அவன் பெயர் ரங்கன். உழைப்பாளி. நாட்டு நடப்புகளில் தெளிவு கொஞ்சம் குறைவு. முகவும் நல்லவன். அவனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அவன் வேலை செய்யும் முதலாளியின் சித்தப்பா மகளுக்கும் ரங்கனுக்கும் முடிவானது.
கன்னிமொழி. ஊருக்குள் அவள் தான் அழகி. கீறி விட்ட பப்பாசிப் பழம் போல செம்மையான தேகம். அசத்தும் அழகுப் பேழை. கலியாணம் முடிவானதும் இருவருக்கும் இடையில் காதல் கோளாறுகள் தொடங்கின. இரவு, பகல் பனி, மழை பாராமல் கொஞ்சலும், குலுங்கலும் அசர வைத்தன. பச்சைப் பசேலென்று பரவிக் கிடக்கும் வயல் வெளிகளும், மடை திறந்து சலசலத்து ஓடும் ஆற்று நீரும் சலித்துப் போயின. நேரங்காலம் தெரியாமல் வீட்டு வேலிக்கப்பால் கேட்கும் விசில் சத்தம் கன்னிமொழியின் தூக்கத்தை விரட்டி விடும்.
வந்தான் வில்லன். தயா. பெயருக்கும் ஆளுக்கும் சந்தேகப் படும் தொடர்பு. கன்னிமொழியின் அடுத்த வீட்டான். நிறைய நாட்கள் கன்னிமொழியுடன் சொப்பனக் குடும்பம் நடத்தியவன். அவளுக்கும், இளிச்ச வாயனுக்கும் கலியாணமா? அவனுக்கு கொடுத்து வைத்திருக்குது. எனக்கு? முடிவு கள்ளுக் கொட்டகையில் தீர்மானமானது.
திருமணம் ஆகி 2 வருடங்கள் சடுதியாய் கரைந்து போக ஒரு குழந்தையுடன் கனிமொழி குடும்பம் நடத்தினாள்.
தயாவின் உள் அரிப்பு இன்னமும் தீர்ந்த பாடாகவில்லை. ‘டேய் ரங்கா உன் பொண்டாட்டியோட நான் ——-.
போய்ப் பாருடா’.
ரங்கனுக்கு என்னது அடுத்து என்று தெரியவில்லை.வீட்டுக்கு வந்தான். பொண்டாட்டியை கூட்டி அறைக்குள் போனான். கையிலில் விளக்கு. அப்படியே மனைவியின் பாவாடையைத் துக்கி விளக்கு வெளிச்சத்தில் எதையோ முறைத்துப் பார்த்தான். இருக்காது.
கப்பல் கடலில் போனாலும், வயலில் ஆயிரம் கலப்பை கொண்டு உழுதாலும் விளைச்சல் ஒன்று தான்.
ஆரம்பித்தது சனியன். இருவருக்கும் இடையில் இனம் புரியாத ஒரு விலகல். கன்னிமொழி என்ன செய்வாள்? புருசனுக்கோ சந்தேகக் கோடு பெரிதாகிக் கொண்டே போனது. முடிவு வருசத்துக்கு ஒன்றாய் குழந்தைகள். பொண்டாட்டி விட்டுப் போகாமலிருக்க.
அவளுக்கும் உலகம் புரியவில்லை. தன் புருசன் கெட்டிக்காரன். புகுந்து விளையாடுறான் என்ற நினைப்பில் இருந்து விட்டாள்.எல்லாருமே புகுந்து விளயாடுவார்கள் தான் களமமைச்சா என்பது இன்னமும் புரியாமல் அடுத்த குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள்.
//பொண்டாட்டியை கூட்டி அறைக்குள் போனான். கையிலில் விளக்கு. அப்படியே மனைவியின் பாவாடையைத் துக்கி விளக்கு வெளிச்சத்தில் எதையோ முறைத்துப் பார்த்தான். //
அப்படி என்னத்த தான் பார்த்தான்!
பிறகு ஏன் சந்தேகப்பட்டான்!
வருடம் ஒரு குழந்தை வேறு,
ஒன்னும் புரியலையே!
Comment by வால்பையன் — June5, 2009 @ 10:17
இது நடந்த உண்மைச் சம்பவம்.
குழப்பம். அப்படி ஏதாவது நடந்த அடையாளம் இருக்குதா என்று தேடி இருக்கிறான். மனைவி வருடம் ஒரு குழந்தை பெற்றால் அவள் வேறு ஒருவருடனும் போக மாட்டாள் என்பது அவன் எண்ணம்.
//கப்பல் கடலில் போனாலும், வயலில் ஆயிரம் கலப்பை கொண்டு உழுதாலும் விளைச்சல் ஒன்று தான்.//
இது தான் அந்த விளக்கம். ஒவ்வொரு முறையும் என்ன குறியா இடப் படுகின்றது. எண்ணிக்கைக்கு.
Comment by pukalini — June5, 2009 @ 18:09