த ரவரின் ஊடாக பேஸ் ஸ்ரேசனுடன் தொடர்பில் வரும். இதற்கு ஒவ்வொரு கைப்பேசியும் ரவரும் தனித் தனி அதிர்வெண்களை உபயோகப் படுத்தும். குறிப்பாக அறுகோண வடிவில் ரவரினது ரேஞ்ச் அமைந்திருக்கும். இடையூறுகளை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு ரவரும் வித்தியாசமான அதிர்வெண்களை உபயோகிக்கும்.

ஆனாலும் இந்த அதிர்வெண்கள் ஆறு அறுகோண அமைப்புகளுக்கு அப்பால் மீண்டும் உபயோகத்தில் வரும்.

சரி, 
இனி நாம் விமானத்தில் இருக்கும் போது எமது கைப்பேசி ஆனது பல ரவர்களின் ரேஞ்சில் வரும். அதிலும் குறிப்பாக ஒரே அதிர்வெண்ணில் தொழிற்படும் ஏராளமான ரவர்களுடன் அது தொடர்பு கொண்டு பேஸ் ஸ்ரேசன்களுடன் இணைப்பு பெற முயலும். அப்பொழுது, அதே அதிர்வெண்ணில் நிலத்தில் இருந்து தொடர்பு கொள்ள முயலும் கைப்பேசிகளின் இணைப்புகளைத் துண்டிக்க முயலும்.
எப்படி? நமது கைப்பேசியும் முயல, கீழே உள்ளதும் முயலும். செக்கனுக்கு ஆயிரம் தடவைகள் படி இரண்டும் முயன்றால் ரவர் என்ன செய்யும். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பும். இப்படி பல ரவர்களின் வழி பல பேஸ் ஸ்ரேசன்களை இணைக்க முயன்றால் எப்படி இருக்கும். இது ஒரு கைப்பேசிக்கு. இப்படி ஆயிரமாயிரம் கைப்பேசிகள் ஆயிரக்கணக்கான ரவர்களையும், நூற்றுக் கணக்கான பேஸ் ஸ்ரேசன்களையும் குழப்பினால் என்னதான் நடக்கும். 

அதனாலயே அதை தடை செய்துள்ளார்கள்.
ஆனாலும் அனுமதி பெற்று விமானத்தில் உபயோகிக்க என்று சில அதிர்வெண் வகைகள் உள்ளன. தாராளமாய் உபயோகிக்கலாம். பணம் தான் அதிகம்.

பெரியாரின் பூமியில் சூப்பர் சீன்ஸ்

Filed under: சமுகம் — pukalini @ 07:13


ஈரோடு இரயில் நிலையம். காலை மணி எட்டு. கோவையிலிருந்து சென்னை போக வேண்டிய வண்டி இன்னமும் வந்து சேரவில்லை. சும்மா இருக்க முடியாமல் முன்னும் பின்னும் அலைந்து கொண்டிருந்தேன். அப்போது என் கண்களுக்கு விருந்தாகிய இரண்டு காட்சிகள்.

  1. ஒரு வயதான பெரியவர். அவருக்கு வயது ஒரு அறுபது மதிக்கலாம். கந்தலான உடை உடுத்தி இருந்தார். கையில் ஒரு கூடையுடன் இரயில்வேத் தடத்தைக் கடந்து கொண்டிருந்தார். அந்தக் கூடை குப்பை போடுவதற்கானது. அதற்குள்ளே பச்சை நிறத்திலான ஒரு பொலித்தீன் பை. கடந்தவர் இரயில்களுக்கு தண்ணீர் பிடிப்பதற்கான குழாயின் கீழே குந்தி இருந்து, அந்தப் பிய்ந்து போன பொலித்தீன் பையை, வெற்றுக் கைகளால் கழுவினார். பின்னர் அந்தப் பையையே துணியினைப் பிழிவது போல் தூக்கிப் பிடித்து பிழிந்தார். காவி நிறத்தில் ஒரு திரவம் அவரின் முழங்கைகளில் இருந்து வடிந்து ஓடியது. அந்தப் பையினையே மீண்டும் அந்தக் கூடையினுள் இட்டு குப்பை போடும் இடத்தில் வைத்தார். அந்தப் பெரியவர் இரயில்வே ஊழியராக இருக்கலாம்.

  1. அப்படியே கொஞ்சத் தூரம் உலாத்திக் கொண்டே தளமேடையின் முடிவு வரை வந்து சேர்ந்தேன். அங்கும் ஒரு கூட்டம் கொட்டும் வெயிலிலும் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தது. அவர்கள் இரயில்வேத் தடத்தின் இரு புறமும் இருந்த புற்களையும், வேண்டத் தகாத பொருட்களையும் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களும் வெற்றுக் கைகளினாலேயே வேலை செய்து கொண்டிருந்தார்கள். சாதாரணமாக இரயில் பயணம் செய்பவர்களுக்கு இரயில்வே நிலையம் எப்படி இருக்கும் என்பது தெரியும். அதிலும் தடங்கள் நிலையங்களில் எப்படி இருக்கும் என்பது மிக நன்றாகவே தெரியும். மனிதனின் திட, திரவக் கழிவுகள் எல்லாம் புளித்துப் போய் செமையான ஒரு வாசனை நீக்கமற நிறைந்திருக்கும். அதற்குள் மனிதர்கள் வெற்றுக் கைகளினால் வேலை செய்ய முடியுமா? முடியுதே?

இவற்றை ஏன் நான் இங்கே குறிப்பிட வேண்டி இருக்கின்றது என்றால், ஈரோட்டில் தான் பகுத்தறிவுச் சூரியன் உதித்தது. அங்கு தான் திராவிட மக்களுக்கு ஒரு சாப விமோசனம் கிடைத்தது. ஆக மொத்தம், இவற்றிலிருந்தே ஈரோட்டின் பகுத்தறிவு நிலையையையும், தமிழ் நாட்டின் பகுத்தறிவு நிலையையையும் அனைவரும் வெட்ட வெளிச்சமாக அறிந்து கொள்ளலாம்.

இங்கு நான் தமிழ் ஓவியா பற்றி எழுதியதுக்கு ஒரு பதில் வந்தது. அதனால் தான் என் மன நிலையை சற்று தெளிவாக உளறலாம் என்று எண்ணுகிறேன்.

நானும் பெரியாரைப் படித்தவன் தான். அண்ணாவையும், கலைஞரையும் படித்தவன் தான். கொஞ்சூண்டு யோசித்தவன் தான். அதன் படி நடக்கவும், சிந்திக்கவும் தலைப்படுபவன் தான். ஆனால் நடைமுறையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கின்றது?

பெரியாரின் உடன் வாரிசு. தற்போது உயிரோடு இருந்து பலரின் உயிர்களை எடுப்பவர். மு.. பகுத்தறிவுப் பட்டறையில் புடம் போட்டு புரட்டி எடுக்கப் பட்டவர். அவரின் தோளிலே எதற்கு மஞ்சள் துண்டு? மூன்றாம் இலக்கம் குருவுக்கானதாம். புதனின் நிறம் மஞ்சளாம். சொல்லக் கேள்வி.போதாதற்கு இப்பொழுது விரலிலே ஒரு நிறக் கல்லு. ஏன்? அவர் மனைவி இறை பக்தை. சொந்த வீட்டுக்குள்ளேயே சாமியாரைக் கூட்டி வைத்து யாகம். தன்னுடன் சார்ந்தவர்களையே மாற்ற முடியாமல் சமுதாய மாற்றம் எப்படி?

இவர்களெல்லோரும் கூடி ஒரு அமைப்பு வைத்து மாசா மாசம் ஒரு கூட்டம் போடுவதும், ஓசியில கிடைக்குதென்று இணையத்தில் எழுதுவதுமாக பெரியார் புகழ் பாடுகிறார்கள். பாடலாம். ஆனால், அவர் என்ன சொன்னார்? என்ன செய்யச் சொன்னார்? எப்படி மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று ஒரு விரிவான,விளப்பமான செயற்பாடுகள் எதனையுமே காண முடியவில்லை.

பெரியாரும், அவருக்கு பின்னரும் என்று ஏறத்தாள ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. நாட்டில் நிறைய சாமியார்கள் குடி வந்தது தான் கண் கூடு. அது தான் நிதர்சனமும். அதிலும் புதிதாக நடிகர்- நடிகைகளுக்கு கோயில்கள். பாலாபிசேகங்கள் போதாதென்று பீராபிசேகங்கள். எனது அக்காவின் பிள்ளைகளுக்கு பெரியாரைத் தெரியாது. சிறிது காலம் கழித்து பெரியாரை ஒரு சாமியாராக நினைத்து பூசை பண்ணப் போகின்றார்கள்

ஆக மொத்தத்தில் இப்பொழுது பெரியாரின் புகழ் பாடிகளும், ரசிகப் பட்டாளங்களும் உருப்படியாக எதுவுமே செய்யப் போவது இல்லை. வெறுமனே நூற்றாண்டுப் பழைய பெரியாரின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் மிஞ்சிப் போய் இணையத்தில் ஏற்றப் போகின்றார்கள். அதனால் யாருக்கு என்ன லாபம்? எனக்குத் தான் அறிவு கம்மி என்றால்இணையம் பயன் படுத்துபவர்களுக்கும் அறிவு என்ன கம்மியா?

போதாதற்கு இப்பொழுது உள்ள தி.மு. அரசுக்கு முட்டுக் கொடுத்து முண்டாகின்றார்கள். அதற்கு ஒரு பட்டியல் வேறு. மக்களால், மக்களுக்காக தெரிவு செய்யப் படுபவர்கள் கண்டிப்பாக மக்களுக்கு செய்ய வேண்டியதைச் செய்தால் அதிலே என்ன பாராட்ட இருக்கின்றது? இவர்கள் என்ன சொந்தப் பணத்திலே செய்தார்கள்? தினகரனில் செத்த இருவரும் எங்கே? ஸ்பெக்ரம் விளக்கம் என்னாச்சு? அதெல்லாம் இவர்களது அறிக்கையில் இல்லையே? எங்கே? தங்களுக்கு வேண்டியதை மட்டும் போட்டால் சரியா?

ஆக மொத்தம் இவன் ஒரு கிறுக்கன் கிறுக்கிறான் என்று, இளகின கோவணத்தை இறுக்கிக் கொண்டு பதில் எழுத உட்காராமல் உங்களது செயற்திட்டங்கள் என்ன என்ன? நடைமுறைப் படுத்துவது எப்படி என்று பொதுவில் வைத்தால் நாங்களும் எழுந்து நின்று சல்யூட் அடிக்காமல், உங்களுடன் கை கோர்ப்போம்.

« Previous PageNext Page »

Theme: Rubric. Blog at WordPress.com.

Follow

Get every new post delivered to your Inbox.