கடந்த இரு தடவைகள் நூலகத்துக்கு சென்ற போதும் இப்புத்தகம் கண்ணில் பட்டது. இருந்தாலும் எடுத்துச் சென்று படிப்பதற்கு எந்த ஓர் உந்துதலும் ஏற்படவில்லை. இந்த வாரமும் எற்றுப் படவே இரவல் வாங்கிச் சென்றேன். வாசிக்க ஆரம்பித்ததும் தொடர்ந்து வாசித்து முடித்தேன்,புத்தகத்தின் தலைப்பு என்னவோ ஒரு மாதிரி இருந்தாலும் உள்ளடக்கம் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. ஒவ்வொரு சிறுகதையும் என்னை மறுபடியும் என்னைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. கண்டிப்பாக ஒவ்வொருத்தரையும் சிந்திக்க வைக்கும்.
எமது குறைபாடே வெளி நடிப்பு. அதிலும் இவ்வாறானதொரு புத்தகத்தை எடுக்கவே அசிங்கப் படுவது. எதுக்கு சும்மா வெளிப்பகடைகள்?
சந்தன சோப்பு. என்னை சேலம் பஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றது. அதில் நான் என்ன மாதிரி நடந்து கொண்டேன் என்று கூனிக் குறுக வைத்தது. கருப்பனார் கிணறு சிரிக்கவும், நோகவும் செய்தது. மஞ்சள் படிவு, கருதாம்பாளை ஒவ்வொன்றும் எனது இனிய குழந்தைப் பருவத்துக்கு இட்டுச் சென்றது. அதிலும் கடைசி இருக்கை என்னையே எனக்கு ஞாபகப் படுத்தியது.
பெருமாள் முருகன் அசத்தி இருக்கின்றார். முடிந்தால் இந்தப் புத்தகத்தை படியுங்கள். இது நூல் விமர்சனம் இல்லை. படியுங்கள் என்று சொல்கிறேன்.