பிறவிப் பெருங்கடல் எடுத்த பயனுக்கு இப்பிறப்பிலேயே, பூவுலகில் மதுரை இராசாசி மருத்துவமனையைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஆமாம், பாவஞ் செய்தவர்கள், கொள்ளைக்காரர்கள்,கொலைகாரர்கள்,திருடர்கள்,பஞ்சமா பாதகங்களைச் செய்தவர்கள் எல்லோரும் அங்கே தண்டனைக்கு காத்திருந்தார்கள். பின்னர் எவ்வாறு அந்த மருத்துவமனையையும் அங்கு சிகிச்சை பெறக் காத்திருப்போர்களையும் சொல்லுவது. பாவப் பட்ட சீவனுகள் போக்கிடம் இல்லாமல் அங்கே வந்து சேர்ந்திருக்கிறார்கள். மற்றும் படி மருத்துவமனை என்று சொல்லுவதற்கு அங்கு என்ன இருக்கோ தெரியவில்லை. அன்பு மணீ கூட வந்திட்டு போயிருக்கார். அவர் பாவம் வெளி நாடுகளிலோ,உள்ளூரிலோ நல்ல மருத்துவம்னையைப் பார்த்திருக்கவே முடியாது. இங்கு குப்பை கொட்டிவிட்டு வரும் மருத்துவ மாணவர்கள் இன்னமும் ஒரு வருசம் மாடு மேய்க்கணுமாம். என்ன கொடுமையடா. முடிஞ்சா ஒரு சுற்றுலா போய்விட்டு வாருங்கள்.
ஆத்தில் மண்ணை அள்ளித் தூர் வாருவாங்கள். வைகையில் ஆத்தோரம் உள்ள பீக்கழிவுகளை ஆத்துக்குள்ளே பரப்புகிறார்கள். வைகைக்கரை மேம்பாலம் எப்போழுது கட்டி முடியும்? சீனாக்காரனின் பொறியியல் அதிசம் என்று யூ டியூப்பில் தேடினால் ஏராளம் வந்து குவியுது. இந்தியாவுக்கு தேடிப் பார்த்தால்…… ரொம்ப சந்தோசம்.
வெள்ளைக்காரன் வராவிட்டால் என்ன நடந்திருக்கும். அவன் போட்ட ரோடு, பாலம், தண்டவாளம், ஆசுப்பத்திரி,கல்லூரி, அணைகள். ரொம்பவே நல்லவங்கடா.